என் மலர்
விளையாட்டு
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்ற வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பு மண்டியிட்டு இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
லண்டன்:
நேற்றைய முதல் போட்டியில் ஆஸ்டன் வில்லா-ஷெபீல்டு யுனைடெட் அணிகள் மோதின. போட்டியை தொடங்குவதற்கு முன்பாக, நடுவர், வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் 10 வினாடிகள் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் மான்செஸ்டர் சிட்டி, அர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கும்போதும், வீரர்கள் மண்டியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டனிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரிட்டனில் கொரோனா அச்சம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது. இப்போட்டியின்போது வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு, பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அனைவரும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி போன்று அணியை பென் ஸ்டோக்ஸ் முன்னின்று வழி நடத்துவார் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு நட்சத்திர வீரர் ஜோ ரூட் கேப்டனாக உள்ளார்.
இவரது மனைவிக்கு ஜூலை மாதத்தில் 2-வது குழந்தை பிறக்க உள்ளது. மேலும் உயிர்-பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதால் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் துணை கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பணியாற்ற வாய்ப்புள்ளது. பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பதவியில் விராட் கோலியை போன்று அணியை வழி நடத்துவார் என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘விராட் கோலி களம் இறங்கி சிறப்பாக விளையாடும்போது அணியின் ஒவ்வொரு வீரரும் அதேபோன்று விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்று நமக்கும் தெரியும். பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பில் எப்படி செயல்படுவார் என்று நான் கற்பனை செய்கிறேன்.
பென் ஸ்டோக்ஸிடம் அணியை முன்னின்று வழி நடத்தும் சிறப்பான திறமை உள்ளது. அணியின் துணை கேப்டனாக இருக்கும்போதே சிறந்த தலைவராக இருந்துள்ளார். அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதித்துள்ளார். கேப்டன் பொறுப்பை செய்வதற்கு போதுமான நபராக இருக்கிறார்’’ என்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் சவாலானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 3-ந்தேதி கப்பாவில் நடக்கிறது.
2-வது டெஸ்ட் டிசம்பர் 11-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் மிகவும் சவாலானதாக இருக்கும் என இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மோன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இதுவரை நான் பிங்க் பால் டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடவில்லை. மனநிலை எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். உண்மையிலேயே அடிலெய்டு டெஸ்ட் சவாலானதாக இருக்கும்’’ என்றார்.
இந்திய அணி கொல்கத்தாவில் வங்காளதேசத்திற்கு எதிராக ஒரேயொரு பிங்க் பால் டெஸ்டில் மட்டும் விளையாடியுள்ளது. அதன்பின் நேராக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.
ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இதுவரை ஏழு பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஏழு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது கிடையாது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அணியின் உரிமையாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் போட்டியை நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதால் அந்த காலகட்டத்தில் (அக்டோபர், நவம்பர்) ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா அளித்த ஒரு பேட்டியில், ‘‘தற்போதைய சூழ்நிலையை பார்க்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் நிறைய சிக்கல்கள் இருப்பது தெரிகிறது.
அதுபோல் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதும் எளிதான காரியமல்ல. போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஐ.பி.எல். போட்டியை முழுமையாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் எல்லா முயற்சிகளும் செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆனால் போட்டியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஏனெனில் சூழ்நிலையை நாங்கள் அறிவோம். ஐ.பி.எல். போட்டிக்கான இடம் மற்றும் அட்டவணையை எளிதில் முடிவு செய்து விட முடியும். போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான அளவுக்கு ஓட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஐ.பி.எல். போட்டி நடந்தால் ஸ்பான்சர் வழங்க பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. எனவே ஸ்பான்சரை கவர்வதில் எந்தவித சிக்கலும் இருக்காது. தற்போதைய கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியில் வர உலகுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. எனவே இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டி நடந்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும்’’ என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது சாத்தியமற்றது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறுவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகள் கூட்டம் டெலிகான்பரன்ஸ் மூலம் இரண்டு முறை நடந்தும் எந்தவித முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த வாரம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இன்னும் ஒரு மாதம் பொறுத்து இருந்து அந்த சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ‘‘இந்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவோ, தள்ளிவைக்கப்படவோ இல்லை. இன்னும் பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக இருந்து வரும் சூழ்நிலையில் 16 நாட்டு அணிகளை ஆஸ்திரேலியாவுக்கு வரவைக்க முயற்சிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று நினைக்கிறேன். அல்லது இதனை செய்வது மிக, மிக கடினமானதாக இருக்கும்.
