என் மலர்
விளையாட்டு
சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆட, ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் அம்பதி ராயுடுக்குப் பதிலாக ருத்து கெய்க்வார்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் உடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் களம் இறங்கியதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சாம் கர்ரன் வீசிய 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் சஞ்சு சாம்சன்.
தீபக் சாஹர் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்சரும், ஸ்மித் ஒரு பவுண்டரியும் விளாசினார். ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது.
அதன்பின் சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர் விளசினார். பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். பியூஷ் சாவ்லா இந்த ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
10-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசியது. இந்த ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்த 2 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சர்வசாதரணமாக 225 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் 12-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் ரன்அவுட் ஆனார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 134 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் ராஜஸ்தன் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகத்தில் தடைஏற்பட்டது.

சாவ்லா 13-வது ஓவரில் 3 ரன்களும், 15-வது ஓவரில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். லுங்கி நிகிடி வீசிய 16-வது ஓவரில் 12 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் 19-வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினார். ஸ்மித் 47 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 69 ரன்கள் அடித்தார்.
டெத் ஓவரான 17-வது ஓவரில் 7 ரன்களும், 18-வது ஓவரில் 4 ரன்களும், 19-வது ஓவரில் 9 ரன்களுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். ஜாஃப்ரா ஆர்சர் முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 30 ரன்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. ஜாஃப்ரா ஆர்சர் 8 பந்தில் 4 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும் சாஹர், நிகிடி, சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறாத நிலையில், ருத்து கெய்க்வார்ட் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. வாட்சன், 2. முரளி விஜய், 3. டு பிளிஸ்சிஸ் 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி. 11. ருத்து கெய்க்வார்டு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஸ்மித், 2. டேவிட் மில்லர், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. டாம் கர்ரன், 5. ராபின் உத்தப்பா, 6. சஞ்சு சாம்சன், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. உனத்கட், 9. ஜெய்ஸ்வால். 10. ராகுல் டெவாட்டியா, 11. ரியான் பராக்
ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
ஐபிஎல் 2020 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ரசிகர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்துதான் போட்டியை காண வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர்.
அவர்களுக்கு தொலைக்காட்சிதான் சிறந்த பொழுதுபோக்காக விளங்குகிறது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டியை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன் இந்தியாவின் ஒரு விளையாட்டு போட்டியை இதுபோன்ற அதிகமானோர் பார்த்து ரசித்தது கிடையாது. அதேபோல் உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் சாதனைப்படைத்துள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி - வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கெவின் டி ப்ரூயின் அதை பயன்படுத்தி கோலாக மாற்றினார். 32-வது நிமிடத்தில் பில் ஃபோடன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் 2-0 என மான்செஸ்டர் சிட்டி முன்னிலைப் பெற்றது.
2-வது பாதி நேர ஆட்டத்தின்போது 78-வது நிமிடத்தில் வால்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணியின் ஜிமெனஸ் கோல் அடித்தார். மான்செஸ்டர் அணியின் கேப்ரியல் ஜீசஸ் இன்ஜூரி நேரத்தில் (90+5) ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 3-1 என வெற்றி பெற்றது.
பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்க்கான தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. டென்னிஸ் தரவரிசையில் 198-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ராம்குமார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாமசைன்-ஐ (268-ம் தரவரிசை) எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
ஏற்கனவே சுமித் நகர் வெளியேறிய நிலையில், பிரஜ்னேஷ் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் விளையாட உள்ளார்.
ராம்குமார் கிராண்ட் ஸ்லாம் முதன்மை சுற்றுக்கு எப்பாடியாவது முன்னேறிவிடலாம் என போராடி வருகிறார். ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. 2018-ல் ஆஸ்திரேலிய ஒபனில் தகுதிச் சுற்றின் 3-வது சுற்றுவரை முன்னேறினார்.
சுழற்பந்து வீரர் சாஹல் விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ரன்னில் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.
துபாயில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.
தொடக்க வீரர் படிக்கல் 42 பந்தில் 56 ரன்னும் (8 பவுண்டரி ), டிவில்லியர்ஸ் 30 பந்தில் 51 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேர்ஸ்டோவ் 43 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி 2 சிக்சர்), மணிஷ் பாண்டே 33 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஐதராபாத் 120 ரன்னில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தது.
கடைசி 8 விக்கெட்டுகள் 33 ரன்னில் விழுந்தது பரிதாபமானது.
சுழற்பந்து வீரர் யசு வேந்திர சாஹல் ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். அவர் 3 விக்கெட்டும், சைனி, துபே தலா 2 விக்கெட்டும், ஸ்டெய்ன் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கி உள்ளது.இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது:
யசுவேந்திர சாஹல் ஆட்டத்தை மாற்றினார். அவர் போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தார். அவர் மிகவும் திறமையுடன் பந்து வீசினார். விக்கெட்டை நோக்கி நேர்த்தியாக பந்துவீசி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார்.
படிக்கல், டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
தோல்வி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
மிச்சேல் மார்ஷ்க்கு ஏற்பட்ட காயம் ஆட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாஹலின் கடைசி ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந் தது.
