என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து விளையாட பயப்படுகிறார்கள் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் குவித்து 107 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.
தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டிலும் திணறி வருகிறது. ஒரு கட்டத்தில் 126 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது, முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அபித் அலி, ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய வழக்கமான ஷாட்ஸ் ஆட பயப்படுகிறார்கள். அவர்கள் அவுட்டான பெரும்பாலான பந்துகளை சந்தித்தபோது, பேட் காலுக்குப்பி்ன்னாடி இருந்திருக்கும்.
பந்தை சந்திக்கும்போது பேட் காலுக்கு முன்னாள் இருக்க வேண்டும். தற்காப்பு அணுகுமுறையை கையாள்வதால் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுக்கிறார்கள்.
இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால், ஆக்ரோசமான கிரிக்கெட் ஆட வேண்டும் என்று பேட்ஸ்மேன்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த டெஸ்டில் தோல்வியில் இருந்து தப்பிக்க மழையை சார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.
யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என துவம்சம் செய்து அரையிறுதிக்கு முனனேறியது பேயர்ன் முனிச்.
யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன
21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி நேரத்தில் பேயர்ன் முனிச் 4-1 என முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. 57-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் லூயிஸ் சுவாரஸ் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-4 எனப் பின்தங்கியிருந்தது.
அதன்பின் பேயர்ன் முனிச் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 63-வது நிமிடத்தில் ஜோசுவா கிம்மிச், 82-வது நிமிடத்தில் ராபர்ட் லெவன்டாஸ்கி ஒரு கோலும் அடித்தனர்.

பார்சிலோனா அணியில் இருந்து பேயர்ன் முனிச் அணிக்கு லோன் மூலம் சென்ற பிலிப்பே கவுட்டினோ 85-வது நிமிடத்தில் ஒரு கோலும், 89-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடிக்க பேயர்ன் முனிச் 8-2 என அபார வெற்றி பெற்று பார்சிலோனாவை துவம்சம் செய்தது.
மெஸ்சி தலைமையிலான பார்சிலோனாவுக்கு இது மிகவும் மோசமான தோல்வியாகும். மேலும், மெஸ்சி கால்பந்து வரலாற்றில் இதுபோன்ற மோசமான தோல்வியை சந்தித்தது கிடையாது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அபித் அலி, ரிஸ்வான் அரை சதமடிக்க இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
சவுதாம்ப்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் அபித் அலி களமிறங்கினர். அபித் அலி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். பாபர் அசாம் 47 ரன்னில் அவுட்டானார். மழையால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டு இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் நேற்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் மொகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா3 விக்கெட், சாம் கரன், வோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
செல்சி அணிக்காக கடந்த ஏழு வருடங்களாக விளையாடிய பிரேசில் வீரர் வில்லியன் ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் அர்சனல் அணியுடன 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் கால்பந்து அணி வீரர் வில்லியன். இவர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வந்தார். 32 வயதாகும் வில்லியன் செல்சி அணிக்காக 339 போட்டிகளில் விளையாடி 63 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு முறை பிரிமீயர் லீக்கை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
செல்சி அணியுடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. வில்லியன் உடன் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு செல்சி தயாராக இருந்தது. ஆனால் வில்லியன் நீண்ட கால ஒப்பந்தத்திற்கு விரும்பினார். இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கோண்டே சென்றது. குறிப்பிட்ட காலத்திற்குள் செல்சி அவரை ஒப்பந்தம் செய்ய தவறியது.
