என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை வீரர் லூசியன் கோயன் அதிரடி கோல் அடித்தார். இதனால் மும்பையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது சென்னை
    மும்பை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய ஒரு இடத்துக்கு சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
     
    இந்நிலையில், மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் கடைசி கட்டத்தில் 83-வது நிமிடத்தில் சென்னை அணியின் லுசியன் கோயன் சிறப்பாக ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அரை இறுதியில் நுழைந்தது.

    சென்னை அணி தாங்கள் விளையாடிய 17 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வி, 4 டிரா என மொத்தம் 28 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
    இந்திய வீரர் அஜய் ஜெயராம் 62-ம் நிலை வீரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் பிரான்சை சேர்ந்த 62-ம் நிலை வீரரான தாமஸ் ரோக்சலை எதிர்கொண்டார்.

    இதில் 21-14, 21-15 என நேர்செட் கணக்கில் அஜய் ஜெயராம் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    வெலிங்டன் பேசின் ரிசர்வ் போன்ற கடினமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு இந்த நினைப்பு மட்டும் வரவேக்கூடாது என்கிறார் மயங்க் அகர்வால்.
    வெலிங்டனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். மதிய உணவு இடைவேளை 38 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 3 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    மயங்க் அகர்வால் 29 ரன்களுடனும், ரகானே 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோரின் ஸ்விங், கைல் ஜேமிசனின் பவுன்சர் பந்துகளை மயங்க் அகர்வால் நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

    விராட் கோலி அவுட்டாகும்போது 40 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்தார். ரகானே வந்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். மதிய உணவு இடைவேளையின்போது 67 பந்தில் 29 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி 20 ரன்களை 27 பந்தில் எடுத்திருந்தார். ரகானே 34 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்த நம்பிக்கையில் உணவு இடைவேளைக்குப்பின்னும் விளையாட விரும்பினார். இதனால் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை லேசாக திரும்பி புல்ஷாட் அடித்தார். ஆனால் பந்து லாங் லெக்கில் நின்ற ஜேமிசன் கையில் புகுந்தது. 84 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்குப்பின் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    அதன்பின் ரகானே தேனீர் இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடி 122 பந்தில் 38 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். மயங்க் அகர்வால் தேவையில்லாமல் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்டம் வேறுமாதிரி இருந்திருக்கும்.

    இந்நிலையில் இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் ‘செட்’டாகி விட்டோம் என்ற எண்ணம் மட்டும் வந்துவிடக் கூடாது என்று மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மயங்க் அகர்வால் கூறுகையில் ‘‘இங்கு விளையாடும்போது வழக்கத்திற்கு மாறாக காற்று அதிகமாக வீசும்போது ஆடுகளம் மிகவும் கடினமாகி விடுகிறது என நினைக்கிறேன். அதற்கு ஏற்றபடி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக அது எளிதானது அல்ல. குறிப்பாக இதுபோன்ற ஆடுகளத்தில் முதல் நாள் விளையாடுவது கடினம்.

    ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் செட்டாகி விட்டோம் என்று நினைக்க முடியாது. ஏனென்றால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூட கொஞ்சம் கூடுதலாக ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. கைல் ஜேமிசன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். அவர் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அதேபோல் அவர் நேர்த்தியான வகையில் பவுன்சர் பந்துகளை வீசினார். அவர் புது பந்தை பயன்படுத்திய விதம் அற்புதமானது’’ என்றார்.
    ஜம்மு-காஷ்மீர் - கர்நாடகா இடையிலான 2-ம் நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில் குஜராத் முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. பெங்கால் - ஒடிசா இடையிலான ஆட்டத்தில் பெங்கால் முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்திருந்தது. மஜும்தார் 136 ரன்னுடனும், ஷபாஸ் அகமது 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார் 157 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் ஷபாஸ் அகமது நேற்றைய ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த இருவரும் உடனடியாக வெளியேற பெங்கால் முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இன்று 24 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

    பின்னர் ஒடிசா முதல் இன்னிங்சை தொடங்கியது தொடக்க வீரர் சாந்தனு மிஷ்ரா 62 ரன்களும், அடுத்து வந்த சமந்த்ரே 68 ரன்களும் அடித்தனர். இருவரின் அரைசதத்தால் ஒடிசா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

    குஜராத் - கோவா இடையிலான போட்டியில் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 அடித்திருந்தது. பார்தீவ் பட்டேல் 118 ரன்களுடனும், காந்தி 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பார்தீவ் பட்டேல் 124 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். காந்தி 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கலேரியா ஆட்டமிழக்காமல் 118 ரன்களும், அக்சார் பட்டேல் 80 ரன்களும் அடிக்க குஜராத் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் ஒடிசா முதல் இன்னிங்சை தொடங்கியது. கோவா அணியின் தொடக்க வீரர்கள் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பட்டேல் (15), அமித் வர்மா (31) மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள கோவா 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

