என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் என சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இதே கருத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சனும் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘டோனி இன்னும் விளையாடுவதை விரும்புகிறார். அவர் எப்போதுமே மதிப்புமிக்க வீரர் தான். அவரது திறமையையும், வெளிப்படுத்தும் கடின முயற்சியையும் பார்க்கும் போது அவரால் 40 வயதை கடந்தும் விளையாட முடியும். அவர் தனது உடல்தகுதியை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார். நான் டோனியின் தீவிர ரசிகர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவோ அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலோ அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார். எல்லா சீசன்களிலும் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை டோனிக்கு உண்டு. ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். போட்டிக்கு 39 வயதான டோனி தயாராகி வருகிறார். டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில்
‘இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டிலும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அனேகமாக 2022-ம் ஆண்டு கூட அவர் சென்னை அணிக்காக விளையாடுவார். டோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார் என்பதை ஊடகம் மூலமே அறிகிறேன். ஆனால் டோனி குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் தனது பொறுப்பு என்ன? தன்னையும், அணியையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும்’ என்றார்.
இதே கருத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வாட்சனும் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘டோனி இன்னும் விளையாடுவதை விரும்புகிறார். அவர் எப்போதுமே மதிப்புமிக்க வீரர் தான். அவரது திறமையையும், வெளிப்படுத்தும் கடின முயற்சியையும் பார்க்கும் போது அவரால் 40 வயதை கடந்தும் விளையாட முடியும். அவர் தனது உடல்தகுதியை சிறந்த முறையில் கவனித்துக் கொள்கிறார். நான் டோனியின் தீவிர ரசிகர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவோ அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலோ அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாளை தொடங்கும் நிலையில், பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து களம் இறங்க இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
முதல்வரிசை பேட்டிங்கில் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி, ஒல்லி போப், ஜோ ரூட் ஆகியோர் இருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த போட்டியில் கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர் இல்லை என்றால் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கும். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்கள். முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவரட் பிராட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டில் 90 ரன்களுக்கு மேல் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதனால் அவர் நெருக்கடிக்குள்ளாகி உள்ளார். இந்த போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவார்.
பென் ஸ்டோக்ஸ் சொந்த விசயம் காரணமாக இரண்டு டெஸ்டிலும் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்குப் பதிலாக ஒல்லி ராபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரைக்கும் பந்து வீச்சில் முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி உள்ளனர். சுழற்பந்து வீச்சில் யாசர் ஷா உள்ளார். பேட்டிங்கில் ஷான் மசூத் முதல் இன்னிங்சில் சதம் அடித்தார். ஆனால் 2-வது இன்னிங்சில் ஏமாற்றம் அளித்தார். கேப்டன் அசார் அலி இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினார். இந்த டெஸ்டிலும் சரியாக விளையாட வில்லை என்றால் கேப்டன் பதவியை தக்க வைப்பது கடினமாக இருக்கும். பாபர் அசாம் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் ஏமாற்றம் அளித்தார். ஒரு அணியாக சேர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள 14 வீரர்கள் விவரம்:-
1. ஜோ ரூட் (கேப்டன்), 2. ஜேம்ஸ் ஆண்டரசன், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4, டொமினிச் பெஸ், 5. ஸ்டூவர்ட் பிராட், 6. ரோரி பேர்ன்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. சாம் கர்ரன், 10. ஒல்லி போப், 11. ஒல்லி ராபின்சன், 12. டாம் சிப்லி, 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க் வுட்.
துபாய்க்கு செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் செல்லமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே ஒரு குடும்பம் போன்றது என்று சொல்லலாம். பெரும்பாலான வீரர்கள் வயது மூத்தவர்கள் என்பதால் குடும்பத்துடன் போட்டிகளை காண வருவார்கள். போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் குடும்பத்தினருடன் மைதானத்திற்குள் உலா வருகிறார்கள்.
எம்.எஸ். டோனி மகள் ஷிவா, வாட்சனின் குழந்தைகள், ரெய்னாவின் குழந்தை போன்றோர் செய்யும் குட்டி சேட்டைகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியான விசயமாக இருக்கும்.
கேலரில் இருந்து போட்டிகளை பார்க்கும்போது விசில் அடித்து, கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது.
வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயோ-செக்யூர் என்ற வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குள் சென்றவர்கள் வெளியே செல்லக்கூடாது, உணவு அருந்துதல், குளிர்பானங்கள் அருந்துதல் என எல்லா விசயங்களிலும் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த குழுவையும் பாதித்து விடும்.
பிசிசிஐ குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஆனால் வீரர்களுக்கான பயோ-செக்யூர் வளையத்திற்குள் அவர்களும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் துபாய் செல்லும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செலலமாட்டார்கள். அதுபோல் சமூக வலைதளம் போன்ற வேலைகளை செய்யும் சப்போர்ட் ஸ்டாஃப்களும் செல்ல மாட்டார்கள் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘குடும்ப உறுப்பினர்கள் தொடரின் முதல் பகுதியின்போது அணியுடன் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். அதுபோன்று சப்போர்ட் ஸ்டாஃப்களும் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். பாதுகாப்பு போன்ற நடைமுறைகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தபின் முடிவு செய்வோம்.

நாங்கள் எந்த ரசிகர்களையும் அழைத்துச் செல்லவில்லை. பயோ-செக்யூர் சூழ்நிலையில் எங்களுக்கு அதுபோன்ற திட்டம் இல்லை. எங்களுடைய சமூக வலைதளம் மற்றும் வெப் அணிகள் ரசிர்கள் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
நாங்கள் சென்னையை மையமான கொண்ட அணி. ஆனால் 2018-ல் புனேயில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மாறுபட்ட கண்டிசன் என்றாலும், நாங்கள் அந்த வருடம் கோப்பையை கைப்பற்றினோம். எந்தவிதமாக கண்டிசன் இருந்தாலும், அதற்கேற்ப அணி தயார் செய்து கொள்ளும். ஐக்கிய அரபு அமீரகம் கண்டிசன் அணிக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அணிகள் வருகிற 21-ந்தேதி துபாய் புறப்பட இருக்கிறது, புறப்படுவதற்கு முன் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா இல்லை என்பது உறுதியானப் பிறகுதான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷந்த் யாக்னிக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதை அவர் தனது டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘‘கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், பிசிசிஐ-யின் வழிகாட்டு நெறிமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியுடன் இணைய எனக்கு இன்னும் இரண்டு நெகட்டிவ் முடிவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிபா கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022-ல் நடக்கிறது. அதேபோல் ஆசிய கோப்பை கால்பந்து 2020-ல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.
கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.
பிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் 13-வது ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதிகாரபூர்வ போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா என ஏறக்குறைய 15 வீரர்கள் சில தினங்களில் சென்னைக்கு வருகை தர உள்ளனர்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சென்னையில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளோம். அரசாங்கம் தரப்பில் வாய்மொழியாக சம்மதம் தந்து விட்டனர். இருப்பினும் இன்னும் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை. எழுத்துப்பூர்வ அனுமதி கிடைத்ததும் இந்திய வீரர்களுக்கு மட்டும் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
வீரர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு தான் சென்னைக்கு வருவார்கள். இங்கு மேலும் இரண்டு முறை அதாவது வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். பயிற்சி முகாம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் வருகிற 21-ந்தேதி சென்னையில் இருந்து அமீரகம் புறப்பட்டு செல்வார்கள்’ என்றார்.
39 வயதான டோனி கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு ஐ.பி.எல். தள்ளிப்போனதும் சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று விட்டார். ஐ.பி.எல். போட்டி நடப்பது உறுதியானதும் அவர் ராஞ்சியில் உள்விளையாட்டு அரங்கில் ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது.
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் ஓரிரு நாட்களில் பெங்களூருவில் சங்கமிக்க உள்ளனர். இவர்கள் இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கிறார்கள். அதன் பிறகு 22 அல்லது 23-ந்தேதி தனி விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்படுகிறார்கள். அதற்கு முன்பாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் ஆகஸ்டு 20-ந்தேதி புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அணிகளும் 22-ந்தேதிக்குள் கிளம்ப திட்டமிட்டு உள்ளன. வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்து அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
மேலும் வலை பயிற்சியில் பயன்படுத்துவதற்கு என்று கிட்டத்தட்ட 50 வலை பயிற்சி பந்து வீச்சாளர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல்தர மற்றும் தேசிய அளவிலான 19, 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் விளையாடியவர்கள்.
