search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் ராயல்ஸ்
    X
    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் விதிமுறைக்கு மாறாக ஏதும் செய்யவில்லை: பிசிசிஐ

    ராஜஸ்தான் ராயல்ஸ் கவுகாத்தியில் மூன்று போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த அணி ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. இதனால் அந்த அணி ஏழு போட்டிகளை ஜெய்ப்பூரில் விளையாடும்.

    ஆனால் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் 2020 சீசனில் மூன்று போட்டிகளை கவுகாத்தியில் நடத்த முடிவு செய்தது. அதற்கு ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவும் சம்மதம் தெரிவித்தது.

    இந்நிலையில் அனைத்து போட்டிகளையும் ஜெய்ப்பூரில்தான் நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வீசாரணை கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது பிசிசிஐ தரப்பில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் விதிமுறையை மீறி ஏதும் செய்யவில்லை. ஐபிஎல் விதிப்படி சொந்த போட்டிகளில் மூன்றை மற்றொரு சொந்த மைதானமாக கருதுவதில் நடத்தலாம் என உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ‘‘வருவாய்க்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட பெரும்பாலான மக்கள் அசாமில் வாழ்கிறார்கள். அவர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க இது ஒருவாய்ப்பாகும்’’ என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×