search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் ஸ்மித்
    X
    ஸ்டீவ் ஸ்மித்

    இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பை அரையிறுதியில் அடித்த சதம் என்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்: ஸ்மித்

    சிட்னியில் 2015 உலக கோப்பை அரையிறுதியில் 93 பந்தில் 105 ரன்கள் அடித்தது அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    2015-ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. சிட்னியில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 93 பந்தில் 105 ரன்கள் விளாசினார். பின்னர் 329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 233 ரன்னில் சுருண்டு 95 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக மட்டும் சதம் அடித்தார். ஆநேகமாக இதுதான் என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும் என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் அதுவாகத்தான் இருக்கும். எனது சொந்த நாட்டில், என்னுடை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மத்தியில் உலக கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் அணிக்கு எதிராக அந்த சதம் கிடைத்தது’’ என்றார்.
    Next Story
    ×