என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லிவர்பூல் அணியை தோற்க வையுங்கள் என்று மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 10 வயது ரசிகன் எழுதிய கடிதத்திற்கு க்ளோப் பதில் அளித்துள்ளார்.
    இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. யூரோ சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பெரும்பாலான கோப்பைகளை வென்றுள்ளது. 2019-20 இங்கிலிஷ் பிரிமீயர் லீக்கில் இதுவரை 26 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. ஒரு போட்டியை மட்டுமே டிரா செய்தது. இதன்மூலம் 76 புள்ளிகள் பெற்றுள்ளது

    மான்செஸ்டர் சிட்டி 57 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. லிவர்பூல் இன்னும் 12 போட்டிகளில் விளையாட உள்ளது. லிவர்பூல் ஏறக்குறைய இங்கிலிஷ் பிரிமீயர் லீக் சாம்பியன் படத்தை நெருங்கிவிட்டது.

    நட்சத்திர அணியான மான்செஸ்டர் யுனைடெட் 27 போட்டிகளில் 11 வெற்றி, தலா 8 தோல்வி மற்றும் டிராவுடன் 41 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை.

    இதனால் விரக்தியடைந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் 10 வயது ரசிகன் டாராக் கர்லே ரிவர்பூல் அணியின் பயிற்சியாளரான ஜுர்கென் க்ளோப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் லிவர்பூல் அணியை தோற்கடியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    க்ளோப்புக்கு 10 வயது சிறுவன் டாராக் கர்லே எழுதிய கடிதத்தில் ‘‘நீங்கள் இன்னும் 9 போட்டிகளில் வெற்றி பெற்றால், இங்கிலிஷ் கால்பந்தில் தோற்கடிக்க முடியாத சிறந்த அணி என்ற சாதனையை படைத்து விடுவீர்கள். இது எனக்கு மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

    ஆகவே, அடுத்த போட்டியின்போது லிவர்பூல் அணியை தோற்கடிக்க வையுங்கள். நீங்கள் எதிரணியை கோல் அடிக்க விடவேண்டும். லீக் சாம்பியன் அல்லது வரவிருக்கும் எந்தவொரு போட்டியையும் வெல்லக்கூடாது என்ற நினைப்புக்கு உங்களை மாற்றிவிட்டதாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்தக் கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிவர்பூல் பயிற்சியாளர் ஜுர்கென் க்ளோப், அந்த சிறுவக்கு பதில் அளித்துள்ளார். க்ளோப் தனது பதிலில் ‘‘இந்த சூழ்நிலையில் நான் உனது வேண்டுகோளை ஏற்க முடியாதது துரதிருஷ்டவசமானது.

    நீ லிவர்பூல் அணி தோல்வியடைய வேண்டும் என விரும்புகிறாய். ஆனால் என்னால் அந்த அணியை வெற்றி பெற வைக்க முடியும் என உலகில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆகவே, அணியை உண்மையிலேயே தோற்க வைக்க நான் விரும்புவதில்லை.

    உன்னுடைய அதிர்ஷ்டம் என்னவென்றால், நாங்கள் கடந்த காலத்தில் தோற்றுள்ளோம். வருங்காலத்திலும் தோற்போம். ஏனென்றால் இது கால்பந்து.

    10 வயது என்பதால் உங்களுக்கு இதுபோன்ற சிந்தனை வருகிறது. ஆனால், 52 வயதில் இதுபோன்ற சிந்திக்க முடியாது என்பதை மட்டும் என்னால் கூற முடியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ஸ்பால் அணிக்கெதிராக விளையாடியதன் மூலம் ஆயிரமாவது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
    கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ‘செரி ஏ’ லீக்கில் ஸ்பால் அணிக்கெதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது.

    39-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இந்த போட்டி அவருக்கு ஆயிரமாவது போட்டியாகும். மேலும் இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் செர்ரி ஏ லீக்கில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த சீசனில் இதுவரை 21 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் குவாகிலியேரெல்லா (சம்ப்டோரியா), பாடிஸ்டுடா (பியோரென்டினா கிளப் 1994-95) ஆகியோர் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்துள்ளனர்.
    டாக்காவில் நடைபெற இருக்கும் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளில் விராட் கோலி கலந்து கொள்ள வேண்டும் என பிசிபி விருப்பம் தெரிவித்துள்ளது.
    வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜுபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

    ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும் மார்ச் 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதிக்குள் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ஆசிய லெவன் அணியில் விராட் கோலி இடம் பிடிக்க வேண்டும். இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என பிசிசிஐ பதில் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் இருந்து நான்கு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘‘நாங்கள் அந்த நான்கு வீரர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நான்கில் இருந்து ஐந்து வீரர்களை அனுப்புவோம்’’ என்றார்.

    இந்தியா நியூசிலாந்து தொடரை மார்ச் 4-ந்தேதியுடன் முடித்துக் கொண்டு இந்தியா வருகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா தொடர் 18-ந்தேதிதான் முடிவடைகிறது.

