என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க போட்டியில் வெற்றி பெற்றன.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தாய்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய தாய்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்களே அடித்தது. விக்கெட் கீப்பர் கோன்சாரோயென்கை அதிகபட்சமாக 33 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 127 ரன்கள் சேர்த்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் கேப்டன் சோபி டெவைன் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் விளாசினார்.
    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 144 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ஆல்-அவுட். இஷாந்த் சர்மா 5 விக்கெட் மயங்க் அகர்வால் 58 ரன்கள் சேர்ப்பு விராட் கோலி(19), புஜாரா (11) ஏமாற்றம்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 165 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.  கிராண்ட் ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பிரித்வி ஷா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா நீண்ட நேரம் விளையாடினார். ஆனால் அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை. அவர் 81 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தா்ர. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். என்றாலும் 58 ரன்னில் வெளியேறினார்.

    முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது இந்தியா 113 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐந்தாவது விக்கெட்டுக்கு ரகானே உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காத வண்ணம் பார்த்துக் கொண்டது. இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ரகானே- விஹாரி ஜோடி சிறப்பான விளையாடி 100 ரன்களுக்கு மேல் குவித்து ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் பொறுப்புடன் விளையாடினால் இந்திய போராட வாய்ப்புள்ளது. இல்லையெனில் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
    டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார் விராட் கோலி.
    வெலிங்டன்:

    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. 

    போட்டியின் மூன்றாம் நாளான இன்று விராட் கோலி 11 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை முந்தினார். அவர் 7,223 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்த பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, ராகுல் டிராவிட் 13,265 ரன்களுடனும், சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடனும், விவிவி எஸ்.லட்சுமண் 8,781 ரன்களுடனும், சேவாக் 8,503 ரன்களுடனும் உள்ளனர். விராட் கோலியை தொடர்ந்து சவுரவ் கங்குலி 7,212 ரன்களுடன் உள்ளார்.
    வெல்லிங்டன் டெஸ்டில் வில்லியம்சன், கிராண்ட்ஹோம், ஜாமிசன், போல்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்துள்ளது.
    வெலிங்டன்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. 
     
    நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
    நியூசிலாந்து சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் வில்லியம்சன் 89 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர். 

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கிராண்ட்ஹோம் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்ட வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஜாமிசன் 44 ரன்னும், போல்ட் 38 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

    இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார்.
    புதுடெல்லி:

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா மற்றும் தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோ மோதினர்.

    இதில் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் தாஹியா தங்கப்பதக்கம் வென்றார்.

    இதேபோல், இன்று நடந்த ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் ஜப்பானின் டகுடோ ஒட்டாகுரோ விளையாடினர்.

    இந்த போட்டியில் கடுமையாக போராடிய பூனியா, ஒட்டாகுரோவிடம் தோற்றுப் போனார்.  இதனால் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

    நேற்று நடந்த பெண்கள் பந்தயத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    கொழும்பு:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இதில், கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சேஸ் 41 ரன்னும், பிராவோ 39 ரன்னும், கீமோ பால் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் உதானா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்னாண்டோ, கருணரத்னே சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இருவரும அரை சதமடித்து அசத்தினர்.

    பெர்னாண்டோ 50 ரன்னிலும், கருணரத்னே 52 ரன்னிலும், குசால் பெராரா 42 ரன்னிலும், திசாரா பெராரா 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் போராடிய ஹசரங்கா 42 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், இலங்கை அணி  49.1 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், கீமோ பால், வால்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    ஜோகனஸ்பெர்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.
    ஜோகனஸ்பெர்க்:

    ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் ஆடியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 42 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 45 ரன்னிலும் அவுட்டாகினர்.
    இறுதியில், ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ஷம்சி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் சிக்கி மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    குறிப்பாக, ஆஷ்டன் அகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் 5 விக்கெட்டுகளையும் அள்ளினார். பாட் கம்மின்ஸ், சம்பா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 14.3 ஓவரில் 89 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 107 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணியின் முதல் இன்னிங்சை விட நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    வெலிங்டன்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.  ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. 

    இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரிஷப் பன்ட் 19(53 பந்துகள்) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ரன்களும், இஷாந்த் சர்மா 5(23) ரன்களும், முகமது சமி 21(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் தரப்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். லாதம் 11ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய புளுண்டேல் 30 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 89 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். 

    ராஸ் டெய்லர் 44 ரன்கள், ஹென்றி நிக்கோல்ஸ் 17 ரன்கள் என அவர்களின் பங்களிப்பை செய்ய, இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர். 

    இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    புதுடெல்லி:

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பந்தயத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (65 கிலோ பிரிவு), ஜப்பானின் நவோமி ருகேவை எதிர்கொண்டார்.

    எதிராளியை அடக்குவதில் தடுமாறிய சாக்‌ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று. மற்ற இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), குர்ஷரன் பிரீத் கவுர் (72 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை வென்றனர். மொத்தத்தில் 3 தங்கம் உள்பட 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இதுவே சிறந்த செயல்பாடாக பதிவாகியுள்ளது.

    புரோ லீக் ஹாக்கி தொடரில் புவனேசுவரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
    புவனேசுவரம்:

    9 அணிகள் இடையிலான புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டியது. இதில் இந்திய அணியின் தடுப்பு அரணை உடைத்தெறிந்த ஆஸ்திரேலியாவின் கை ஆரம்பத்திலேயே பலமாக ஓங்கியது. டைலன் வோதர்ஸ்பூன் (6-வது நிமிடம்), டாம் விக்ஹாம் (18-வது நிமிடம்), லாச்லன் ஷார்ப் (41-வது நிமிடம்), ஜாக்கப் ஆண்டர்சன் (42-வது நிமிடம்) ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடித்தனர். இதற்கு மத்தியில் இந்திய வீரர் ராஜ்குமார் பால் 36-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார்.

    ஒரு கட்டத்தில் இந்தியா 1-4 என்ற கோல் கணக்கில் மோசமாக பின்தங்கி இருந்தது. கடைசி கட்டத்தில் ராஜ்குமார் பால் (47-வது நிமிடம்), ருபிந்தர்சிங் (52-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல் போட்டு ஆறுதல் அளித்தனர். முடிவில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இன்று மீண்டும் இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்” ஆனது.
    வெலிங்டன்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.  ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் களம் இறங்கினர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சுடன் கூடிய தாக்குதலை தொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். டிம் சவுதியின் பவுலிங்கில் பிரித்வி ஷா (16 ரன்) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

    அடுத்துகளமிறங்கிய புஜாரா (11 ரன், 42 பந்து) விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் விராட் கோலியும் 2 ரன்னில்( 7 பந்து) வெளியேறினார். இதன் பின்னர் துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவுடன், மயங்க் அகர்வால் ஜோடி 88 ரன்களை எட்டிய போது, அகர்வால் 34 ரன்களில் (84 பந்து, 5 பவுண்டரி) ஷாட் பிட்ச் பந்தை அடித்த போது கேட்ச் ஆகிப்போனார். ஹனுமா விஹாரியும் (7 ரன்) சோபிக்கவில்லை. இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்னுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இரண்டாவதுநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரிஷாப் பண்ட் 19(53 பந்துகள்) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ரன்களும், இஷாந்த் சர்மா 5(23) ரன்களும், முகமது சமி 21(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை வீரர் லூசியன் கோயன் அதிரடி கோல் அடித்தார். இதனால் மும்பையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
     
    இந்நிலையில், மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் கடைசி கட்டத்தில் 83-வது நிமிடத்தில் சென்னை அணியின் லுசியன் கோயன் சிறப்பாக ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரை இறுதியில் நுழைந்தது.

    சென்னை அணி தாங்கள் விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி, 4 டிரா என மொத்தம் 28 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
    ×