என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷார்ஜா போட்டியில் இரு அணிகளும் 33 சிக்சர்கள் பறக்க விட்டனர்.
சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் சிக்சர்கள் பறந்தன. மொத்தம் 33 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17 சிக்சர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 சிக்சர்களும் அடித்தன. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 9 சிக்சர்களும், சுமித், ஆர்ச்சர் தலா 4 சிக்சர்களும், சி.எஸ்.கே. அணியில் டு பிளிஸ்சிஸ் 7 சிக்சர்களும், வாட்சன் 4 சிக்சர்களும், டோனி 3 சிக்சரும், சாம் கர்ரன் 2 சிக்சர்களும் விளாசினர்.
ஆனால் ஆட்டத்தில் மொத்தம் 18 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா 9 பவுண்டரிகள் அடித்தன. டோனி கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை தாண்டி ரோட்டில் விழுந்தது.
14 நாட்கள் தனிமைப்படுத்துதல், நீண்ட நாட்கள் பேட்டிங் செய்யாமல் இருந்ததன் காரணமாக 7-வது வரிசையில் களம் இறங்கியதாக எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்றது.
சார்ஜாவில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. சஞ்சு சாம்சன் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் 32 பந்தில் 74 ரன்னும் (1 பவுண்டரி, 9 சிக்சர்) கேப்டன் ஸ்டிவ் சுமித் 47 பந்தில் 69 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜாஃப்ரா ஆர்ச்சர் 8 பந்தில் 27 ரன்னும் (4 சிக்சர்) எடுத்தனர். சாம் கர்ரன் 3 விக்கெட்டும், தீபக் சாஹர், நிகிடி, பியூஷ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. இதனால் சி.எஸ்.கே. அணி 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டுபெலிசிஸ் 37 பந்தில் 72 ரன்னும் (1 பவுண்டரி 7 சிக்சர்), வாட்சன் 21 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் டோனி 17 பந்தில் 29 ரன்னும் (3 சிக்சர்) எடுத்தனர். ராகுல் திவேட்டியா 3 விக்கெட்டும், ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், டாம் கர்ரன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சென்னை அணி முதல் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஜ் வீழ்த்தி இருந்தது. இந்த தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் டோனி கூறியதாவது:-
217 ரன் என்ற கடினமான இலக்கு இருக்கும்போது தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த ரன் இலக்கை எட்டமுடியும். எங்களது தொடக்கம் சிறப்பாக அமையாததால் இந்த கடினமான ரன் இலக்கை எட்ட முடியவில்லை.
நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு 14 நாட்கள தனிமைப்படுத்துதல் உதவவில்லை. இதன் காரணமாகவே நான் 7-வது வரிசையில் களம் இறங்கினேன். சாம் கர்ரனுக்கு வாய்ப்புகளை வழங்க வெவ்வேறு விசயங்களை முயற்சிக்க விரும்பினோம். டு பிளிஸ்சிஸ் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் அணியில் சாம்சனும், ஸ்டீவ் சுமித்தும் சிறப்பாக ஆடினார்கள். அதோடு அவர்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது. தவறு செய்யாமல் நேர்த்தியாக வீசினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் பல்வேறு பிழைகளை செய்தனர். நோபாலை கட்டுப்படுத்தவில்லை. ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம்.
இவ்வாறு டோனி கூறி உள்ளார்.
வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறியதாவது:-
கடைசி ஓவரில் ஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் மிகவும் பிரமாதமாக இருந்தது. சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி சிக்சர்களை விளாசினார். அவரது ஆட்டமும் அற்புதமாக இருந்தது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள்.
இவ்வாறு சுமித் கூறினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்கும் விதமாக புர்ஜ் கலிஃபா விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை ஐபிஎல் தொடர் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உள்ளார். அவரை வரவேற்கும் விதமாகவும், கொல்கத்தா அணி ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா, கொல்கத்தா அணியின் லோகோவையும், முக்கியமான வீரர்களின் படங்களையும் கட்டிடத்தில் ஒளிரவிட்டு சிறப்பித்துள்ளது.
شكران 🙌🏽
— KolkataKnightRiders (@KKRiders) September 22, 2020
Before the fireworks tomorrow, here's the curtain raiser! We won't stop, on our way to the 🔝
Thank you @BurjKhalifa for lighting up in #KKR colours.
