என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை நாங்கள் பணத்திற்காக விற்று விட்டோம் என்ற முன்னாள் மந்திரியின் குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 
    2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் அவரது அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே தற்போது குற்றம்சாட்டி உள்ளார். 

    2011 உலக கோப்பை இறுதி போட்டியில் நாங்கள் பணத்துக்காக கோப்பையை விற்று விட்டோம். அப்போது நான் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தேன். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களின் பெயரை உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு அபத்தானது என்று பாய்ந்துள்ளார். 

    இது தொடர்பாக ஜெயவர்தனே தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையில் தேர்தல் வர இருக்கிறது. அதற்காக இப்போதே சர்க்கஸை தொடங்கி விட்டார்கள். சூதாட்டத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதற்கான பெயர் விவரங்களையும், ஆதாரங்களையும் அவர் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு ஜெயவர்தனே அவர் கூறினார்.

    ஜெயவர்தனே இறுதிப் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் அந்த போட்டியின் கேப்டனாக இருந்த சங்ககராவும் ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியை விமர்சித்துள்ளார்.

    இலங்கையில் ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அலுக்காமகே தற்போது காபந்து மந்திரியாக இருக்கிறார்.
    சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று பாகிஸ்தான் நிர்வாகி தெரிவித்துள்ளதால் கங்குலிக்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த சசாங்க் மனோகர் இருக்கிறார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடிகிறது.

    ஐ.சி.சி. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரையில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரான கங்குலி ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஐ.சி.சி. உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. உண்மையிலேயே என்னை போட்யிடுமாறு சிலர் கேட்டுக் கொண்டனர். 
    ஆனால் இதில் எனக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்து விட்டேன். இந்த பதவிக்கு கங்குலி களம் இறங்கி போகிறாரா என்பது எனக்கு தெரியாது. 
    என்னை பொறுத்தவரை 2006-ல் எனது பதவி முடிந்த பின் மீண்டும் ஐ.சி.சி.க்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். தற்போது இம்ரான்கான் கேட்டுக் கொண்
    டதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக பாடுபடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஈசான் மானி விலகலைத் தொடர்ந்து ஐ.சி.சி. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

    கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் கூறும்போது, ‘‘ஐ.சி.சி. தேர்தல் குறித்து முதலில் முறைப்படி அறிவிக்கட்டும். அதன்பின் எங்கள் முடிவை தெரிவிப்போம்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார்.
    பெர்த்:

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தங்களது நிதி பிரச்சனையை சமாளிக்க பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் 40 ஊழியர்கள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் கிரேமி ஹிக்கும் அடங்குவார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான 54 வயது கிரேமி ஹிக் 2016-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். அவரது நீக்கம் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
    நிவாரண பணிகளுக்காக நிறைய இடங்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு என்பது தெரியும் என சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
    கராச்சி:

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 40 வயதான சாகித் அப்ரிடி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:- கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதை கேள்விப்பட்டு இந்த வீடியோவை வெளியிடுகிறேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முதல் 2-3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதில் எனக்கு உள்ள மிகப்பெரிய கஷ்டமே எனது குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை, அவர்களை பாசத்தோடு கட்டித்தழுவ முடியவில்லை என்பது தான். அவர்களை தவற விடுவது வேதனை அளிக்கிறது. ஆனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம். உங்களை சுற்றியுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க சமூக இடைவெளி அவசியமாகும். ஆனால் கொரோனா குறித்து பயப்பட தேவையில்லை. நிவாரண பணிகளுக்காக நிறைய இடங்களில் பயணிக்கும் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தேன்.