இதனால் ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் அர்சனல் அணிக்கு செல்ல விரும்பினார். தற்போது அர்சனல் 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் அர்சனல் செல்சி அணிக்கு பணம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையில் சர்வதேச ஒயிட்-பால் கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதால், ஐபிஎல் முதல் வாரத்தில் முக்கிய வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவதால் அனைத்து வீரர்களும் முதலில் இருந்து கடைசி வரை இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 4-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் முதல்வார ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்து. இதனால் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஜாஃ.ப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ், அண்ட்ரூ டை, டாம் கர்ரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஐபிஎல் போட்டியின் 2-வது வாரத்தில்தான் கலந்து கொள்ள முடியும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி் ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன் (தேர்வு செய்யப்பட்டால்) ஆகியோர் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ், மோர்கன், டாம் பாண்டன் (தேர்வு செய்யப்பட்டால்) ஆகியோர் உள்ளனர்.
மும்பை அணியில் மட்டும் யாரும் இடம் பெறவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டுவிட் வார்னர், பேர்ஸ்டோவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர அணியில் மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன் இடம் பிடித்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்அணியில் ஜேசன் ராய், அலேக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், இடம் பிடித்துள்ளனர்.
கிங்ஸ் லெவன பஞ்சாப் அணியில் கிளென் மேக்ஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.
பொல்லார்டு, இம்ரான் தாஹிர், ரஷித் கான் போன்றோர் கரீபியன் லீக்கில் விளையாடுவது ஐபிஎல் தொடரில் பயனளிக்கும் என்ற ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் வரும் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 10-ந்தேதி கரீபியன் பிரிமீயர் லீக் நடக்கிறது.
இந்த தொடரில் பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்), இம்ரான் தாஹிர் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் பயனளிப்பதாக இருக்கும் என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள், அங்கு காட்டிய திறமையை அப்படியே ஐபிஎல் தொடரில் காட்டுவார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால், மற்ற வீரர்களை காட்டிலும் நிச்சயம் பயனடைவார்கள்.
ஒரு மாத காலம் விளையாடிய பின், ஐக்கிய அரபு அமீரகம் வரும்போது பொல்லார்டு, இம்ரான் தாஹிர், ரஷத் கான் ஆகியோருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று கூட இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தினால், 18 வயது வீரர்கள் போல் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு அர்ப்பணிப்பான வீரர்.
வயதை பற்றி பேசும்போது, அதிகமான போட்டியில் விளையாடும்போது, இந்த வயதில் அதிக பயிற்சி அது எப்போதுமே சிறந்ததாக இருக்கும். கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடுவது அவருக்கு சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.
ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்தும் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டது.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் ஆஸ்திரேலியாவுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து விளையாடுகிறது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது.
அதன்படி டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 4, 6, மற்றும் 8-ந்தேதிகளில் சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர்11, 13 மற்றும் 16-ந்தேதிகளில் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடக்கிறது.
ஆஸ்திரேலியா அணி ஆகஸ்ட் 24-ந்தேதி இங்கிலாந்து செல்கிறது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
லிஸ்பன்:
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிகட்ட ஆட்டங்கள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியும், அடலன்டா அணியும் (இத்தாலி) மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் அடலன்டா வீரர் மரியோ பாசலிக் கோல் அடித்தார். பந்தை கட்டுப்பாட்டில் (61 சதவீதம்) வைத்திருப்பதிலும், கோல் கம்பத்தை முற்றுகையிட்டு ஷாட் அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணியே ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் எதிரணியின் தடுப்பு அரணை அவ்வளவு எளிதில் உடைக்க முடியவில்லை. நெய்மார், கைலியன் பாப்பே ஆகிய நட்சத்திர வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் பந்தை வலைக்குள் திருப்ப முடியவில்லை. அவர்களது சில ஷாட்களை அடலன்டா கோல் கீப்பர் மார்கோ ஸ்போர்ட்டில்லோ முறியடித்தார்.
அடலன்டா வெற்றியை நெருங்கிய சமயத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் தட்டிக்கொடுத்த பந்தை மர்கியூனோஸ் (90-வது நிமிடம்) கோலாக்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதைத் தொடர்ந்து காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் நிமிடத்தில் மற்றொரு பி.எஸ்.ஜி. வீரர் சோவ்போ மோட்டிங் கோல் போட்டு அசத்தினார். முடிவில் பி.எஸ்.ஜி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. பி.எஸ்.ஜி. அணி கடைசியாக 1995-ம் ஆண்டில் அரைஇறுதியில் விளையாடி அதில் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டிக்கு தயாராக சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகி இருக்கிறார்.