What a welcome to the UAE tonight! 💜#KKRHaiTaiyaar#IPL2020#Dream11IPL#BurjKhalifapic.twitter.com/LgUe9hNdW1
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா போராடி வெற்றி பெற்றார்
பாரீஸ்:
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோவனா ஜோவிச்சை (செர்பியா) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டம் 2 மணி 47 நிமிடங்கள் நீடித்தது. ரெய்னா அடுத்து ஜப்பானின் குருமி நராவை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 5-7, 2-6 என்ற நேர் செட்டில் டிரிஸ்டன் லமாசினிடம் (பிரான்ஸ்) தோற்று வெளியேறினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள். முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின்வரிசையில் தடுமாறி விட்டனர். ஆனாலும் பந்து வீச்சு, பேட்டிங்கில் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த புயல்வேக வீரர் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் நம்பிக்கையோடு சவாலை தொடங்குகிறது. இவர்களின் ஆட்டம் ஒருசேர ‘கிளிக்’ ஆனால் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
சுப்மான் கில்லும், சுனில் நரினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று நேற்று தெரிவித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘சுப்மான் கில் தரம் வாய்ந்த வீரர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்பையும் தாண்டி அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். பல்வேறு விதங்களில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது எங்களது பலமாகும். இந்தியாவைச் சேர்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களும் (ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா) நல்ல நிலையில் உள்ளனர். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’ என்றார்.

ஐ.பி.எல். முதல் நாள் ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த 19-ந்தேதி நடந்த பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை டி.வி. மற்றும் இணையதளம் வாயிலாக மொத்தம் 20 கோடி பேர் கண்டுகளித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுபடி இந்த எண்ணிக்கை தெரிய வந்திருப்பதாகவும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்த்ததில்லை என்றும், அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.
தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.
16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஜாதவ் டாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி 16 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 29
ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 போட்டியில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 18 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.
தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.
16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஜாதவ் 22 டாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தற்போது டு பிளஸ்சிஸ் உடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் டோனியுடன் விளையாடி வருகிறார். சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணி வெற்றி பெற 18 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்படுகிறது. டு பிளஸ்சிஸ் 55 ரன்னுடனும், டோனி 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நெருக்கடியை சந்தித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் (74), ஸ்டீவ் ஸ்மித் (69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.
பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.
தொடக்கத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவரில் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 54 பந்தில் 131 ரன்கள் தேவை. இந்த ஜோடியும், எம்எஸ் டோனியும் அதிரடியாக விளையாடினால் சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது. இருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 14.56 ரன்கள் தேவை என்பதால் கடினம்தான்.
சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆட, ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் அம்பதி ராயுடுக்குப் பதிலாக ருத்து கெய்க்வார்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் உடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
2-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் களம் இறங்கியதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சாம் கர்ரன் வீசிய 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் சஞ்சு சாம்சன்.
தீபக் சாஹர் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்சரும், ஸ்மித் ஒரு பவுண்டரியும் விளாசினார். ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது.
அதன்பின் சஞ்சு சாம்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் இரண்டு இமாலய சிக்சர் விளசினார். பியூஷ் சாவ்லா வீசிய 8-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். பியூஷ் சாவ்லா இந்த ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
10-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசியது. இந்த ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்த 2 ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் சர்வசாதரணமாக 225 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் 12-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 9 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லர் ரன்அவுட் ஆனார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவரில் 134 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் ராஜஸ்தன் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகத்தில் தடைஏற்பட்டது.

சாவ்லா 13-வது ஓவரில் 3 ரன்களும், 15-வது ஓவரில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். லுங்கி நிகிடி வீசிய 16-வது ஓவரில் 12 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்த ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் 19-வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினார். ஸ்மித் 47 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 69 ரன்கள் அடித்தார்.
டெத் ஓவரான 17-வது ஓவரில் 7 ரன்களும், 18-வது ஓவரில் 4 ரன்களும், 19-வது ஓவரில் 9 ரன்களுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். ஜாஃப்ரா ஆர்சர் முதல் நான்கு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்னைத் தாண்டியது. கடைசி ஓவரில் 30 ரன்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. ஜாஃப்ரா ஆர்சர் 8 பந்தில் 4 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும் சாஹர், நிகிடி, சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறாத நிலையில், ருத்து கெய்க்வார்ட் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. வாட்சன், 2. முரளி விஜய், 3. டு பிளிஸ்சிஸ் 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி. 11. ருத்து கெய்க்வார்டு.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஸ்மித், 2. டேவிட் மில்லர், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. டாம் கர்ரன், 5. ராபின் உத்தப்பா, 6. சஞ்சு சாம்சன், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. உனத்கட், 9. ஜெய்ஸ்வால். 10. ராகுல் டெவாட்டியா, 11. ரியான் பராக்
ஐபிஎல் தொடக்க போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
ஐபிஎல் 2020 சீசன் கிரிக்கெட் திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ரசிகர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் இருந்துதான் போட்டியை காண வேண்டும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர்.
அவர்களுக்கு தொலைக்காட்சிதான் சிறந்த பொழுதுபோக்காக விளங்குகிறது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரசிர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்நிலையில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டியை 20 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இதற்கு முன் இந்தியாவின் ஒரு விளையாட்டு போட்டியை இதுபோன்ற அதிகமானோர் பார்த்து ரசித்தது கிடையாது. அதேபோல் உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் சாதனைப்படைத்துள்ளது.