என் மலர்

  செய்திகள்

  இன்சமாம் உல் ஹக்
  X
  இன்சமாம் உல் ஹக்

  பந்தை அடித்து விளையாட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயப்படுகிறார்கள்: இன்சமாம் உல் ஹக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து விளையாட பயப்படுகிறார்கள் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
  இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் குவித்து 107 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால் 2-வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது.

  தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டிலும் திணறி வருகிறது. ஒரு கட்டத்தில் 126 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது, முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அபித் அலி, ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.

  இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய வழக்கமான ஷாட்ஸ் ஆட பயப்படுகிறார்கள். அவர்கள் அவுட்டான பெரும்பாலான பந்துகளை சந்தித்தபோது, பேட் காலுக்குப்பி்ன்னாடி இருந்திருக்கும்.

  பந்தை சந்திக்கும்போது பேட் காலுக்கு முன்னாள் இருக்க வேண்டும். தற்காப்பு அணுகுமுறையை கையாள்வதால் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுக்கிறார்கள்.

  இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால், ஆக்ரோசமான கிரிக்கெட் ஆட வேண்டும் என்று பேட்ஸ்மேன்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த டெஸ்டில் தோல்வியில் இருந்து தப்பிக்க மழையை சார்ந்திருக்க வேண்டும்’’ என்றார்.
  Next Story
  ×