    18-ந்தேதி டாக்காவில் போட்டி தொடங்கினால் விராட் கோலியால் பங்கேற்க முடியாது.
    வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சால் 2-வது டி20-யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்தது தென்ஆப்பிரிக்கா. தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேப்டன் குயின்டான் டி காக் ரன் மழை பொழிந்தார்.

    ஆஸ்திரேலிய பந்து வீச்சை துவம்சம் செய்த அவர் 47 பந்துகளில் 70 ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். அவர் களத்தில் நின்றது வரை அந்த அணியின் ஸ்கோர் 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. அவர் வெளியேறியதும் ரன்வேகம் குறைந்தது. மிடில் வரிசையில் வான்டெர் துஸ்சென் (37 ரன்) மட்டும் கணிசமான பங்களிப்பை அளித்தார். முன்னாள் கேப்டன் டு பிளிஸ்சிஸ் 15 ரன்னில் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் இறங்கினர். பிஞ்ச் 14 ரன்னில் க்ளீன் போல்டு ஆனார். இதன் பின்னர் வார்னருடன், ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்தபோது ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிப்பது போலவே தெரிந்தது. ஸ்கோர் 98 ரன்களை (12.3 ஓவர்) எட்டிய போது ஸ்டீவன் ஸ்மித் 29 ரன்களில் (26 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

    இதன பின்னர் ஆஸ்திரேலிய அணி நெருக்கடிக்குள்ளானது. கைவசம் விக்கெட் இருந்தும் அதுவும் ‘அதிரடி மன்னன்’ வார்னர் களத்தில் நின்றும், தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 6 ரன்னிலும், மேத்யூ வேட் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

    கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே, ஆஷ்டன் அகரின் (1 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதோடு 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை நோக்கி ஆடும்போது டேவிட் வார்னர் (67 ரன், 56 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றும், ஆஸ்திரேலிய அணி தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும். தென்ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகளும், ரபடா, நார்ஜே, பிரிடோரியஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வெற்றியையடுத்து 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 26-ந்தேதி கேப்டவுனில் நடக்கிறது.
    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது.
    இந்திய அணி கடைசியாக 2018-19 ஆஸ்திரேலிய பயணத்தின் போது பெர்த் டெஸ்டில் (டிசம்பர் மாதம்) 146 ரன்னில் தோற்றது. தற்போது 13 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் தோல்வியை தழுவியுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் அறிமுகமானது.

    இதில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) தொடர்களை கைப்பற்றியது. 7 டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது.

    தனது 8-வது டெஸ்டில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளது. இந்தியா 7 வெற்றி, 1 தோல்வியுடன் 360 புள்ளிகள் பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 2 வெற்றி, 4 தோல்வியுடன் 120 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    ஆஸ்திரேலியா (296), இங்கிலாந்து (146), பாகிஸ்தான் (140) ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 4-வது இடங்களில் உள்ளன.

    இலங்கை 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 8-வது இடத்திலும், வங்காளதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கால் பின்னடைவு அடைந்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    வெலிங்டன்:

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் நாங்கள் ‘டாசில்’ தோற்றோம். ‘டாஸ்’ மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அதே நேரத்தில் பெருமை அளிக்க கூடிய வகையில் பேட்டிங் வரிசை இருக்காது. நாங்கள் சவால் கொடுக்கும் வகையில் போதுமான அளவுக்கு ஆடவில்லை.

    பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. 220-230 ரன்களை எடுத்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

    எனவே முதல் இன்னிங்சில் மோசமான பேட்டிங் பின்னடைவை ஏற்படுத்தியது.

    பந்து வீச்சில் நாங்கள் சவால் விடும் வகையில் திகழ்ந்தோம். நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்தது வரை நாங்கள் நன்றாகவே திகழ்ந்தோம். முன்னிலையை 100 ரன்களாக கொண்டுவர நினைத்தோம். ஆனால் கடைசி 3 வீரர்கள் பேட்டிங் எங்களை வெளியேற்றி விட்டது. பந்து வீச்சாளர்கள் இன்னும் கட்டு கோப்புடன் வீசி இருக்க வேண்டும். பவுலர்களும் தங்கள் பந்து வீச்சில் மகிழ்ச்சி அடைந்து இருக்க மாட்டார்கள்.

    பிரித்விஷா போன்றவர்களை குறை சொல்ல வேண்டாம். 2 வெளிநாட்டு டெஸ்டுகளில் தான் ஆடியுள்ளார். ரன்களை எடுப்பது எப்படி என்று அவர் மேம்பட்டு வருகிறார்.

    பேட்டிங்கில் அகர்வால். ரகானேவை தவிர மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கி மிகப் பெரிய ஸ்கோரை குவித்தால் தான் பந்து வீச்சாளர்கள் சவால் கொடுக்க முடியும். இதுதான் நமது பலம், இந்த டெஸ்டில் இந்த அம்சம் இல்லாமல் போனது.

    இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தோல்வியால் உலகமே முடிந்து போய் விடவில்லை. நாங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று இருக்கிறோம்.

    வெளிநாடுகளில் விளையாடும் போது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

    நான் நன்றாக இருக்கிறேன். எனது பேட்டிங சிறப்பாகவே இருக்கிறது. ரன்களை குவிக்காததால் எனது பேட்டிங் திறன் பாதிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நியூசிலாந்து பயணத்தில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ஓவர் போட்டிகளில் 45, 11, 38, 11, ஒருநாள் ஆட்டங்களில் 51, 15, 9, இந்த டெஸ்டில் 2 மற்றும் 19 ரன்கள் எடுத்தார்.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று மோதுகிறது.
    பெர்த்:

    பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் சல்மா கதுன் தலைமையிலான வங்காளதேச அணியை பெர்த்தில் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ள இந்திய அணி, வங்காளதேசத்துக்கு எதிராகவும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீராங்கனை வேதாகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் மெத்தனமாக இருந்து விடாமல், வங்காளதேசத்துக்கு எதிராகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது போதுமான ஸ்கோர் குவிக்க வேண்டும். அப்போது தான் எங்களது பந்து வீச்சாளர்களின் சிரமத்தை குறைக்க முடியும். இதை உறுதி செய்யும் வகையில் விளையாட வேண்டும்.’என்றார்.

    வங்காளதேச கேப்டன் சல்மா கதுன் கூறுகையில், ‘இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின் முடிவு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயாராவதில் கவனம் செலுத்துகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் எங்களது வீராங்கனைகள் 100 சதவீத பங்களிப்பை அளித்தனர். இதே போல் இந்த உலக கோப்பை தொடரை நல்லவிதமாக தொடங்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் இந்தியாவும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக இதே மைதானத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
    முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
    வெலிங்டன்:  

    நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. 

    இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதன் மூலம் நியூசிலாந்து அணியை விட இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் சவுதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அவுட் ஆகி வெளியேறும் இந்திய வீரர் பந்த்

    இதையடுத்து, 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 1.4 ஓவரிலேயா வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. 

    இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். 

    இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தில் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    வெலிங்டன்: 

    நியூசிலாந்து-இந்தியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. 

    இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

     பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் சவுதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனால் நியூசிலாந்து அணி வெறும் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுலபமான இலக்கை எளிதில் அடைந்து நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளி கணக்கில், கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
    புதுடெல்லி:

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்ட இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் (74 கிலோ உடல் எடைப்பிரிவு) மங்கோலியா வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்கான இந்திய அணியிலும் இடத்தை உறுதி செய்தார். ஆனால் இறுதி ஆட்டத்தில் ஜிதேந்தர் 1-3 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றதால் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. மற்ற இந்திய வீரர்களான தீபக் பூனியா (86 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

    இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கம் உள்பட 20 பதக்கங்களை குவித்து தனது சிறந்த ஆசிய சாம்பியன்ஷிப்பாக மாற்றி இருக்கிறது.
    ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டத்தில் கோவாவை 464 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது குஜராத்.
    ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டம் ஒன்றில் குஜராத் - கோவா அணிகள் மோதின. கோவா அணிக்கு 629 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத். ஆனால் கோவா 164 இன்னிங்சில் சுருண்டதால் குஜராத் 464 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தேசாய் 5 விக்கெட்டும், அர்ஜான் நக்வாஸ்வல்லா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    குஜராத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. பின்னர் கோவா முதல் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. குஜராத் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு டார்கெட்டை நிர்ணயிப்பது இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே (25) மற்றும் ஹனுமா விஹாரி (15) ஆகியோர் களத்தில் உள்ளனர். இதுவரை இந்தியா 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    ஆடுகளம் பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் கைவசம் ஆறு விக்கெட்டுகளை வைத்துள்ள இந்தியா சவால் கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணிக்கு டார்கெட் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டார்கெட் நிர்ணயம் செய்வது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் எவ்வளவு ரன்கள் இருந்தால் நான்காவது இன்னிங்சில் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடியும் என்று கேட்கிறீர்கள். இன்னும் ஆறு செசன் இருக்கிறது. பாதுகாப்பிற்கான சிறந்த ஸ்கோர் எது என்பதை நாங்கள் சொல்லும் இடத்தில் இல்லை.

    அதற்கான வெகுதூரத்தில் நாங்கள் உள்ளோம். ஆடுகளம் இன்னும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் உள்ளது. எவ்வளவு ஸ்கோர் அடித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய இடத்திற்கு இன்னு நாங்கள் வரவில்லை.

    நாங்கள் ஒவ்வொரு செசன், ஒவ்வொரு மணி நேரம் என எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் குறைந்த அளவு ஸ்கோரை எங்களால் நிர்ணயிக்க முடியும். ரகானே, விஹாரி சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் இதே நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமானது. விக்கெட் எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் நிர்ணயிப்பார்கள்’’ என்றார்.
    ×