உலக கோப்பை போட்டி குறித்து நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆலோசித்து இருக்கிறோம். போட்டி குறித்து இந்த தருணத்தில் கணிப்பது சற்று கடினமானதாகும்’’ என்று தெரிவித்தார்.
எனக்கு எப்போதும் கனவு உண்டு, அதை நோக்கி தொடர்ந்து பயணிப்பேன் என டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்த வீனஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் (5 விம்பிள்டன் மற்றும் 2 அமெரிக்க ஓபன்), ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்று இருக்கிறார். ஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. 2016-ம் ஆண்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன். என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.
அமெரிக்காவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் இன்று தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 1994-ம் ஆண்டு டென்னிஸ் களத்தில் அடியெடுத்து வைத்த வீனஸ் இதுவரை 7 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் (5 விம்பிள்டன் மற்றும் 2 அமெரிக்க ஓபன்), ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கமும் வென்று இருக்கிறார். ஆனால் அவரது ஆட்டத்திறன் முன்பு போல் இல்லை. 2016-ம் ஆண்டுக்கு பிறகு எந்த சர்வதேச பட்டமும் வெல்லவில்லை. ஆனாலும் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து வீனஸ் வில்லியம்ஸ் கூறுகையில், ‘எனக்கு எப்போதும் கனவு உண்டு. அதை நோக்கி தொடர்ந்து பயணிக்கிறேன். நான் இன்னும் பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வெல்லவில்லை. அதை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு பட்டங்களையும் நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறேன். என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது. உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னும் முடிந்த அளவுக்கு வெற்றிகளை குவிக்க ஆசைப்படுகிறேன். உரிய நேரம் வரும் போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.
இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதன் மூலம் ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும். இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து 29 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், மருத்துவ அதிகாரி உள்பட 14 உதவியாளர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சிறப்பு விமானத்தில் பறக்க உள்ளனர். இவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள் என்று குடும்ப உறுப்பினர்கள் எவரையும் உடன் அழைத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறும் போது, ‘கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்வதற்கு அனுமதி கிடையாது. அது மட்டுமின்றி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு வரவழைத்து தனிப்பட்ட முறையில் தங்க வைத்தால் கூட பிரயோஜனம் கிடையாது. ஏனெனில் தொடர் நிறைவடையும் செப்டம்பர் மாதம் வரை ஒட்டுமொத்த அணியினரும் தங்களது குடும்பத்தினருடன் நேரில் உரையாட முடியாது. இதை அவர்களிடம் தெளிவாக விளக்கி விட்டோம்.
எங்கள் அணியினர் இங்கிலாந்து சென்றடைந்ததும் அங்கு பர்மிங்காம் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அது முடிந்ததும் மான்சென்ஸ்டருக்கு செல்வார்கள். அங்கு உயர்மட்ட மருத்துவ வசதிகளுடன், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீரர்கள் 2 வாரம் பயிற்சியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.
முன்னதாக இந்த தொடரில் இருந்து பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் விலகியதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஹாரிஸ் சோகைல் 2015-ம் ஆண்டு நியூசிலாந்து தொடரின் போது, தான் தங்கியிருந்த ஓட்டலில் ஏதோ உருவத்தை பார்த்து பயந்து (பேய் பீதி) விட்டதாக கூறி அது முதல் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் தனது மனைவியை உடன் அழைத்து செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கிலாந்து பயணத்தில் இருந்து பின்வாங்கி விட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதன் மூலம் ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும். இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து 29 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், மருத்துவ அதிகாரி உள்பட 14 உதவியாளர்கள் இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சிறப்பு விமானத்தில் பறக்க உள்ளனர். இவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள் என்று குடும்ப உறுப்பினர்கள் எவரையும் உடன் அழைத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

எங்கள் அணியினர் இங்கிலாந்து சென்றடைந்ததும் அங்கு பர்மிங்காம் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அது முடிந்ததும் மான்சென்ஸ்டருக்கு செல்வார்கள். அங்கு உயர்மட்ட மருத்துவ வசதிகளுடன், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீரர்கள் 2 வாரம் பயிற்சியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.