நாங்கள் இனி நல்ல நிலையை அடைய வேண்டும். இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்பதை எங்களால் சரி செய்ய முடியாது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் கடினமாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூர் அணி 2வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை நாளை மறுநாள் துபாயில் சந்திக்கிறது.ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 26-ந் தேதி எதிர்கொள்கிறது.
முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால், டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 51 ரன்கள் சேர்த்ததால் ஆர்சிபி அணியால் 163 ரன்கள் சேர்க்க முடிந்தது.
முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘உண்மையை சொல்லப்போனால் எனக்கு நானே ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன். நாங்கள் தென்ஆப்பிரிக்காவில் போட்டி விளையாட்டில் ஆடியது சிறப்பான விசயம்.
நான் இங்கு வரும்போது கொஞ்சம் நம்பிக்கைதான் இருந்தது. இந்த நேரத்தில் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடியது எனக்கு முக்கியமான விசயம். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான திறமையான வீர்ர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர். போட்டியில் ஜோஷ் பிலிப்பை பார்க்கும்போது, அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
இங்கு வருவதற்கு முன் அதிகமாக போட்டிகளில் விளையாடவில்லை என்பதால், உங்களுக்குள்ளேயே அதிக சந்தேகம் இருக்கும். அணியுடன் இணைந்து கடந்த நான்கு வாரங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு, தனக்குத்தானே சிறந்த பார்மை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியான தொடக்கம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் ரன்அவுட் ஆகிவிட்டேன்’’ என்றார்.
துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சாஹலின் அபார பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி.
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய ஆர்.சி.பி. 163 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 153 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆர்.சி.பி. 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 32 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது.
ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் பேட்டிங்கும் சாஹல், நவ்தீப் சைனியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் ஸ்வாட்ஸ்மனை வீழ்த்தி 5-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.
இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை டென்னிஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் ஜோகோவிச் ருசித்த 36-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஆயிரம் தரவரிசை புள்ளி வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஸ்பெயினின் ரபெல் நடாலிடம் (35 பட்டம்) இருந்து ஜோகோவிச் தட்டிப்பறித்தார்.
இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) எதிராக சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பிளிஸ்கோவா விலகினார். இதனால் வெற்றிக்கனியை பறித்த ஹாலெப் முதல்முறையாக இத்தாலி ஓபனில் மகுடம் சூடினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார்.
36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
இதனால் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர்
6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
அந்த ஜோடி ஐதராபாத் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ரன்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் திணறியது.
களத்தில் சந்தீப் சர்மா, டி நடராஜன் களத்தில் இருந்தனர். 3 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 19.4 ஓவரில் டெயில் ஸ்டெயின் வீசிய பந்தை சந்தீப் சர்மா சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி கேட்ச் பிடித்தார்.
இதனால், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .
பெங்களூர் அணி தரப்பில் சாஹல் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபேயும் 3 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நவ்தீப் சைனியும் 4 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஏபி டி வில்லியர்ஸ், தேவ்தத் படிக்கல் அரைசதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். இதனால் ஆர்சிபி-யின் ரன் விகிதம் சராசரியாக உயர்ந்து கொண்டு வந்தது.
பவர் பிளேயில் விக்கெட் இழபபிற்கு 53 ரன்கள் சேர்த்தது. 9-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார். 10-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆர்சிபி அணிக்கான தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார் தேவ்தத் படிக்கல். 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
10 ஓவர் முடிவில் ஆர்.சி.பி. விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் தேவ்தத் கடைசி பந்தில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது ஆர்சிபி 11.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டி. நடராஜன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 2.5 கிலோ கொண்ட மீன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது.
காஷ்மீரில் உள்ள மைதானம் ஒன்றில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றிருக்கிறது. அந்த மைதானம் மோசமான நிலையில் இருந்ததால், அங்கு கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில் பெரும் சிரமம் இருந்தது. இதனால் அந்த கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க நினைத்த உள்ளூர் கிரிக்கெட் குழுவினர், தங்களிடம் இருந்த சொந்தப் பணத்தை செலவழித்து தயார் செய்துள்ளனர். இன்னும் அங்கு பல வேலைகள் இருப்பதால் அந்த மைதானத்தை தயார் செய்ய நிதியுதவியை எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தி, அதன்மூலம் மைதானத்தின் மீது கவனத்தை திருப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய அளவு மீன்களை வாங்கி, அதை போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதாக கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்வு உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த காட்சியை காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பகிர, அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட் உலகில் எத்தனையோ ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீன் என்பது யாரும் கண்டிராத ஒன்றாக திகழ்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தொடர் ஒன்றில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மினி வேன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது.
டாகா பிரிமியர் லீக் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த அறிமுக வீரர் ஒருவருக்கு கலவை மிஷின் கொடுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சன் சைன் எனும் நிறுவனத்தின் ஸ்நாக்ஸை ஆட்டநாயகன் விருதாக பெற்றிருக்கிறார்.






