என் மலர்
விளையாட்டு
- 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
- 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள்ம் இடம் பெற்றுள்ளன.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை போட்டி (டி20) இன்று தொடங்கி 28-ம் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஆசிய கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி உடனிருந்தார்.
- 7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
- மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.
- இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார். விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஜிதேஷ் சர்மா முதல் தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் 3-வது வரிசையில் ஆடுவாரா? அல்லது 5-வது நிலையில் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோரும் அணியில் இடம்பெறுவார்கள். வேகப்பந்தில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்தில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தியும் தேர்வு பெறுவார்கள்.
இந்திய அணி கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடியது.
சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிக் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் ஆசிய கோப்பையில் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
முகமது வாசிம் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாடும் வேட்கையில் உள்ளது. அந்த அணி சமீபத்தில் நடைபெற்ற 3 நாடுகள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. தான் மோதிய 4 ஆட்டத்திலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மோதியுள்ளன. 2016-ம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் படுகிறது.
இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.
- இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
- குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. நாளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.
டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார்.
விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவி வந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த தொடரில் இதுவரை டெல்லி அணி தோல்வி அடையவில்லை.
- பெங்கால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
விசாகப்பட்டினம்:
புரோ கபடி 'லீக்' போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இதுவரை டெல்லி அணி தோல்வி அடையவில்லை. தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி பெங்காலை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
பெங்கால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.
- கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றாா். கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.
மற்ற பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் சனமச்சா சானு (70 கிலோ), சாக்ஷி சவுத்ரி (54 கிலோ) ஆகியோர் தோற்று வெளியேறினர்.
ஆண்களுக்கான 2-வது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்சிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.
- கேரளா பிரீமியர் லீக் தொடரில் கொச்சி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
- கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கேரள பிரீமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார்.
இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார்.
எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர். அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.
- உத்தரகாண்டில் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- இந்த பொட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
உத்தரகாண்டில் தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த பொட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை பிளெஸ்ஸிலா ஏ சங்மா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி வீரர் வாள்வீச்சு போட்டியில் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.
- ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும்.
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடுவதற்காகவே இப்போதே கவுதம் கம்பீர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கவில்லை என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வீரரால் செய்யக்கூடிய அனைத்தையும் ஷ்ரேயாஸ் செய்துள்ளார் என்பதை ஒருபுறம் வையுங்கள். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததிலிருந்து இந்தியா 20 டி20 போட்டிகளில் விளையாடி 17 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே ஒரு பயிற்சியாளராக தமக்கு வெற்றிகளைக் கொடுத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்காக அவர் சில வீரர்களை கழற்றி விட்டு கடினமான முடிவுகளை எடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆசியக் கோப்பை அறிவித்த பின் அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு சரியாகப்படவில்லை.
அது உலகக் கோப்பை உட்பட வருங்கால தொடர்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டீர்கள் என்பதற்கான சமிக்கையாகும். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் ஆசியக் கோப்பைக்கு பின் இந்தியா சில இருதரப்பு தொடர்களில் விளையாட உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டாப் 5 ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஷ்ரேயாஸ் இல்லாதது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.
டி20 உலகக் கோப்பையை முன்னோக்கிய பயணத்தில் அவரும் அங்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த உலகக் கோப்பையில் அவர் இருப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். ஏனெனில் அவர் அதற்குத் தகுதியானவர்.
என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்க 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் 110, ஜோ ரூட் 100 ரன்களையும் விளாசினர். மேற்கொண்டு ஜேமி ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 62 ரன்களைச் சேர்க்க அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவரில் 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த அனைவருக்கும் தலா 5 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
- 11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
- இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றது.
ஹாங்சோவ்:
11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் 'பி' பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றது. நவ்னீத் கவுர், மும்தாஜ் கான் தலா 3 கோலும், நேஹா 2 கோலும், லால்ரெம்சியாமி, உதிதா, ஷர்மிளா, ருதுஜா தலா ஒரு கோலும் போட்டனர். முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை (11-0) வென்றிருந்த இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் ஜப்பானுடன் (2-2) டிரா கண்டிருந்தது.
முன்னதாக இதேபிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜப்பான் 6-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் இந்தியா, ஜப்பான் தலா 7 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசம் அடிப்படையில் இந்தியா முதலிடத்தை பிடித்தும், ஜப்பான் அணி 2-வது இடம் பெற்றும் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. தாய்லாந்து (3 புள்ளி) 3-வது இடமும், சிங்கப்பூர் (0) கடைசி இடமும் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
'ஏ' பிரிவில் நடந்த கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் சீனா அணி 20-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை ஊதித்தள்ளி 'ஹாட்ரிக்' வெற்றியோடு முதலிடத்தை உறுதி செய்தது. முன்னாள் சாம்பியனான தென்கொரியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்து 2-வது வெற்றியுடன் 2-வது இடத்தை பிடித்தது. இவ்விரு அணிகளும் சூப்பர்4 சுற்றை எட்டின. மலேசியா (3 புள்ளி) 3-வது இடமும், சீன தைபே (0) கடைசி இடமும் பெற்று வெளியேறின. சூப்பர் 4 சுற்று நாளை ஆரம்பமாகிறது.
- தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலக கோப்பை அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. இந்த தடவையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக அமைந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் 3 முறை மோத வேண்டி இருக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.
முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், நேற்று முன்தினம் முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.
அதே சமயம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் (கேப்டன்), ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கரிம் ஜனத், முகமது நபி, முஜீப் ரகுமான் அல்லது கசன்பார், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.
ஹாங்காங்: யாசிம் முர்தசா (கேப்டன்), அன்ஷூமன் ராத், பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நிஜாகத் கான், மேத்யூ ஜோட்ஜீ, இசன் கான், அஜாஸ் கான், அதீக் இக்பால், நஸ்ருல்லா ராணா, ஆயுஷ் சுக்லா.
இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






