search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பெங்களூர் வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பெங்களூர் வீரர்கள்

    ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
    ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். 

    36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் கடந்த தேவ்தத் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆரோன் பிஞ்ச் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் விராட் கோலி 13 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. 

    இதனால் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர்

    6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த பிரிஸ்டோ பெங்களூர் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

    அந்த ஜோடி ஐதராபாத் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அரை சதம் கடந்த பிரிஸ்டோ 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவிச்சில் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடி 33 பந்துகளில் 34 ரன்கள் குவித்திருந்த பாண்டேவும் சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த விஜய் சங்கர் சாஹல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த வீரர்களும் பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 

    இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் திணறியது. 

    களத்தில் சந்தீப் சர்மா, டி நடராஜன் களத்தில் இருந்தனர். 3 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 19.4 ஓவரில் டெயில் ஸ்டெயின் வீசிய பந்தை சந்தீப் சர்மா சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி கேட்ச் பிடித்தார்.

    இதனால், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது . 

    பெங்களூர் அணி தரப்பில் சாஹல் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபேயும் 3 ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    நவ்தீப் சைனியும் 4 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Next Story
    ×