    நல்லவேளையாக இந்த பாதிப்பு கொஞ்சம் தாமதமாக ஏற்பட்டது. இல்லாவிட்டால் இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியாமல் போயிருக்கும். நான் சீக்கிரம் குணமடைய எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பாக இருக்கும் சீன நிறுவனம் இந்திய பொருளாதாரத்திற்கு உதவிகரமாக இருக்கிறது என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் ஸ்பான்சராக விவோ (VIVO) நிறுவனம் உள்ளது. இது சீனாவைச் சேர்ந்தது. வருடத்திற்கு 400 கோடி ரூபாய் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

    தற்போது லடாக் மோதலை தொடர்ந்து சீனப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் இந்திய பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கிறது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அருண் துமல் கூறுகையில் ‘‘நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது, உங்களது பகுத்தறிவு பின்னோக்சி சென்றுவிடும். சீன நிறுவனம் ஆதாயம் பெறுவது அல்லது சீன நிறுவனத்திடம் இருந்து ஆதாயத்தை பெறுவது ஆகிய இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் சீன நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி கொடுக்கும்போது, அவர்கள் இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுகிறார்கள். அவற்றில் இருந்து சில பகுதிகளை பிசிசிஐ-க்கு செலுத்துகிறார்கள். நாங்கள் அதில் இருந்து இந்திய அரசுக்கு 42 சதவீதம் வரியாக செலுத்துகிறோம். இது இந்தியாவிற்கு ஆதாயம் தருகிறது. சீனாவுக்கு ஆதரவு என்று சொல்ல முடியாது.

    அவர்கள் ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலகினால், அவர்களுடைய பணத்தை சீனாவுக்கு எடுத்துச் செல்வார்கள். அந்த பணம் இந்தியாவிலேயே இருந்தால், நாம் அதற்காக மகிழ்ச்சி அடைந்தே ஆக வேண்டும். வரி கட்டுவதன் மூலம் நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

    நான் கிரிக்கெட் தொடர்பான கட்டுமான வேலைகளை சீன நிறுவனத்திற்கு வழங்கினால், சீன பொருளாதாரத்திற்கு உதவிக் கொண்டிக்கிறேன் என்று அர்த்தம். குஜராத் கிரிக்கெட் சங்கம் மிகப்பெரிய மைதானத்தை கட்டியுள்ளது. அந்த வேலை இந்திய நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

    இந்தியாவில் கிரிக்கெட் தொடர்பான வேலைகள் சுமார் ஆயிரம் கோடிக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சீன நிறவனத்திற்கு எதையும் வழங்கவில்லை’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 8-ந்தேதி தொடங்கும் நிலையில், பயிற்சிக்கான 30 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 30 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அதிகாரப்பூவ அணியை அறிவிக்கும்.

    பயிற்சிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 30 வீரர்கள் விவரம்:-

    1.மொயீன் அலி, 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. ஜானி பேர்ஸ்டோவ், 5. டொமினிக்  பெஸ், 6. ஜேம்ஸ் பிரேசி, 7. ஸ்டூவர்ட் பிராட், 8. ரோரி பேர்ன்ஸ், 9. ஜோஸ் பட்லர், 10. கிராவ்லி, 11. சாம் கர்ரன், 12. ஜோ டென்லி, 13. பென் போக்ஸ், 14. லெவிஸ் கிரேகோரி, 15. ஜென்னிங்ஸ், 16. டான் லாரன்ஸ், 17. ஜேக் லீச், 18. சாகிப் மெக்மூத், 19. கிரேக் ஓவர்ட்டன், 20. ஜேமி ஓவர்ட்டன், 21. மேத்யூ பார்க்கின்சன், 22. ஒல்லி போப், 23. ஒல்லி ராபின்சன், 24. ஜோ ரூட். 25, டாம் சிப்லி, 26. பென் ஸ்டோக்ஸ், 27. ஒல்லி ஸ்டோன், 28. அமர் விர்தி, 29. கிறிஸ் வோக்ஸ், 39. மார்க் வுட்.
    பிசிசிஐ-யின் ஏழு ஆணடு கால தடைக்காலம் முடிவடைய இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்-ஐ ரஞ்சி அணியில் சேர்க்க கேரள மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
    கேரள மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். இவர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தியது.

    இதனால் பிசிசிஐ அவருக்கு ஆயுட்கால தடைவிதித்தது. போலீஸ் வழக்கை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டார். அப்போது குற்றம் செய்யப்படவில்லை என்று கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 2018-ம் ஆண்டு கேரளா ஐகோர்ட் பிசிசிஐ-யின் தடையை நீக்கி உத்தரவிட்டது.

