என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது.
    ஐசிசி முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

    இதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 29-ந்தேதி நடக்கும் என பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பிசிசிஐ தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும். அதனால் ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.

    ஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    வீரர்கள் வேலைப்பளு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட இருந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தள்ளி வைத்துள்ளது.
    பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இலங்கை, வங்காளதேசம் அணிகள் அங்கு சென்று விளையாடி விட்டன.

    அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா அணியை வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணியும் மார்ச் மாதம் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்பவும் ஏற்பாடு செய்து வந்தது.

    இந்நிலையில் வீரர்கள் எங்கள் நாட்டின் கொடைக்காலத்தில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்களின் வேலைப்பளுவின் காரணமாக மார்ச் மாதம் பாகிஸ்தான் வர இயலாது. தொடரை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடர் தள்ளிப்போகிறது.

    தென்ஆப்பிரிக்கா அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

    அதற்கு பின் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் 18-ந்தேதி முடிவடைகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் மார்ச் 22-ந்தேதி முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையில் நான்கு நாட்கள் இருப்பதால் துபாயில் தங்கிய பின்னர் 22-ந்தேதிக்குப்பின் ராவல்பிண்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணியை அழைக்கலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

    ஆனால் 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். பெரும்பாலான தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் வேலைப்பளுவை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
    நியூசிலாந்து லெவன் அணிக்கெதிராக சதம் விளாசிய ஹனுமா விஹாரி, அணியின் நலனுக்கான எந்த இடத்திலும் களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருபவர் ஹனுமா விஹாரி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மேல்போர்னில் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்பேர்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார்.

    பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் அடிக்காவிடிலும் சுமார் 15 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    ஆனால் இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ஒன்றில் மட்டுமே களம் இறங்கினார். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைப்பது கடினம்.

    இந்நிலையில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாராவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் திணற 6-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்நிலையில் அணியின் நலனுக்காக எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடத் தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஒரு வீரரான எந்த இடத்திலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய என்னை தயார்படுத்தியுள்ளேன். தற்போது நான் எதைப் பற்றியும் கூற இயலாது. நாம் முன்னதாகவே சொன்னதுபோல், அணி என்னை எந்த இடத்தில் இறங்கி பேட்டிங் செய்ய சொல்கிறதோ, அந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்.

    சில நேரங்களில் விளையாட இடம் கிடைக்காத நேரத்தில் அணியின் காம்பினேசனை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் மனதை தளரவிட முடியாது. இந்திய மண்ணில் இந்தியா விளையாடும்போது ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் ஒரு சிறந்த வீரர் வெளியில் இருக்க வேண்டும். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது’’ என்றார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் கவுகாத்தியில் மூன்று போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த அணி ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. இதனால் அந்த அணி ஏழு போட்டிகளை ஜெய்ப்பூரில் விளையாடும்.

    ஆனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் 2020 சீசனில் மூன்று போட்டிகளை கவுகாத்தியில் நடத்த முடிவு செய்தது. அதற்கு ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவும் சம்மதம் தெரிவித்தது.

    இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் ஜெய்ப்பூரில்தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வீசாரணை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது பிசிசிஐ தரப்பில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் விதிமுறையை மீறி ஏதும் செய்யவில்லை. ஐபிஎல் விதிப்படி சொந்த போட்டிகளில் மூன்றை மற்றொரு சொந்த மைதானமாக கருதுவதில் நடத்தலாம் என உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ‘‘வருவாய்க்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட பெரும்பாலான மக்கள் அசாமில் வாழ்கிறார்கள். அவர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க இது ஒருவாய்ப்பாகும்’’ என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான எட்டு போட்டிகளிலும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பாடதது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. ஓரளவிற்கு அனைத்து வீரர்களுக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்த நிலையில் இவருக்கு மட்டுமே இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரிஷப் பண்ட்-ஐ பெஞ்சில் உட்கார வைப்பதற்காக மட்டுமேவா அழைத்துச் சென்றீர்கள்?. நியூசிலாந்து ஏ அல்லது உள்ளூர் போட்டியில் அவர் உண்மையிலேயே தனது திறமையை நிரூபித்திருப்பார்.

    அவரைப் போன்ற திறமையான வீரர்கள் ஐந்து டி20 மற்றும் மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதை பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

    ரிஷப் பண்ட் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வு குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர் கேள்வி எழுப்பியது இதுவே முதல் முறையாகும்.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற அரிய சாதனையை படைக்க இருக்கிறார் ராஸ் டெய்லர்.
    நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர். 35 வயதாகும் இவர் 2006-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நேப்பியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

    சுமார் 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அவருக்கு வெலிங்டனில் வருகிற 21-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 100-வது போட்டியாகும்.

    இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற அரிய வகை சாதனையை படைக்க இருக்கிறார்.

    ராஸ் டெய்லர் 231 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 சதம், 51 அரைசதங்களுடன் 8570 ரன்கள் அடித்துள்ளார். 100 டி20 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் 1909 ரன்கள் அடித்துள்ளார்.

