என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லக்‌ஷ்மண் அடித்த 281 ரன்கள்தான் லெக் ஸ்பின்னருக்கு எதிரான சிறப்பான ஆட்டம் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லக்‌ஷ்மண் அடித்த 281 ரன்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பான இன்னிங்சாக கருதப்படும் இதான், லெக் ஸ்பின்னருக்கு எதிராக நான் பார்த்ததில் சிறந்த ஆட்டம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் விமர்சகருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் இந்த இடைவெளியில் பழைய சிறப்பான இன்னிங்கை நினைத்து பார்க்க முடிகிறது.

    டாப் கிளாஸ் ஸ்பின்னர்களுக்கு எதிராக கால்களை அருமையாக நகர்த்தி விளையாடியதை பார்க்கும்போது இரண்டு இன்னிங்ஸ் ஞாபகத்திற்கு வருகிறது. ஒன்று இந்தியாவின் விவிஎஸ் லக்‌ஷ்மணின் ஆட்டம். மற்றொன்று ஆஸ்திரேலியாவின் டக் வால்டரின் ஆட்டம்.

    கொல்கத்தாவில் விவிஎஸ் லக்‌ஷ்மண் அடித்த 281 ரன்கள் நம்ப முடியாத வகையில் இருந்தது. நான் பார்த்ததில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிரான சிறந்த இன்னிங்ஸ் இதுதான். அந்தத் தொடர் முடிந்த பின்னர் வார்னேயிடம் நீங்கள் பந்து வீசியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் மோசமாக பந்து வீசியதான நினைக்கவில்லை என்றார்.

    இயன் சேப்பல்

    மூன்று வேகப்பந்து மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லக்‌ஷ்மண். வார்னர் எப்படி பந்து வீசினாலும் அடித்து நொறுக்கினார். இதனால் மோசமாக பந்து வீசியதாக கூற முடியாது’’ என்றார்.
    டி20 கிரிக்கெட்டில் அந்த்ரே ரஸல் எங்களின் கிறிஸ் கெய்ல், பிரையன் லாரா என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடாமல் இருந்த வெயின் பிராவோ, பொல்லார்டு ஆகியோரை அணியில் சேர்த்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வெயின் பிராவோ, அந்த்ரே ரஸல், கெய்ல், ஹெட்மையர் ஆகியோரை உள்ளடக்கிய பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக வி்ளையாடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிரடி ஆட்டக்காரர் அந்த்ரே ரஸல் எங்களுடைய கிறிஸ் கெய்ல், பிரையன் லாரா என்று வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘அந்த்ரே ரஸல் உலகின் சிறந்த வீரர். கிறிஸ் கெய்ல் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது அவரை இதுபோன்று நான் கூறியுள்ளேன். அவர் எங்கள் அணியில் இருந்தது மகிழ்ச்சியான விஷயம்.

    சர்வதேச போட்டிகளில் அவருக்கு எதிராக நாங்கள் பந்து வீசவில்லை. அதேபோல் அந்த்ரே ரஸலுக்கு எதிராகவும் நாங்கள் பந்து வீசவில்லை. தற்போது டி20 கிரிக்கெட்டில் அந்த்ரே ரஸல் எங்களின் கிறிஸ் கெய்ல், எங்களின் பிரையன் லாரா. அவர் சூப்பர் ஸ்டார்’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே, பிரதமர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி, தன்னுடைய சிறிய பங்களிப்பு எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று பிடியில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள நிவாரணம் வழங்கி உதவி செய்யலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

    பிசிசிஐ 51 கோடி ரூபாய் அளித்துள்ளது, சுரேஷ் ரெய்னா 52 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரகானே 10 லட்சம் வழங்குகிறார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘என்னுடைய சிறிய பங்களிப்பு. கடல் தண்ணீரின் ஒரு துளி போன்றது. இந்த கடினமான சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆதரவை கொடுப்பேன். வீ்ட்டில் தங்கியிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் கட்டாயமாக கிடைத்துள்ள இந்த இடைவேளி இந்திய அணி வீரர்கள் புத்துணர்வு பெறுவதற்கான வரவேற்கபட வேண்டிய ஓய்வு என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடினார்கள். அதன்பின் அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர்.

