search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங்க் அகர்வால்
    X
    மயங்க் அகர்வால்

    மயங்க் அகர்வாலுக்கு ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா?

    டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடும் மயங்க் அகர்வாலுக்கு ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மும்பை:

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் மயங்க அகர்வால் மிகவும் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 243 ரன்கள் குவித்த அவரது ஸ்கோரில் 28 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

    டெஸ்ட் போட்டியில் அகர்வாலின் 2-வது இரட்டை சதம் ஆகும். 8 இன்னிங்சில் அவர் 2 இரட்டை சதம் அடித்து சாதித்தார். இதன் மூலம் அவர் பிராட்மேனை முந்தி சாதனை படைத்தார்.

    மேலும் அகர்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 8 சிக்கர்கள் அடித்ததன் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த சித்துவின் சாதனையை சமன் செய்தார்.

    டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடும் மயங்க் அகர்வாலுக்கு ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க வீரர் வரிசையில் விளையாடும் தவானின் ஆட்டம் சமீப காலமாக மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஒருநாள் போட்டிக்கு கொண்டு வரலாம் என்று ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்திய அணி தற்போது வங்காளதேசத்துடன் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீசுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    20 ஓவர் போட்டிகள் டிசம்பர் 6, 8, மற்றும் 11 ஆகிய தேதிகளிலும், ஒரு நாள் போட்டிகள் டிசம்பர் 15, 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானை நீக்கி வீட்டு அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒருவேளை இந்த தொடரில் அணியின் தற்காலிக கேப்டனான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால் அகர்வால் நிச்சயம் இடம் பெறுவார்.

    இந்திய அணி நியூசிலாந்து சென்று ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் அல்லது தவான் இடத்தில் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கபடுகிறது.

    உலக கோப்பை போட்டியில் கடைசி நேரத்தில் விஜய் சங்கருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அனுப்பப்பட்டார். ஆனாலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    உள்ளூர் போட்டி மற்றும் டெஸ்டில் வேகமாக ஆடுவதால் அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க முடியாதவராக இருக்கிறார்.
    Next Story
    ×