    99 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம், 33 அரைசதங்களுடன் 7174 ரன்கள் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் 100 போட்டிகளில் விளையாடி வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
    ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
    ஐபிஎல் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த அணியில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    நேற்று முன்தினம் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத் தளங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லோகோ திடீரென நீக்கப்பட்டது. இது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அந்த அணியின் சில வீரர்கள் தங்களது கவலையை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் - கிலி தம்பதிகளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். இவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. தற்போது இவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

    இவர் கிலி என்பவரை 7 வருடத்திற்கு முன் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் கெல்சி லீ என்ற பெண் குழந்தை உள்ளது.
    U19 உலக கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர் இந்தியா - வங்காளதேசம் வீரர்கள் மோதியதற்கு கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அந்த அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

    வெற்றிக்கு பிறகு வங்காளதேச வீரர்கள் கொண்டாட்டத்தில் வரம்பு மீறி செயல்பட்டதாக இந்திய கேப்டன் பிரியம் கார்க் குற்றம் சாட்டினார்.

    மேலும் இறுதிபோட்டியின் போது வங்காள தேச பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை உசுப்பேத்தியதாகவும் கூறப்பட் டது. போட்டிக்கு பிறகு இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வங்காளதேச கேப்டன் அக்பர் அலி மன்னிப்பு கேட்டிருந்தார். இது ஒரு துரதிருஷ்டவசமான நிகழ்வு என்று குறிப்பிட்டு இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக இந்திய வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த முகமது தவுகீத், சமீம் உசைன், ரகீபுல் அசன் ஆகிய 5 வீரர்களை எச்சரித்து இருந்தது. 5 பேரும் வீரர்களின் நடத்தை விதிகளை மீறி இருந்தனர்.

    ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இளம் வீரர்கள் மோதிக் கொண்டதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக பாய்ந்துள்ளார். கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பார்கள். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கபில்தேவ் கூறியதாவது:-

    இளம் வீரர்கள் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் பயங்கரமானதாக கருதுகிறேன். கிரிக்கெட் வாரியங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும்.

    போட்டியில் தோற்றுவிட்டால் மைதானத்துக்கு சென்று யாருடனும் சண்டை போட உரிமை இல்லை. இளம் வீரர்கள் என்பதால் அவர்கள் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். புரிந்து கொள்ளமாட்டார்கள். கேப்டனும், மேனேஜரும்தான் இதற்கு பொறுப்பு.

    கிரிக்கெட்டை ஜென்டில்மன் விளையாட்டு என்று கூறுகிறார்கள். இந்த சம்பவங்களை பார்க்கும்போது அது நீண்ட நாட்களுக்கு ஜென்டில்மேன் விளையாட்டாக நீடிக்காது என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா, விஹாரியைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 263 ரன்னில் சுருண்டது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதேபோல ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இரு அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 21-ந் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

    டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து லெவலுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, அகர்வால் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், அகர்வால் ஒரு ரன்னிலும் வெளியேறினார்கள். அடுத்து வந்த புதுமுக வீரர் ஷுப்மான் கில் ரன் எதுவும் எடுக்காமலும், ரகானே 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 38 ரன்னுக்குள் இந்தியா 4 விக்கெட்டை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா - விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதத்தை கடந்தனர். அவர்களது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு முன்னேற்றம் அடைந்தது.

    புஜாரா 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விஹாரி 101 ரன்னில் ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். அப்போது இந்தியா 245 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் வந்த ரிஷப் பண்ட் (7), சகா (0), அஷ்வின் (0) ஜடேஜா (8) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 263 ரன்னில் சுருண்டது. 78.5 ஓவர்கள் வீசப்பட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது. குகலின், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
    77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைகளான ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    சென்னை:

    77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணிக்காக ஆடும் சவுரவ் கோஷல் 11-3, 11-3, 11-1 என்ற நேர் செட்டில் ருத்விக் ராவை (மராட்டியம்) ஊதித்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறினார். அபய்சிங், ஹரிந்தர் பால்சிங் சந்து (2 பேரும் தமிழகம்), அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) ஆகியோரும் அரையிறுதியை எட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-4, 11-2, 11-4 என்ற நேர் செட்டில் சச்சிகா பல்வானியை (மகாராஷ்டிரா) வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா தன்னை எதிர்த்த சனிகா சவுத்ரியை 11-5, 11-2, 12-10 என்ற நேர் செட்டில் சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தமிழகத்தின் அபரஜிதா 5-11, 3-11, 8-11 என்ற நேர் செட்டில் தன்வி கன்னாவிடம் (டெல்லி) வீழ்ந்தார்.

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    லாசானே:

    தேசிய விளையாட்டு சங்கத்தினர், ஊடகத்தினர், ரசிகர்கள், வீரர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மன்பிரீத்சிங் 35.2 சதவீத வாக்குகள் பெற்று விருது பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு போட்டியாக இருந்த ஆர்தர் வான் டோரன் (பெல்ஜியம்) 19.7 சதவீத வாக்குகளும், லுகாஸ் வில்லா (அர்ஜென்டினா) 16.5 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

    இந்த விருது 1999-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கவுரவமிக்க இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை மன்தீப்சிங் பெறுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய 27 வயதான நடுகள வீரரான மன்பிரீத்சிங் இதுவரை 260 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கிறார். 2012 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் பங்கேற்றுள்ளார்.
    ×