என் மலர்
விளையாட்டு
சார்ஜா:
ஐ.பி.எல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணிக்கு எதிரான தொடர் தோல்விக்கு சி.எஸ். கே. முற்றுப்புள்ளி வைத்தது.
சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுபோல் ராஜஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து குணம் அடையாத பிராவோ நாளைய போட்டியிலும் ஆட மாட்டார்.
சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. அம்பதி ராயுடு, டுபெலிசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
இதேபோல பந்துவீச்சில் ஜடேஜா, நிகிடி, தீபக் சாஹர் ஆகியோர் முத்திரை பதித்தனர். ஆல்ரவுண்டர் பணியில் சாம்கரண் சிறப்பாக செயல்பட்டார்.
ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பட்லர் நாளைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், மில்லர், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு டை, சஞ்சுசாம்சன், டாம்கரண், ஜோப்ர ஆர்சர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் இது வரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார்.
தினேஷ்கார்த்திக் 2018-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். காம்பீருக்கு பதிலாக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். 2018-ல் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் கடந்த முறை கொல்கத்தா அணி 5-வது இடத்தை பிடித்தது. தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும், சிறப்பாக அமையவில்லை. அவர் 14 ஆட்டத்தில் 253 ரன் எடுத்தார்.
35 வயதான தினேஷ் கார்த்திக் இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார்.
இந்தநிலையில் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசை துடிப்பாகவும், எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது. மார்கன் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக இருப்பார். அவர் நிலையாக ஆடக்கூடியவர். அனுபவம் வாய்ந்தவர். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.
கொல்கத்தா அணி இந்த சீசனில் முதல் 4 அல்லது 5 ஆட்டத்தில் சிறப்பாக செயல் படாவிட்டால் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் இதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி எதிர்கொள்கிறது.
வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.






