search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலைப்பயிற்சியில் எம்எஸ் டோனி
    X
    வலைப்பயிற்சியில் எம்எஸ் டோனி

    பேட்டிங்கை மெருகேற்ற பிரத்யேக நெட் பவுலர்களை துபாய் அழைத்துச் செல்லும் ஐபிஎல் அணிகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிரத்யேக நெட் பவுலர்களை துபாய் அழைத்துச் செல்ல இருக்கிறது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணிகள் வருகிற 21-ந்தேதி துபாய் செல்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் டோனியின் வற்புறுத்தலுக்கு இணங்க சேப்பாக்கத்தில் ஒருவாரம் பயிற்சி மேற்கொண்டு 22-ந்தேதி புறப்பட இருக்கிறது.

    ஒவ்வாரு அணிகளும் 24 வீரர்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். பந்து வீச்சாளர்கள் கூட ஒன்றிரண்டு நாட்களுக்குள் தயாராகி விடுவார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் பழைய பார்முக்கு திரும்ப கூடுதல் நாட்கள் ஆகலாம்.

    மேலும், துபாயில் தனிமைப்படுத்திக் கொண்டபின் அணிகள் பயற்சி மேற்கொள்ளும். 24 வீரர்கள் என்பதால் இரண்டு அணியாக பிரித்து விளையாடுவது கடினம். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் உள்ள உள்ளூர் பந்து வீச்சாளர்களை வலைப்பயிற்சிக்கு அணிகள் பயன்படுத்திக் கொள்ளும்.

    தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பலத்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால் துபாயில் உள்ளூர் நெட் பவுலர்களை தயார் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 23 வயதிற்கு உட்பட்ட, 19 வயதிற்கு உட்பட்ட, முதல்-தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் பந்து வீச்சாளர்களை அழைத்து செல்ல இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 நெட் பவுலர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 பேரை அழைத்துச் செல்ல இருக்கிறது. டெல்லி அணி 6 வீரர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது.

    இந்த வீரர்கள் போட்டி தொடங்கும்வரை அணிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
    Next Story
    ×