முன்னதாக இந்த தொடரில் இருந்து பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் விலகியதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஹாரிஸ் சோகைல் 2015-ம் ஆண்டு நியூசிலாந்து தொடரின் போது, தான் தங்கியிருந்த ஓட்டலில் ஏதோ உருவத்தை பார்த்து பயந்து (பேய் பீதி) விட்டதாக கூறி அது முதல் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் தனது மனைவியை உடன் அழைத்து செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கிலாந்து பயணத்தில் இருந்து பின்வாங்கி விட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுமா? என்ற நிலையில், திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிராணட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டது. 2-ம் உலகப்போருக்குப்பின் தற்போதுதான் விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். போட்டியை நடத்துவது குறித்து ஜூன் மாதம் முடிவு செய்வோம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். மேலும், போட்டிகளை காண்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 400-க்கு கீழ் சரிய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் விளையாடும்போது அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் யாரும் இல்லை என பாகிஸ்தான் முன்னான் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக். தற்போது பாகிஸ்தான் சர்வதேச வீரர்கள் முன்னேற்றத்திற்கான தலைவராக உள்ளார்.
தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் நாதன் லயன், அஸ்வின் ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் விளையாடும்போது அஸ்வினை விட சிறந்த பந்து வீச்சாளர் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சக்லைன் முஷ்டாக் கூறுகையில் ‘‘அஸ்வின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அசத்தி வருகிறார். வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால், சொந்த மண்ணில் அவரை விட சிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்க முடியாது. ஜடேஜாவும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

நாதன் லயன் ஆஸ்திரேலிய அணிக்காக மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். அவருடைய பந்து வீச்சு மற்றும் ஸ்டிரைக் ரேட்டை வைத்து பார்க்கும்போது தற்போதுள்ள நிலையில் அவர்தான் சிறந்த பந்து வீச்சாளர்’’ என்றார்.
நான் சந்தித்ததில் பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்தான் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். எந்த ஆடுகளம், எந்த நாடு என்றெல்லாம் இவருக்கு கவலை இல்லை. உலகின் எந்த திசையில் களம் இறக்கப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை மிகவும் சுலபமாக எதிர்கொள்ளக் கூடியவர்.
தொழில்முறை கிரிக்கெட்டிற்கான ஷாட்டுகளை இவர் ஆடவில்லை என்றாலும், பந்தை துல்லியமாக கணித்து விளையாடுவதில் கில்லாடி. இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இவரை எளிதில் சாய்த்து விட இயலாது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நீங்கள் சந்திக்க மிகவும் கஷ்டப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் யார்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஸ்மித் ‘‘முகமது அமிர், நான் சந்தித்ததில் மிகவும் திறமையான பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

முகமது அமிர் 2010-ம் ஆண்டு மேட்ச்-பிக்சிங் விவகாரத்தில் ஐந்து ஆண்டுகள் தடைபெற்றார். அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பினார். 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என்று முன்னாள் இந்திய அணி ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘விருந்தினர்கள் இல்லாமல் ஒரு திருமணம் முழுமையாகாது. ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால், நமக்கே அதே உணர்வு ஏற்படும். ஆனால், திருமணம் விருந்தினர்கள் இல்லாமலும் நடக்கலாம். நீதிமன்ற திருமணங்கள் போன்ற வாய்ப்புகள் உள்ளன. இறுதியில் திருமணங்கள் நடக்கும். அதுபோன்றுதான் இருக்கும்’’ என்றார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கேப்டனாக எதையும் வென்றதில்லை என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவுதம் கம்பிர் ‘‘விராட் கோலி கேப்டனாக இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது. தற்போது கேப்டனாக இருக்கும் அவர் ஐசிசி கோப்பைகள் எதையும் வென்றதில்லை.
கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ரன்களை குவிக்கலாம். லாரா போல ஏகப்பட்ட ரன்களையும் குவிக்கலாம், கல்லீஸ் போல எதையும் ஜெயிக்காமலும் இருக்கலாம். இதுவரை விராட் கோலியும் ஒரு கேப்டனாக எதையும் ஜெயிக்கவில்லை. அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது.
நீங்கள் ஏராளமான ரன்கள் அடிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய தொடரை வெல்லவில்லை என்றால் உங்களுடைய கிரிக்கெட்டின் முழு வாழ்க்கையையும் நிறைவேற்ற முடியாது ’’ என்றார்.