    கடந்த 12-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருந்தனர். மழையால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன்பின் கொரோனாவால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இனி்மேல் கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நீண்ட ஓய்வு இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்த ஓய்வு மோசமானது என நினைக்க முடியாது. ஏனென்றால் நியூசிலாந்து தொடருக்குப்பின் வீரர்கள் உடற்தகுதி, காயம், மனநிலை தொடர்பான பிரச்சினைகளில் வீரர்கள் சிக்கி இருந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

    கடந்த 10 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி உலக கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றோம். அதன்பின் தற்போது வரை 10 முதல் 11 நாட்களே வீட்டில் இருந்திருப்போம்.

    சில வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடியிருப்பார்கள். இதனால் அவர்களின் சுமையை நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய சூழ்நிலை கடினம் என்றாலும், வீரர்களுக்காக இது வரவேற்கக்கூடிய ஓய்வு’’ என்றார்.
    லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற குரோசியாவைச் சேர்ந்த மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது.
    லண்டன்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    துருக்கி நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இருவரும் லண்டனில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் பங்கேற்றவர்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஐரோப்பிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டிகள் சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. 3 நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு துருக்கி திரும்பிய போதுதான் 2 வீரர்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    இதேப் போல தலைமை பயிற்சியாளருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ( ஐ.ஓ.சி.)மீது விமர்சனம் எழுந்தது. மருத்துவ எச்சரிக்கையை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற மேலும் 3 குத்துசண்டை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகி உள்ளது. இவர்கள் குரோசியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் லண்டன் குத்துச்சண்டை போட்டி அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசால் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  

    இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

    கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் உ.பி. மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 52 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான 50 என பாராட்டு தெரிவித்துள்ளார்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாயும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கினர்.
    மும்பை:

    உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
    மேலும் கொரோனா வைரசால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

    வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

    இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசுக்கு வழங்கலாம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். 

    இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

    அதேபோல், சிஎஸ்கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 52 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 

    பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு 31 லட்ச ரூபாயும், உத்தரபிரதேச முதல்மந்திரியின் நிவாரண நிதி கணக்கிற்கு 21 லட்ச ரூபாயும் (மொத்தம் ரூ. 52 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

    அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

    ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் சிலர் கும்பலாக வெளியே சுற்றுகிறார்கள். இதனால் பல்வேறு விழிப் புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

    நான் ஒரு கிரிக்கெட் வீரராக பேசவில்லை. இந்திய குடிமகனாக பேசுகிறேன். கடந்த சில தினங்களாக மக்கள் கும்பலாக செல்வது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடப்பது, அரசை மதிக்காமல் செயல்படுவது போன்றவை கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.

    ஆனால் உண்மையிலேயே இந்தப்போராட் டம் சுலபமானது இல்லை. கடினமான போராட்டமாகும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    எல்லோரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும். மேலும் அரசு கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    நீங்கள் அசட்டுத்தனமாக வெளியே சுற்றுவதனால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதனால் வீட்டிலேயே இருங்கள்.

    நாம் நமது கடமையை செய்தால் மட்டுமே இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். விதிகளை மீறுவது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகும். உங்களைப் போலவே நானும் தற்போது உள்ள சூழல் சரியாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

    எனவே அரசின் வழிகாட்டு தலை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

    இதற்கிடையே கொரோனா பாதித்தவர்களை தர்ம சங்கடப்படுத்த வேண்டாம். விரும்பத்தகாதவர்களாக கருத வேண்டாம் என்று கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

    கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நேசிக்க வேண்டும் என்பது ஒரு சமூகமாக நம் அனைவரது பொறுப்பாகும். அவர்கள் தங்களை நினைத்தே தர்ம சங்கடப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்களும் முன் எச்சரிக்கையுடன் இருங்கள். அதே நேரத்தில் அவர்களை விரும்பத்தகாதவர்களாக கருதும் சூழலை ஏற்படுத்தி விடக்கூடாது.

    ஒன்றிணைந்து நாம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்களை சமூக நலன்களில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் என்பதல்ல.

    கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாம் ஒன்றிணைந்து சேர்ந்தால் தான் வெல்ல பெற முடியும். தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

    அவர் ரூ 50 லட்சம் நன் கொடையையும் அளித்துள்ளார்.

    நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செர்பிய மக்களுக்காக ரூ 8 கோடி நிதியுதவி அறிவித்து உள்ளார். ஏற்கனவே பல்வேறு விளையாட்டு பிரபலங்கள் நிதி உதவிகளை வாரி வழங்கி இருந்தனர்.
    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    லாசானே:

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்படும், தள்ளி வைக்கப்படுவதுமாக இருக்கிறது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இந்த போட்டி நடைபெறும்.

    இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஐ.ஓ.சி. ( சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்வதாக இருந்தனர். இதில் 57 சதவீதம் பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றிருந்தனர்.

    32 சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஐ.ஓ.சி. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திய ஆலோசனையில் ஏற்கனவே தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தகுதி பெறும் முறையை சீராக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 74 வீரர்வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 38 பேர் தனிநபரை சேர்ந்தவர்கள். முப்பத்தாறு பேர் குழுவில் உள்ளவர்கள்.
    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் பங்கேற்க முடியாதது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்6கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான். 224 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 9115 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.27 ஆகும்.

    என்றாலும் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    சொந்த மைதானத்தில் இந்தியா கோப்பையை வெல்லும்போது அணியில் இல்லாதது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னுடைய மிகப்பெரிய சோகமான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம் பெறவில்லை. எங்களுடைய சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரில் இடம் பிடிக்காதது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம். மேலும், என்னுடைய சொந்த மைதானமான வான்கடேயில் இறுதி போட்டி நடைபெற்றது.

    உலக கோப்பை தொடருக்கு முன் நான் சிறப்பாக விளையாடவில்லை. அதனால்தால் அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை’’ என்றார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் ஐந்து சதங்களுடன் 648 ரன்கள் குவித்தார். சராசரி 81 ஆகும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மோசமாக விளையாடியதன் காரணமாக இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.
    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாரக ஐபிஎல் சிறந்த தொடராக இருந்திருக்கும் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் அக்டோபர் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    நாளை மறுதினம் ஐபிஎல் 2020 சீசன் தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் 15-ந்தேதி வரை ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதால் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த தொடராக இருக்கும் என கருதப்பட்டது. இதனால் அனைத்து சர்வதேச அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட தங்களது நாட்டு வீரர்களை விளையாட அனுப்ப தயாராக இருந்தன. இந்நிலையில்தான் கொரோனாவல் ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று பீதி ஏற்படுவதற்கு முன்பு, உண்மையாகவே எங்களுடைய வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதிக்க தீர்மானித்திருந்தோம்.

    ஏனென்றால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலக கோப்பை வர இருக்கிறது. இதைவிட சிறந்த மைதானம், பயிற்சி, தொடர் உலக கோப்பைக்கு தயாராக இருக்க முடியாது.

    ஆனால் திடீரென எல்லா விஷயங்களும் மிகப்பெரிய அளவில் மாறிவிட்டன. தனிப்பட்ட எங்கள் வீரர் உடல்நலம் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, இந்தியா என ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலமும் முக்கியமானது.

    உலக கோப்பைக்கான தேர்வு குறித்து நான் கவலைப்படவில்லை. எங்கள் அணியில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடத்திற்கான வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் மிகவும் செட்டில் ஆன அணி. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம்’’ என்றார்.
    கொரோனா வைரஸ் தாக்கியவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக பிரத்யேக ஜெர்சியை தயாரித்து ஆன்லைன் மூலம் விற்று நிதி திரட்டியுள்ளது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப்.
    கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளி்ல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை அதிக அளவில் பாதித்துள்ளது. பிரான்சில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நி்லையில் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பயன்படுத்த உபகரணங்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு உதவ முன்னணி நிறுவனங்கள், பிரபல வீரர்கள் நிதி வழங்கி உதவி வருகிறார்கள்.

    இந்நிலையில் பிரான்சின் முன்னணி கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி பிரத்யேகமாக வீரர்கள் அணியும் ஜெர்சியை தயாரித்து அவர்களுடைய ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்தது.

    1500 ஜெர்சிகள் விற்றதன் மூலம் 2 லட்சம் யூரோ கிடைத்ததாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தெரிவித்துள்ளது.
    ×