என் மலர்
விளையாட்டு
ரஞ்சி டிராபியல் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இருக்கும் வாசிம் ஜாபர், விதர்பா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர் (வயது 42), கடந்த 24 ஆண்டுகளாக முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 260 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19410 ரன்கள் குவித்துள்ளார். இதில் 57 சதங்கள் அடங்கும். இவர் கடந்த 7-ந்தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக விதர்பா அணிக்காக விளையாடி வந்தார். விதர்பா அணியின் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் உள்ளார். இருவருடைய ஒத்துழைப்பால் விதர்பா அணி 2017-18 சீசனில் ரஞ்சி டிராபியையும், 2018-19-ல் இரானி கோப்பையையும் வென்றது.
தற்போது சந்திரகாந்த் பண்டிட் மத்திய அணிக்கு பயிற்சியாளராக செல்ல இருக்கிறார். இதனால் வாசிம் ஜாபரை பயிற்சியாளராக்க விதர்பா முடிவு செய்துள்ளது.
‘‘வாசிம் ஜாபரை பண்டிட் இடத்திற்கு நியமிக்க முடியும். ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணி செய்யும் நோக்கம் உள்ளது என்று வாசிம் ஜாபர் சமீபத்தில் கூறியிருந்தார். அதனால் விதர்பா அணியில் இருந்து அவர் பயிற்சியாளர் பணியை தொடங்க முடியும்.
தற்போது விதர்பா கிரிக்கெட் அகாடமியின் எந்த பணியும் நடைபெறவில்லை. ஆனால், வாசிம் ஜாபருக்கு வீரர்களிடையேயும், அதிகாரிகளிடையும் நல்ல பெயர் உள்ளது. இதனால் இந்த வாய்ப்பை புறந்தள்ளி விட முடியாது’’ என விதர்பா கிரிக்கெட் அகாடமியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாம் வெற்றி பெறுவோம் என்பது எனக்குத் தெரியும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போது வரை 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சமூக இடைவெளி தேவை அவசியமானது. இதனால் 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி அடைவோம் என்று எனக்குத் தெரியும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் ‘‘வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். கொடூர வைரசை ஒழிக்க இந்த ஒன்றையாவது செய்து உதவி செய்ய வேண்டும். இது நேர்மறையாக வழிக்கு எடுத்துச் செல்லும். ஊடரங்கு அல்லது விட்டிற்குள்ளேயே இருப்பது, இந்த சூழ்நிலையை ஏற்று தங்களுக்குள்ளே ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிற்குள் உலகம் இருக்கிறது. அதுதான் உங்கள் குடும்பம். புத்தகம், டிவி, மியூசிக் மூலம் பொழுதை போக்கலாம். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடுவது சிறந்தது.
நான் வீட்டை சுத்தம் செய்கிறேன். தோட்டத்தையும் சுத்தம் செய்கிறேன். என்னுடைய சிறிய தோட்டம் தற்போது என்னுடைய கோல்ஃப் மைதானம். என்னுடைய குடும்பத்துடன் அதிக அளவி்லான நேரத்தை செலவிடுகிறேன். நான் பல வருடங்களாக எதையோ இழந்துள்ளேன்’’ என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக பணியாற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார், கொரோனா நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பாகிஸ்தானிலும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் ஏராளமானோர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி இழந்தவர்களுக்கு எனது ரெஸ்டாரன்டில் இலவசமாக உணவு வழங்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அம்பயர் அலீம் டார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அலீம் டார் கூறுகையில் ‘‘உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கியுள்ளது. எனினும், நம்முடைய ஆதரவு இல்லாமல் அரசாங்கத்தால் ஏதும் செய்ய இயலாது. அனைத்து மக்களும் அரசு வலியுறுத்தியுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாடு முடக்கப்படும்போது மக்கள் வேலையில்லாமல் இருப்பார்கள். என்னுடைய சொந்த ரெஸ்டாரன்ட் டார்'ஸ் டெலைட்டோ (Dar’s Delighto) என்ற பெயரில் லாகூரில் உள்ள பியா சாலையில் இயங்கி வருகிறது. தற்போது வேலையில்லாமல் இருப்பவர்கள். அங்கு சென்று பணம் ஏதுமின்றி இலவசமாக சாப்பிடலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
மும்பை:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாயை இன்று வழங்கியுள்ளார்
பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னும் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டி தொடரின் போது 3 பெண்கள் அணிகள் பங்கேற்ற காட்சி போட்டி மட்டும் அரங்கேறியது.
இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு முதல்முறையாக கோப்பையை வெல்ல கிடைத்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டிய சரியான தருணம் இதுவாகும்‘ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
‘பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் என்றென்றும் காத்து இருக்கக்கூடாது. அவர்கள் அடுத்த ஆண்டில் (2021) பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். முதலில் சற்று சிறிய அளவில் கூட இந்த போட்டியை தொடங்கலாம். தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட மாற்றம் செய்யலாம். ஆண்களுக்கான ஐ.பி.எல். போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதனை பெண்களுக்கான முதலாவது போட்டியில் 5 அல்லது 6 வெளிநாட்டு வீராங்கனைகள் என்று முடிவு செய்யலாம்.
முழுமையான ஐ.பி.எல். போட்டியை நடத்தும் அளவுக்கு நம்மிடம் போதுமான வீராங்கனைகள் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தற்போது உள்ள ஐ.பி.எல். அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்கள் பெண்கள் அணியை தொடங்க முனைப்பு காட்டினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க முடியும். இந்த போட்டியை தொடங்குவதில் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது. போட்டி தொடங்கி நல்ல நிலையை எட்டிய பிறகு வெளிநாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கலாம்.
பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அனுபவம் இல்லை என்ற காரணத்தை காட்டி அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு அளிக்காமல் இருக்கக்கூடாது’ இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னும் பெண்களுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டி தொடரின் போது 3 பெண்கள் அணிகள் பங்கேற்ற காட்சி போட்டி மட்டும் அரங்கேறியது.
இந்த மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு முதல்முறையாக கோப்பையை வெல்ல கிடைத்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டிய சரியான தருணம் இதுவாகும்‘ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை விரைவாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
‘பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் வாரியம் என்றென்றும் காத்து இருக்கக்கூடாது. அவர்கள் அடுத்த ஆண்டில் (2021) பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். முதலில் சற்று சிறிய அளவில் கூட இந்த போட்டியை தொடங்கலாம். தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட மாற்றம் செய்யலாம். ஆண்களுக்கான ஐ.பி.எல். போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதனை பெண்களுக்கான முதலாவது போட்டியில் 5 அல்லது 6 வெளிநாட்டு வீராங்கனைகள் என்று முடிவு செய்யலாம்.
முழுமையான ஐ.பி.எல். போட்டியை நடத்தும் அளவுக்கு நம்மிடம் போதுமான வீராங்கனைகள் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தற்போது உள்ள ஐ.பி.எல். அணிகளை நிர்வகிக்கும் உரிமையாளர்கள் பெண்கள் அணியை தொடங்க முனைப்பு காட்டினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை தொடங்க முடியும். இந்த போட்டியை தொடங்குவதில் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது. போட்டி தொடங்கி நல்ல நிலையை எட்டிய பிறகு வெளிநாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையை 4 ஆக குறைக்கலாம்.
பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அனுபவம் இல்லை என்ற காரணத்தை காட்டி அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு அளிக்காமல் இருக்கக்கூடாது’ இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.
சிட்னியில் 2015 உலக கோப்பை அரையிறுதியில் 93 பந்தில் 105 ரன்கள் அடித்தது அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2015-ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. சிட்னியில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 93 பந்தில் 105 ரன்கள் விளாசினார். பின்னர் 329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 233 ரன்னில் சுருண்டு 95 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக மட்டும் சதம் அடித்தார். ஆநேகமாக இதுதான் என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் அதுவாகத்தான் இருக்கும். எனது சொந்த நாட்டில், என்னுடை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மத்தியில் உலக கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் அணிக்கு எதிராக அந்த சதம் கிடைத்தது’’ என்றார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஒருவேளை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ரெயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்றி கொள்ளலாம் என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம், பெங்கால் கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது.
இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
40 அறைக்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதி கொண்ட இந்த மைதானத்தை வழங்க தயாராக இருப்பது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர். விஜயானந்த் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு ராஜிவ் காந்தி மைதானத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாற்றிக் கொள்வதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என கடிதம் எழுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆர். விஜயானந்த் கூறுகையில் ‘‘அரசுக்கு நாங்கள் ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்றால் இதுதான் சரியான நேரம் என நாங்கள் நினைக்கிறோம். பல ஆண்டுகளாக பொதுமக்கள் எங்களுக்கு தந்த ஆதரவுக்கு கைமாறாக இது இருக்கும். இது தலைவர் முகமது அசாருதீன் உள்பட அனைத்து உறுப்பினர்கள் இணைந்து ஒருமனதாக எடுத்த முடிவாகும்’’ என்றார்.