    கடந்த வருடம் உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசந்த் குறித்த வழக்கின்போது, தடைக்காலத்தை குறைக்க பிசிசிஐ-யின் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இதனால் பிசிசிஐ தடையை ஏழாண்டாக குறைத்தது.

    ஸ்ரீசந்தின் ஏழாண்டு தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் கேரள மாநில கிரிக்கெட் சங்கம் அவரை ரஞ்சி கோப்பைக்கான கேரள அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஆனால் உடற்தகுதி பெற்றால் மட்டுமே அணியில் இடம் பெறுவார்.

    இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனக்கு வாய்ப்பு கொடுத்த கேரள மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நான் உண்மையிலேயே நன்றிகடன் பட்டவன். என்னுடைய உடற்தகுதியை பெற்று அணிக்கு சிறந்த முறையில் திரும்புவேன். இது அனைத்து சர்ச்சைக்கும் விடைகொடுக்க வேண்டிய நேரம்’’ என்றார்.
    ஜெர்மனியின் முன்னணி கால்பந்து லீக்கான பன்டேஸ்லிகாவின் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக உறுதி செய்துள்ளது பேயர்ன் முனிச்.
    18 கிளப் அணிகள் பங்கேற்றுள்ள பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை தோற்கடித்தது. ராபர்ட் லெவான்டவ்ஸ்கி 43-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள பேயர்ன் முனிச் 24 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 76 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் இன்னும் 2 லீக் எஞ்சியுள்ள நிலையில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் உறுதி செய்து விட்டது.

    போரசியா டார்ட்மன்ட் 66 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. பேயர்ன் முனிச் அணி இந்த பட்டத்தை வெல்வது இது 30-வது முறையாகும். கடைசி 8 சீசனில் அந்த அணியே தொடர்ச்சியாக வாகை சூடியிருப்பது நினைவு கூரத்தக்கது.
    லடாக்கில் இந்திய வீரர்கள் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து டுவிட்டரில் பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் மது தொட்டப்பில்லில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

    கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக திரட்டப்படும் பிரதமர் பராமரிப்பு நிதியை விமர்சிக்கும் வகையில், ‘‘சவப்பெட்டிகளில் பிரதமர் பராமரிப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருக்குமா? என்பதை பார்க்க விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் டுவிட்டர் பதிவை அவர் சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். டுவிட்டரில் சர்சைக்குரிய கருத்து தெரிவித்த டாக்டர் மது தொட்டப்பில்லிலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அவரது தவறான கருத்துக்கு வருந்துவதாகவும் சென்னை அணி கூறியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினார் என்று முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
    1989-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சச்சின் தெண்டுல்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 200 டெஸ்டில் ஆடி 51 சதம் உள்பட 15,921 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 49 சதம் உள்பட 18,426 ரன்னும் குவித்துள்ளார். ஒரே ஒரு 20 ஓவர் போட்டியிலும் ஆடி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் சிறந்த தொடக்க வீரராக உருவெடுத்த தெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளை படைத்தார். ஆனால் 2007-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிடில் வரிசையில் விளையாட தெண்டுல்கருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் (ஆஸ்திரேலியா) ஆலோசனையின் பேரில் செய்யப்பட்ட இந்த பேட்டிங் வரிசை மாற்றம் தெண்டுல்கருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் மோசமாக தோற்று தொடக்க சுற்றுடன் வெளியேறியது. அந்த போட்டியுடன் கிரேக் சேப்பலின் பயிற்சியாளர் பதவியும் காலியானது.

    கிரேக் சேப்பல் வெளியேறிய பிறகு 3 ஆண்டு காலம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் (தென்ஆப்பிரிக்கா), பேட்டிங் வரிசை மாற்றத்தால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 2007-ம் ஆண்டில் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து விலக நினைத்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிர்ஸ்டன் சமூக வலைதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நான் ஏற்க வந்த தருணத்தில் தெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலக விரும்பினார். தனக்கு பொருத்தமான பேட்டிங் வரிசையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நினைப்பதாக நான் அறிந்தேன்.

