search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளுடன் எம்எஸ் டோனி
    X
    மகளுடன் எம்எஸ் டோனி

    குடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

    துபாய்க்கு செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் செல்லமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே ஒரு குடும்பம் போன்றது என்று சொல்லலாம். பெரும்பாலான வீரர்கள் வயது மூத்தவர்கள் என்பதால் குடும்பத்துடன் போட்டிகளை காண வருவார்கள். போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் குடும்பத்தினருடன் மைதானத்திற்குள் உலா வருகிறார்கள்.

    எம்.எஸ். டோனி மகள் ஷிவா, வாட்சனின் குழந்தைகள், ரெய்னாவின் குழந்தை போன்றோர் செய்யும் குட்டி சேட்டைகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியான விசயமாக இருக்கும்.

    கேலரில் இருந்து போட்டிகளை பார்க்கும்போது விசில் அடித்து, கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது.

    வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயோ-செக்யூர் என்ற வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குள் சென்றவர்கள் வெளியே செல்லக்கூடாது, உணவு அருந்துதல், குளிர்பானங்கள் அருந்துதல் என எல்லா விசயங்களிலும் மிகவும் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த குழுவையும் பாதித்து விடும்.

    பிசிசிஐ குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஆனால் வீரர்களுக்கான பயோ-செக்யூர் வளையத்திற்குள் அவர்களும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் துபாய் செல்லும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செலலமாட்டார்கள். அதுபோல் சமூக வலைதளம் போன்ற வேலைகளை செய்யும் சப்போர்ட் ஸ்டாஃப்களும் செல்ல மாட்டார்கள் என்று அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுகுறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘குடும்ப உறுப்பினர்கள் தொடரின் முதல் பகுதியின்போது அணியுடன் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். அதுபோன்று சப்போர்ட் ஸ்டாஃப்களும் அழைத்துச் செல்லப்படமாட்டார்கள். பாதுகாப்பு போன்ற நடைமுறைகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தபின் முடிவு செய்வோம்.

    வாட்சன் மனைவி

    நாங்கள் எந்த ரசிகர்களையும் அழைத்துச் செல்லவில்லை. பயோ-செக்யூர் சூழ்நிலையில் எங்களுக்கு அதுபோன்ற திட்டம் இல்லை. எங்களுடைய சமூக வலைதளம் மற்றும் வெப் அணிகள் ரசிர்கள் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    நாங்கள் சென்னையை மையமான கொண்ட அணி. ஆனால் 2018-ல் புனேயில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மாறுபட்ட கண்டிசன் என்றாலும், நாங்கள் அந்த வருடம் கோப்பையை கைப்பற்றினோம். எந்தவிதமாக கண்டிசன் இருந்தாலும், அதற்கேற்ப அணி தயார் செய்து கொள்ளும். ஐக்கிய அரபு அமீரகம் கண்டிசன் அணிக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×