    சவுராஷ்டிரா - ஆந்திரா இடையிலான ஆட்டத்தில் சவுராஷ்டிரா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. ஜானி 53 ரன்னுடனும், மன்கட் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜானி சிறப்பாக விளையாடி 121 ரன்கள் குவித்தார். மன்கட் 80 ரன்கள் அடிக்க சவுராஷ்டிரா 419 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் ஆந்திரா முதல் இன்னிங்சை தொடங்கியது. 22 ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஞானேஸ்வரன் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    கர்நாடகா - ஜம்மு-காஷ்மீர் இடையிலான ஆட்டத்தின் முதல் நாளில் கர்நாடகா 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழையால் மைதானம் மோசமாகியிருந்ததால் இன்று ஒன்று பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
    அறிமுக போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார் கைல் ஜேமிசன்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. தேனீர் இடைவேளை வரை மட்டுமே நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 122 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து அணியில் அறிமுகம் ஆகியுள்ள உயரமான பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன்தான். இவர் புஜாரா (11), விராட் கோலி (2), விகாரி (7) ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம் என்று கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கைல் ஜேமிசன் கூறுகையில் ‘‘முதல் நாள் ஆட்டத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அணியின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். அவர்களுடைய பேட்டிங் வரிசைக்கு அவர்தான் முக்கிய துருப்புச்சீட்டு. அவரை முன்னதாகவே வீழ்த்தியது எங்களுக்கு மிகப்பெரிய தருணம்.

    புஜாரா உள்பட முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை முன்னதாகவே வீழ்த்தும்போது வெளிப்படும் எமோசன் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    உலகின் எல்லா இடங்களிலும் ரன்கள் குவிப்பவர் விராட் கோலி. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலி திணறுவார் என்ற ஒரே திட்டத்துடன் சென்றால் அது புத்திசாலித்தனமாக இருக்காது. ஆடுகளம் எப்படி ஒத்துழைக்கிறதோ, அதற்கு ஏற்ப திட்டம் தீட்டி அவரை விளையாட வைக்க விரும்புவோம். ஸ்டம்பில் வீசம் பந்தை எதிர்கொள்வதில் அவர் வல்லவர். நான் முதலில் சற்று திணறினேன். அதன்பின் சமாளித்து பந்து வீசிய சிறப்பானது’’ என்றார்.
    சிட்னியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று சிட்னியில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஷஃபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினர். ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 15 பந்தில் 29 ரன்கள் விளாசினார். மந்தனா 11 பந்தில் 10 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் குவிக்க இந்திய வீராங்கனைகள் திணறினர். ரோட்ரிக்ஸ் 33 பந்தில் 26 ரன்களும், தீப்தி ஷர்மா 46 பந்தில் 49 ரன்களும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி ஒருபக்கம் நிலைத்து நிற்க பெத் மூனி 6 ரன்னிலும், கேப்டன் லானிங் 5 ரன்னிலும், ஹெய்னஸ் 6 ரன்னிலும் வெளியேறினர்.

    அலிசா ஹீலி 35 பந்தில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கார்ட்னர் கடைசி வரை அணியின் வெற்றிக்கு போராடினார். ஆனால் மற்ற வீராங்கனைகளின் ஆதரவு கிடைக்காததால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கி சென்றது. கார்ட்னர் 36 பந்தில் 34 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்திய வீராங்கனைகளில் பூனம் யாதவ் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷிகா பாண்டே 3.5 ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய பூனம் பாண்டு ஆட்ட நாயகி விருதை பெற்றார்.
    கராச்சியில் நேற்று தொடங்கிய பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தியது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கராச்சியில் நேற்று தொடங்கியது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குவெட்டா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இஸ்லாமாபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் பந்தை சந்தித்த கொலின் முன்றோ பந்து வீச்சாளர் முகமது நவாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரோஞ்சி 23 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து வந்த தாவித் மலன் 40 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஆஷிப் அலி 13 பந்தில் 19 ரன்களும், பஹீம் அஷ்ரப் 8 பந்தில் 20 ரன்களும் அடிக்க இஸ்லாமாபாத் யுனைடெட் 19.1 ஓவரில் 168 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. குவெட்டா அணியின் முகமது ஹஸ்னைன் நான்கு விக்கெட்டும், பென் கட்டிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி களம் இறங்கியது. ஜேசன் ராய் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வாட்சன் 15 ரன்னிலும், அகமது ஷேசாத் 7 ரன்னிலும், சர்பராஸ் அகமது 21 ரன்னிலும் வெளியேறினார்.

    அடுத்து வந்த அசாம் கான் 33 பந்தில் 59 ரன்கள் விளாசினார். முகமது நவாஸ் 13 பந்தில் 23 ரன்களும், பென் கட்டிங் ஆட்டமிழக்காமல் 12 பந்தில் 22 ரன்களும் அடிக்க குவெட்டா அணி 18.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய முகமது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் முகமது ஹஸ்னைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
    மனோஜ் பிரபாகருக்குப் பிறகு (1990-ம் ஆண்டு) நியூசிலாந்துக்கு எதிராக முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடி சாதனைப் படைத்துள்ளார் மயங்க் அகர்வால்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. ஆடுகளம் பச்சைபசேல் போன்று காட்சியளித்தது. இதனால் டாஸ் வென்றதும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் யோசிக்காமல் பந்து வீசு்சை தேர்வு செயத்து.