    சச்சின் தெண்டுல்கர், கேரி கிர்ஸ்டன்

    பிறகு அவர் விரும்பிய வரிசையில் (தொடக்க ஆட்டக்காரர்) விளையாட திரும்பிய அடுத்த 3 ஆண்டு காலத்தில் 18 சர்வதேச சதங்களை அடித்து அசத்தினார். அத்துடன் நாங்கள் 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் வென்றோம். இந்திய அணியினுடனான எனது பயிற்சி பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் சவுகரியமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் பணியை நான் சரியாக கவனித்தேன்’’ என்றார்.
    100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
    நியூயார்க்:

    தோகாவில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 9.76 வினாடிகளில் இலக்கை எட்டிய அவரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார். அந்த போட்டியில் தொடர் ஓட்டத்திலும் மகுடம் சூடியிருந்தார். இந்த நிலையில் கோல்மேன் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    போட்டி இல்லாத காலங்களிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதற்கு வசதியாக அவர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், நேரம், இதர பணிகள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயிலில் தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் 60 நிமிடங்கள் தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு சோதனைக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

    ஓராண்டில் மூன்று முறை தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற விதிமுறையை மீறும் போது தடை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். தோகா உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக கோல்மேன் இத்தகைய பிரச்சினையில் சிக்கினார். பிறகு தொழில்நுட்ப குளறுபடியை சுட்டிகாட்டி தப்பித்தார். இப்போது அவர் மறுபடியும் இதே சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் தான் எங்கு இருக்கிறேன் என்ற ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய அவர் டிசம்பர் 9-ந்தேதியும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தவறினார். ஓராண்டில் 3-வது முறையாக இந்த விதிமுறையை மீறியதால் அவரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் தடகளத்திற்கான நேர்மை யூனிட் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இது பற்றி விசாரணை நடக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு வரை தடை விதிக்கப்படும். அவ்வாறு நிகழ்ந்தால் அவரால் 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.

    இந்த விவகாரம் குறித்து 24 வயதான கோல்மேன் டுவிட்டரில் அளித்த விளக்கத்தில் ‘கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி குறிப்பிட்ட நேரத்தில் நான் பக்கத்தில் சிறிது நேரம் ஷாப்பிங் சென்று விட்டு வந்தேன். அந்த இடைவெளியில் ஊக்கமருந்து எடுப்பவர் எனது வீட்டுக்கு வந்து விட்டு சென்றதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் ஒரு மணி நேரம் அங்கு இருக்கவில்லை. அவர் எனக்கு போன் செய்திருந்தால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். வழக்கமாக மாதிரிகள் சேகரிக்க வரும் நபர், எனக்கு போன் செய்வார். ஆனால் இந்த முறை நான் இச்சோதனையை தவற விட வேண்டும் என்று உள்நோக்கத்துடன் செயல்பட்டு இருப்பது போல் தோன்றுகிறது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு கூட நான் பல முறை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு உள்ளேன்.

    உடல்திறனை அதிகரிக்க நான் ஒரு போதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதில்லை. ‘நான் தவறு செய்வதில்லை’ என்பதை நிரூபிக்க எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருப்பேன்.

    உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு. ஆனால் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் தேவை’ என்று கூறியுள்ளார்.
    சீனாவின் பொருட்களை வாங்காமல் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ‘நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும், அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா, கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், முகமது கைப், இர்பான் பதான், பத்ரிநாத், ஆகாஷ் சோப்ரா மற்றும் வீரர்கள் ஷிகர் தவான், விஜய் சங்கர் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கருத்து தெரிவிக்கையில், ‘சீனாவுக்கு எதிரான மோதலில் நமது ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நாட்டுக்கான சேவையில் உயிர்நீத்த வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தலைவணங்குகிறேன்.

    கொரோனாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இணைந்து போராடும் வேளையில் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. சீனாவுடன் நாம் நல்ல உறவை வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீனாவின் பொருட்களை வாங்காமல் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சீன பொருட்கள் நமது நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க அரசு கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.
    ×