சென்னை:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளின் படி நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பலக்கட்ட கொரோனா பரிசோதனைக்கு பிறகு தான் போட்டி நடைபெறும் இடங்களுக்குள் அடியெடுத்து வைக்க முடியும்.
இந்த போட்டி தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஒரு வாரம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக கேப்டன் டோனி ராஞ்சியில் நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். அந்த சோதனையில் டோனிக்கு கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதேபோல் மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அத்துடன் சென்னையிலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.
பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று அல்லது நாளை தனி விமானம் மூலம் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள் அனைவரும் சென்னையில் சங்கமித்ததும் பயிற்சி முகாம் உடனடியாக தொடங்கும். பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட தனிப்பட்ட பணி காரணமாக சென்னையில் நடக்கும் பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந் தேதி அமீரகத்துக்கு புறப்படும் முன்பாக அவர் சென்னை வந்து அணியினருடன் இணைந்து கொள்வார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்சின் பயிற்சி முகாமை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த தமிழக அரசு எழுத்துபூர்வமாக அனுமதி அளித்துள்ளது. பூட்டிய ஸ்டேடியத்தில் இந்த பயிற்சி முகாம் நடைபெறும். தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், உதவி பயிற்சியாளர் மைக் ஹஸ்சி ஆகியோர் வருகிற 22-ந் தேதியில் துபாயில் அணியினருடன் சேருவார்கள். பந்து வீச்சு ஆலோசகர் எரிக் சிமோன்ஸ், டிரெய்னர் கிரேக் கிங் 21-ந் தேதி துபாய்க்கு வருகிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர்களான பாப் டுபிளிஸ்சிஸ், நிகிடி ஆகியோர் செப்டம்பர் 1-ந் தேதிக்கு பின்னரும், இம்ரான் தாஹிர் கரிபியன் பிரிமீயர் லீக் போட்டி முடிந்த (செப்டம்பர் 10-ந் தேதி) பிறகும் அணியுடன் இணைவார்கள்’ என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
சவுதம்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷான் மசூத் மற்றும் அபித் அலி அடித்து விளையாட தொடங்கினர். எனினும் மசூத் (1) எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து உள்ளார்.
அபித்துடன் இணைந்து விளையாடிய கேப்டன் அசார் அலி (20 ரன்கள்) ஆன்டர்சன் பந்து வீச்சில் பர்ன்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து பாபர் அசாம் (7) மற்றும் அபித் (49) ரன்கள் எடுத்து விளையாடிய பொழுது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிப்படைந்தது. இங்கிலாந்தின் ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் மாற்றப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வந்துள்ள இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர்குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக், மன்தீப் சிங் ஆகிய 6 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் சாய் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மன்தீப் சிங்குக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு வழக்கமானதை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதும் அவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மற்ற 5 ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்தீப் சிங் சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 6 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் வருகிற 19-ந் தேதி தொடங்கும் என்று ‘சாய்’ அறிவித்துள்ளது. ஆக்கி இந்தியா நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
லாகூர்:
மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்று இருக்க வேண்டும்.
நல்ல நிலையில் இருந்து பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தான் அணியால் தொடரை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். கடினமான தருணத்தில் அணியினரின் உத்வேகத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது. 2-வது இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதால் பாகிஸ்தான் அணியினர் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
இதுபோன்ற தோல்வியினால் அணி வீரர்களின் உத்வேகம் குறையத்தான் செய்யும். ஆனால் அணி நிர்வாகத்தினர், வீரர்கள் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையை எடுத்துக்கூறி நம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என தெரிவித்தார்.