என் மலர்tooltip icon

    செய்திகள்

    இர்பான் பதான்
    X
    இர்பான் பதான்

    ரசிகர்கள் இல்லாத ஐபிஎல், விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது: இர்பான் பதான்

    ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என்று முன்னாள் இந்திய அணி ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘விருந்தினர்கள் இல்லாமல் ஒரு திருமணம் முழுமையாகாது.  ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால், நமக்கே அதே உணர்வு ஏற்படும். ஆனால், திருமணம் விருந்தினர்கள் இல்லாமலும் நடக்கலாம். நீதிமன்ற திருமணங்கள் போன்ற வாய்ப்புகள் உள்ளன. இறுதியில் திருமணங்கள் நடக்கும். அதுபோன்றுதான் இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×