என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை அறிமுகம்: கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்ட கேப்டன்கள்
- 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம்பிடித்தன.
- 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள்ம் இடம் பெற்றுள்ளன.
துபாய்:
17-வது ஆசிய கோப்பை போட்டி (டி20) இன்று தொடங்கி 28-ம் தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தச் சுற்றில் விளையாடும் 4 அணிகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஆசிய கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டு கூட்டாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி உடனிருந்தார்.