இங்கிலாந்து குத்துச்சண்டை வீரரான அமிர் கான், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனது நான்கு மாடி கட்டடத்தை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு உலகளவில் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியோனோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் கோரோனா வைரஸ் தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரபலங்கள் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நிதியுதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்தின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான முன்னாள் உலக சாம்பியன் அமிர் கான் 60 ஆயிரம் சதுர அடி கொண்ட தனது நான்கு மாடி கட்டடத்தை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வழங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் மூன்று வாரங்கள் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக தயாராகி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது காட்டுத்தீ போன்று கொரோனா பரவி வருவதால் ஏப்ரல் 15-ந்தேதிக்குள் கட்டுக்குள் வந்துவிடுமா? என்பது சந்தேகம்தான். இதற்கிடையில் இந்தியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நிலையில் என்னுடைய அடுத்த கிரிக்கெட் தொடர் ஐபிஎல்தான். இதுவரை இதில் மாற்றமில்லை. இதனால் ஏப்ரல் 20-ந்தேதி விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.
ஒருவேளை போட்டி நடைபெற்றால் சிறந்த நிலையில் நான் செல்ல வேண்டும். அதனால் உடற்தகுதியை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வைத்திருக்க வேண்டும். என்னால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க முடியாது. ஏப்ரல் 20-க்குள் உடல் தயாராகி விடும். ஏனென்றால் நான் விரும்பும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்காது’’ என்றார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் டென்னிஸ் வீரரான தியாகோ செபோத் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நாட்டை ஆளும் பிரதமர் குடும்பம், பிரபலங்கள், வீரர்கள், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக்கில் விளையாடிய பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் தியாகோ செபோத். மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற சிலி ஓபனில் நார்வே வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்ற பிரேசில் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் தற்போது வைரஸ் தொற்றால் பாதித்துள்ளேன். இன்றுதான் மாதிரி பரிசோதனையில் தெரிய வந்தது. 10 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்தது, அத்துடன் அறிகுறி தென்பட்டது. ஆனால் இன்னும் சில நாட்களில் வைரஸ் தாக்கும் குறைந்து குணமடைந்து விடுவேன்.
கடந்த நில நாட்களாக நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் நான் வீட்டிக்குள்ளேயே இருந்து வருகிறேன். இது மிகவும் கொடிய நோய். என்றாலும் ஒவ்வொருவருடைய வலிமையாலும் இதை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் திணறி வரும் நிலையில் கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்சி, ரொனால்டோ மருத்துவமனைகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
உயிரை பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த நோயால் பாதித்தவர்களுக்கு விளையாட்டு பிரபலங்களும் உதவ முன்வந்து இருக்கிறார்கள். அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவும் வகையில் ரூ.8.27 கோடியை நிதியாக வழங்கி உள்ளார்.
பார்சிலோனாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஒன்றுக்கும், தனது சொந்த நாட்டில் உள்ள மருத்துவ மையம் ஒன்றுக்கும் இந்த தொகையை அவர் பகிர்ந்து அளித்து இருக்கிறார். மேலும் மான்செஸ்டர் கால்பந்து கிளப்பின் மேலாளரும், பார்சிலோனா அணியின் முன்னாள் வீரருமான பெப் கார்டியாலோவும் தன் பங்குக்கு ரூ.8.27 கோடியை வழங்கி இருக்கிறார்.
இதேபோல் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது ஏஜென்டான ஜோர்ஜ் மென்டசும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் போர்ச்சுகல் நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு தலா ரூ.8.27 கோடியை வழங்கியுள்ளனர். பெல்ஜியம் கால்பந்து வீரர் டோபி அல்டர்வெய்ரல்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் உரையாட உதவும் வசதியாக 12 ஐ-பேடுகளை வாங்கி தர முன்வந்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்த நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால் மற்றும் அவரது மனைவி மிர்கா ஆகியோர் ரூ.7 ¾ கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கி வரும் நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிவி சிந்து.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக மோசமான வகையில் பரவி வருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் உச்சக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களால் முடிந்த அளவிற்கு அந்தந்த மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.