‘எல்லாம் சரியாக அமைந்தால் பிரத்யேகமாக 10 பவுலர்களை பயிற்சிக்கு உதவுவதற்காக அமீரகம் அழைத்துச்செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். அவர்கள் ஐ.பி.எல். தொடங்கும் வரை எங்கள் அணியுடன் இருப்பார்கள்’ என்று சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் குறிப்பிட்டார். கொல்கத்தா அணி நிர்வாகமும் 10 வலை பயிற்சி பவுலர்களை தயார் படுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளது.
டோனியின் குழந்தை ஷிவா ஒரு குழந்தையை தனது கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை யார் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. அதை டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் நிர்வகிக்கிறார்கள். அதேபோல் டோனியின் மனைவி சாக்ஷிக்கும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வ பக்கம் உள்ளது.
இந்நிலையில், ஷிவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு புகைப்படத்தை சாக்ஷி பகிர்ந்துள்ளார். அதில் டோனியின் மகள் ஷிவா தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தை டோனியின் மனைவி சாக்ஷி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
ஷிவாவின் கையில் இருப்பது யார் குழந்தை என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் டோனி-சாக்ஷி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும், பல ரசிகர்கள் டோனி-சாக்ஷிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஹர்திக் பாண்டியா-நடாஷா தம்பதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. பாண்டியாவின் குழந்தையை தான் டோனியின் குழந்தை ஷிவா தனது கையில் வைத்துள்ளார் என ரசிகர்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிரத்யேக நெட் பவுலர்களை துபாய் அழைத்துச் செல்ல இருக்கிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் வருகிற 21-ந்தேதி துபாய் செல்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் டோனியின் வற்புறுத்தலுக்கு இணங்க சேப்பாக்கத்தில் ஒருவாரம் பயிற்சி மேற்கொண்டு 22-ந்தேதி புறப்பட இருக்கிறது.
ஒவ்வாரு அணிகளும் 24 வீரர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் கூட ஒன்றிரண்டு நாட்களுக்குள் தயாராகி விடுவார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் பழைய பார்முக்கு திரும்ப கூடுதல் நாட்கள் ஆகலாம்.
மேலும், துபாயில் தனிமைப்படுத்திக் கொண்டபின் அணிகள் பயற்சி மேற்கொள்ளும். 24 வீரர்கள் என்பதால் இரண்டு அணியாக பிரித்து விளையாடுவது கடினம். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள உள்ளூர் பந்து வீச்சாளர்களை வலைப்பயிற்சிக்கு அணிகள் பயன்படுத்திக் கொள்ளும்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பலத்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால் துபாயில் உள்ளூர் நெட் பவுலர்களை தயார் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 23 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட, முதல்-தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 நெட் பவுலர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 பேரை அழைத்துச் செல்ல இருக்கிறது. டெல்லி அணி 6 வீரர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.
இந்த வீரர்கள் போட்டி தொடங்கும்வரை அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
ஜடேஜா மாஸ்க் அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி மாஸ்க் அணியாதது குறித்து கேள்வி கேட்ட போலீசாரிடம், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகிய இரண்டையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில மாநில அரசுகள் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனத் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜா தனது மனைவியுடன் குஜாராத் மாநிலம் ராஜ்கோட் கிஸன்பாரா சவுக் பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் ஜடேஜா சென்ற காரை மறித்துள்ளனர். அப்போது ஜடேஜா முகக்கவசம் அணிந்திருக்கிறார். ஆனால், அவரது மனைவி ரிவாபா முகக்கவசம் அணியவில்லை. இதுகுறித்து பெண் போலீஸ் கோசை என்பவர் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டுள்ளார்.
இதனால் ஜடேஜா மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் மேல் அதிகாரிகள் வரை சென்றுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தியதில் ஜடேஜா மனைவிக்கும், போலீசார்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்ற வாக்குவாதம் முற்றியதால் பெரிதாக்கப்பட்டுள்ளது என்று துணை கமிஷனர் மனோகர்சின் ஜடேஜா தெரிவித்தார்.
இதற்கிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் கோசை அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அரைமணி நேரம் கழித்து டிஜ்சார்ஜ் செயயப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எப்.ஐ.ஆர். ஏதும் பதிவு செய்யவில்லை.
ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த லங்கா பிரிமீயர் லீக் அறிமுக சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் போர்டு டி20 லீக்கை நடத்த திட்டமிட்டது. வருகிற 28-ந்தேதி அறிமுக டி20 லீக் லங்கா பிரிமீயர் லீக்கில நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா, ஜாஃப்னா நகரங்களை கொண்டு அணிகள் அறிவிக்கப்பட்டன. அட்டவணைகளை தயார் செய்து கொண்டிருந்த வேலையில், வெளிநாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில்தான் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அப்போது வெளிநாட்டு இருந்து வரும் வீரர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28-ந்தேதி போட்டி ஆரம்பிக்கும் நிலையல் வீரர்கள் ஏலம், அணி அறிமுக விழா இதைத்தாண்டி வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை. இதனால் நவம்பர் மாதத்திற்கு தொடரை ஒத்தி வைத்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கி வீரர் மன்தீப் சிங் அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விளையாட்டு போட்டிகள் இந்தியாவில் இதுவரை நடைபெறாமல் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி முகாம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்திய ஹாக்கி வீரர்களுக்கு வருகிற 20-ந்தேதியிலிருந்து பெங்களூருவில் பயிறசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹாக்கி வீரர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மன்தீப் சிங், கேப்டன் மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜாஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதுர் பதாக் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுக்கு இந்திய விளையாட்டு அணையத்தின் வளாகத்தில் சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மன்தீப் சிங்கிற்கு நேற்றிரவு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. ஆக்சிஜன் அளவு குறைந்தால் முதல் கட்ட அளவில் இருந்து நோய் அடுத்தக்கட்டத்திற்கு செல்வதாக பொருள். இதனால் உடனடியாக எஸ்.எஸ். ஸ்ப்ராஷ் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை்ககு முன்னெச்சரிக்கை காரணமாக மாற்றப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வயதாகும் மன்தீப் சிங் 129 போட்டிகளில் விளையாடி 60 கோல்கள் அடித்துள்ளார். 2018-ம் ஆண்டு இந்திய அணி ஆசியசாம்பியன்ஸ் டிராபியை வெல்லும்போது அணியில் ஒரு நபராக இருந்தார் என்பது குறி்ப்பிடத்தக்கது.
டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி:
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-
2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வயது கேப்டனான டோனி இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார். டோனியின் கேப்டன்ஷிப் அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் அவர் பவுலரிடம் பந்தை கொடுத்து பவுலரையே தனது பந்து வீச்சுக்கு தகுந்த மாதிரி பீல்டிங்கை அமைத்து விட்டு பந்து வீசும்படி கூறுவார். அது சரியாக அமையாவிட்டால், பவுலரிடம் அனுமதி பெற்று தானே பீல்டிங்கை உருவாக்குவார். பவுலர் நன்றாக வீசிய பந்தை பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலரை கைதட்டி பாராட்டுவார்.
சிக்ஸ் அடித்ததற்காக கவலைப்பட வேண்டாம் நல்ல பந்தை தான் பேட்ஸ்மேன் தனது திறமையால் சிக்சராக அடித்து இருக்கிறார் என்று தேற்றுவார். இதுபோன்ற பாராட்டுதல்கள் எல்லோரிடம் இருந்தும் வராது. சக வீரர் தனது தவறை திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும். என்பதை எல்லோருக்கு தெரியும்படியாக வெளிப்படையாக சொல்லாமல், தனியாக அழைத்து தெரிவிப்பார். அது அவருடைய வெற்றிகரமான கேப்டன் செயல்பாட்டுக்கு ஒரு காரணமாகும். அமைதியாக சிந்திக்கும் திறன் கொண்ட அவர் சீனியர் வீரர்கள் கூறும் கருத்துகளை கேட்டு ஆலோசித்து முடிவு எடுப்பார். அணியை வெற்றிகரமாக நடத்தி செல்தவற்கு எந்த வீரர்கள் தனக்கு தேவை என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