    இந்திய அணி புதுப்பந்தில் நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 16  ரன்னிலும், அடுத்து வந்த பஜாரா 11 ரன்னிலும்ம, விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஆனால், தொடக்க வீரர்  மயங்க் அகர்வால் பொறுமையாக விளையாடினார். இதனால் முதல்நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது மயங்க் அகர்வால் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

    இதன்மூலம் 30 வருடத்திற்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வல் பெற்றுள்ளார். 1990-ல் மனோஜ் பிரபாகர் முதல் செசன் முழுவதும் விளையாடியிருந்தார. அதன்பின் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மயங்க் அகர்வால் தாக்குப்பிடித்து விளையாடியுள்ளார்.

    மதிண உணவு இடைவேளைக்குப்பின் விளையாடிய அவர் 84 பந்தில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    33 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பிரக்யான் ஓஜா. 33 வயதாகும் இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அந்த போட்டியில்தான் ஓஜா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார்.

    முதல் தர கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டு பீகார் அணிக்காக விளையாடினார். அதன்பின் ஓஜா கிரிக்கெட் விளையாடியது கிடையாது. ஐபிஎல் டி20 லீக்கில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
    ஐபிஎல் தொடருக்கு முன் மார்ச் 25-ந்தேதி ஆல் ஸ்டார் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்த நிலையில் அணிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டு வீரர்களுடன் இந்திய வீரர்கள் இணைந்து ஆடுவது, ஏலம் முறையில் வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாயில் எடுக்கப்படுவது ஆகியவற்றால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

    13-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளிலும் இருக்கும் நட்சத்திர வீரர்களை கொண்டு ஆல் ஸ்டார் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த போட்டி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். அணியின் நிர்வாகிகள் திடீரென ஆல் ஸ்டார் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஐ.பி. எல். அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு அனைத்து நட்சத்திர வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஆல் ஸ்டார் போட்டியை மார்ச் 25-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வாறு நடத்தும்போது முதல் நாளே அனைத்து வீரர்களும் அங்கு வரவேண்டும்.

    ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா

    அதன் பிறகு போட்டியை முடித்து விட்டு 26-ந்தேதி செல்ல வேண்டும். 29-ந்தேதி ஐ.பி.எல். சீசன் தொடங்கி விடும். நிச்சயம் இது ஆக்கப்பூர்வமானதாக இல்லை. இதை அணி நிர்வாகிகளும் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மற்றொரு அதிகாரி கூறும்போது, “ஆல் ஸ்டார் போட்டியால் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இந்த சீசனில் அணிகளுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே எதற்காக விளையாட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்” என்றார்.

    இதன் காரணமாக கங்குலியின் கனவான ஆல் ஸ்டார் போட்டி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் பெருமளவு குறைவு என்று ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்தன.
    சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ராஸ் டெய்லர் படைத்துள்ளார்.
    நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர். இந்தியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். 100-வது டெஸ்டில் விளையாடிய 4-வது நியூசிலாந்து வீரர் ஆவார். வெட்டோரி 112 டெஸ்டிலும், ஸ்டீபன் பிளமிங் 111 போட்டியிலும், பிரெண்டன் மெக்கல்லம் 101 டெஸ்டிலும் விளையாடி உள்ளனர்.

    டெய்லர் ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும், 20 ஓவரிலும் 100 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) 100 ஆட்டத்தில் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் 3 வடிவிலான போட்டிகளில் 100 ஆட்டத்தை தொட்டது இல்லை.

    35 வயதான டெய்லர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவரில் 100-வது ஆட்டத்தில் விளையாடினார். தற்போது 100-வது டெஸ்டிலும் இந்தியாவுக்கு எதிராக ஆடினார்.

    டெய்லர் 100 டெஸ்டில் 7174 ரன்னும் (19 சதம், 33 அரை சதம்) 231 ஒருநாள் போட்டியில் 870 ரன்னும் (21 சதம், 51 அரை சதம்), நூறாவது 20 ஓவர் ஆட்டத்தில் 1909 ரன்னும் (7 அரை சதம்) எடுத்துள்ளார்.
    புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவை இன்றும், நாளையும் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
    புவனேசுவரம்:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஹாக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முன்னணி 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை தோற்கடித்தது. அடுத்த சுற்றில் உலக சாம்பியன் பெல்ஜியத்துக்கு எதிராக ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் கண்டது.

    இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியனும், 2-ம் நிலை அணியுமான ஆஸ்திரேலியாவை இன்றும், நாளையும் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு எதிராக கடைசியாக மோதிய 30 ஆட்டங்களில் 22-ல் ஆஸ்திரேலியா வெற்றி கண்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிடம் தோற்றதில்லை. இருப்பினும் உலக சாம்பியனை வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று நம்பலாம். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ×