என் மலர்
விளையாட்டு
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபெற்ற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்படுகிறது.
அபுதாபி:
அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டி செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ரன்னிலும், சுனில் நரைன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்னிலும், நிதிஷ் ரானா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது 15 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா வெற்றிபெற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்படுகிறது.
மோர்கன் 16 ரன்னிலும், ஆண்டே ரசல் 11 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் 15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ் ஒரு ஓவருக்கு சராசரியாக 16.33 ரன்கள் விட்டுக்கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. முதலில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.
அவரை கொல்கத்தா 15.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது. வெளிநாட்டு வீரர் ஒருவர் இவ்வளவு தொகைக்கு (15.5 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா அவரது பந்தை துவம்சம் செய்தனர். 3 ஓவர்கள் மட்டுமே வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 16.33 ரன்கள் ஆகும்.
15.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சொதப்பியதால் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் ‘‘நான் பேட் கம்மின்ஸ். என்னால் ஷார்ட் பிட்ச் பால் மட்டுமே வீச முடியும். என்னிடம் வேரியேசன் கிடையாது. கேகேஆர் அணியின் மிகப்பெரிய நேரத்தை முட்டாள்தனமாக்குகிறேன். ஒரு போட்டிக்கு 1.2 கோடி ரூபாய் வாங்குகிறேன்’’ என விமர்சனம் செய்துள்ளார்.
மற்றொரு ரசிகர் ஒருவர் ‘‘போட்டி முடிந்த பிறகு, யாராவது ஒருவர் கேகேஆர் உரிமையாளருக்கு முதலீட்டின் மீதான வருவாய் (ROI) விருதை வழங்கலாம்’’ என்றார்.
மற்றொரு ரசிகர் ‘‘பவுலர் மோசமான நாளில் இதுவும் ஒன்று’’ என ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இன்னொரு ரசிகர் ‘‘அதிக ரன்கள் கொடுத்த ஐபிஎல் பந்து வீச்சாளர்களின் அகாடமிக்கு அழைக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் குயின்டான் டி காக் - ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரோகித் சர்மா. இதனால் மும்பை முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்தது.
2-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் குயின்டான் டி காக் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அத்துடன் அந்த ஓவரை மெய்டனாக்கினார் ஷிவம் மவி.
3-வது ஓவரை சந்தீப் வாரியார் வீசினார். இந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் நான்கு பவுண்டரிகள் விளாசினார். சுனில் நரைன் வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் இரண்டு பவுண்டரி விளாச மும்பை இந்தியன்ஸ் பவர் பிளே-யில் 1 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் அடித்தது.
தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாட 10 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்தது. 11-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் 28 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் அடித்த ரோகித் சர்மா 39 பந்தில் அரைசதம் கடந்தார். குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி விளாசினார். 15-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் சவுரப் திவாரி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.
16-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சவுரப் திவாரி 13 பந்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார்.
17-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா இரணடு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். கம்மின்ஸ் 3 ஓவரில் 49 ரன்கள் வழங்கினார்.

18-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 54 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 80 ரன்கள் விளாசினார். ரோகித் சர்மா ஆட்டமிழக்கும்போது மும்பை 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.
19-வது ஓவரை அந்த்ரே ரஸல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஹிட்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் சேர்த்தார்.
கடைசி ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. பொல்லார்ட் 7 பந்தில் 13 ரன்களுடனும், குருணால் பாண்ட்யா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிதவேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பொல்லார்ட். இவர் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பிடித்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சாம் கர்ரன் சிறப்பாக பந்து வீசிய நிலையில, டாம் கர்ரன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறித்து சஞ்சு சாம்சன் நகைச்சுவையான கருத்தை பகிர்ந்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த இளம் வீரர் சாம் கர்ரன் விளையாடி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது அண்ணன் டாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 32 பந்தில் 74 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 200 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 216 ரன்கள் குவித்தாலும், சாம் கர்ரன் நேர்த்தியாக பந்து வீசி 4 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதேவேளையில் டாம் கர்ரன் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
தம்பி ரன் விட்டுக்கொடுக்காத நிலையில் அண்ணன் அதிக ரன்கள் கொடுத்தார். இந்நிலையில் ரன்னை கட்டுப்படுத்தும் ரகசியத்தை அண்ணனுக்கு தம்பி வெளிப்படுத்தவில்லை என்று சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக தெரிவித்தார்.
‘‘டாம் கர்ரனிடம் கேட்டபோது என்னிடம் அவரது சகோதரரிடம் இருந்து எந்த டிப்ஸும் பெற்றதாக தெரிவிக்கவில்லை. அவர் எனக்கு எந்த சைகையும் கொடுக்கவில்லை. நானாகவே கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று’’ என்றார்.
அபு தாபியில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசனின் 5-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7.00 மணிக்கு சுண்ட்ப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்ட்யா, 5. குருணால பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. பும்ரா, 8. பேட்டின்சன், 9. பும்ரா, 10. சவுரப் திவாரி. 11. ராகுல் சாஹர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சுனில் நரைன், 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. நிகில் நாய்க், 8. பேட் கம்மின்ஸ், 9. குல்தீப் யாதவ், 10. சந்தீப் வாரியார், 11. ஷிவம் மவி.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மீடியா உரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸின் தலைசிறந்த கிளப் அணியான பி.எஸ்.ஜி.-யின் தலைவர் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கால்பந்து கிளப் அணிகளில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியும் ஒன்று. இதன் தலைவராக நாசர் அல்-கெலைஃபி உள்ளார். 2023-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடக்கிறது.
இதற்கான மீடியா உரிமை ஏலத்தை பிஃபா நடத்தியது. அப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான உரிமையை பெற பெல்என் ஸ்போர்ட் (belN Sport) நிறுவனம் விரும்பியது. பிஃபாவுக்கும், பெல்என் ஸ்போர்ட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது பிஃபா பொதுச் செயலாளர் வால்க்கே என்பவர் ஆதாயம் பெற்றதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் உள்ள ஒரு வீட்டை வாங்க வால்க்கே விரும்பியுள்ளார். இதற்கு பிஎஸ்ஜி அணி தலைவர் உதவி புரிந்துள்ளார். இதற்காக 6.4 மில்லியன் யூரோ செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை சுவிட்சர்லாந்தில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாசர் அல்-கெலைஃபி-க்கு 28 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். ஆனால், நாசர் அல்-கெலைஃபி மற்றும் பெல்என் ஸ்போர்ட் சேர்மன் ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக காயம் காரணமாக விளையாடாத அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 13-வது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறவில்லை. அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே முரளி விஜய், ஷேன் வாட்சன் திணறி வரும் வரும் நிலையில் அம்பதி ராயுடு இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற 25-ந்தேதி 3-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியையும், அக்டோபர் 2-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத அணியையும் எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எம்எஸ் டோனி 7-வது இடத்தில் களம் இறங்கியது குறித்து கம்பிர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வீரராக களம் இறங்கினார். 217 ரன் இலக்கு இருக்கும்போது டோனி 7-வது வரிசையில் ஆடியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம் கர்ரன், ருத்துராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ், ஆகியோருக்கு பிறகே அவர் களம் வந்தார்.
4-வது வரிசையில் வர வேண்டிய டோனி 7-வது வீரராக ஆடினார். அவர் களத்தில் குதிக்கும்போது அணியின் ரன் ரேட் எட்ட முடியாத அளவில் மிகவும் கடினமாக இருந்தது. வெற்றிக்கு 38 பந்தில் 108 ரன் தேவையாக இருந்தது.
டு பிளிஸ்சிஸ் ஒரு முனையில் அபாரமாக ஆடியபோது மறுமுனையில் இருந்த டோனி அதிரடியாக ஆடவில்லை. ஆட்டத்தின் கடைசி ஓவரில்தான் அவர் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்தார். இதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் டோனி 7-வது வீரராக களம் இறங்கியது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக பாய்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
217 ரன் இலக்கு தேவைப்படும்போது, டோனி 7-வது வரிசையில் களம் இறங்கியது தவறான முடிவு ஆகும். அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இது முழுமையான தவறான கணக்கீடாகும். அவருக்கு முன்பு ருத்துராஜ் கெய்க்வாட், சாம் கர்ரன் களம் இறங்கினார்கள். எனக்கு இது புரியாத புதிராக இருக்கிறது.
டுபிளிஸ்சிஸ் தனி நபராக போராடினார். கடைசி ஓவரில் டோனி 3 சிக்சர்களை விளாசியது குறித்து நீங்கள் பேசலாம். ஆனால் அதனால் என்ன பயன்? அதில் நேர்மை இல்லை. இது அவரது தனிப்பட்ட ரன்னாகி விடுகிறது.
விளையாட்டில் வெல்லும் நோக்கம் தேவை. நீங்கள் (டோனி) சீக்கிரமே வெளியேறினாலும் எந்த தவறும் இல்லை. குறைந்த பட்சம் முன்னால் சென்று அணியை வழிநடத்துங்கள்.
அணியை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள். முதல் 6 ஓவருக்கு பிறகு நீங்கள் ஆட்டத்தை கைவிட்டு விட்டீர்கள். நீங்கள் முன்னதாக ஆடி இருந்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி இருக்க முடியும். சாம் கர்ரன், கெய்க்வாட், கேதர் ஜாதவ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் உங்களை விட சிறந்தவர்கள் என்று ரசிகர்களை நம்ப வைக்கிறீர்கள்.
இவ்வாறு காம்பிர் கூறி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 19 முறை தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் தொடரை தொடங்க விரும்புகிறது.
ஐ.பி.எல். கோப்பையை இரண்டு முறை கைப்பற்றி சாதனைப் படைத்த அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. கடந்த சீசனில் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி வாகை சூடியது. ஆனால் கடைசி 7 போட்டிகளில் மூன்றில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
வாழ்வா? சாவா? என்ற போட்டிகளில் மும்பை உள்பட பல அணிகளிடம் தோல்வியை சந்தித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தாவின் சாதனை மிகவும் மோசமாக உள்ளது. 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இன்று கொல்கத்தா நைட் ரைடஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இக்கட்டான நிலையில் மோதுவதை விட முதல் போட்டியிலேயே மோதுவது மகிச்சி என கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘தொடரின் தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவது சிறந்த விசயம். அவர்கள் சிறந்த அணி. சாதனைகளே அவர்களை பற்றி சொல்லும். அவர்கள் அணிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
இந்தத் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 160 முதல் 170 வரையிலான ஸ்கோர் சிறந்ததாக இருக்கும். இதனால் இத்தொடர் சுவாரஸ்யமாக இருக்கும்.’’ என்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் மிட்செல் மார்ஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஐதராபாத் அணியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.
இவர் பந்து வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதன்காரணமாக ஓவரை முழுமையாக முடிக்க முடியாமல் வெளியேறினார். இந்நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சுடன் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவார் என்று நினைத்திருந்த ஐதராபாத் அணிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.
அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டரை ஐதராபாத் அணியில் இணைக்க உள்ளது.
டாம் கர்ரனுக்கு அவுட் கொடுத்துவிட்டு, பின் அந்த முடிவை திரும்ப பெற்றதால் எம்எஸ் டோனி மனைவி சாக்ஷி நடுவரை விமர்சனம் செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது தீபக் சாஹர் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தில் டாம் கர்ரனின் பேட்டை பந்து உரசி சென்றதுபோல் இருந்தது. அதை கேட்ச் பிடித்த டோனி அப்பீல் செய்தார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார்.
ஆனாலும் அவர் டி.ஆர்.எஸ்.க்கு அப்பீல் செய்தார். ராஜஸ்தான் ஏற்கனவே அதற்கான வாய்ப்பை இழந்து விட்டதால் டாம் கர்ரன் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது. டி.ஆர்.எஸ். முறையில் அவருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக டோனி நடுவருடன் விவாதித்தார்.
இதுதொடர்பாக டோனியின் மனைவி சாக்ஷி நடுவரை டுவிட்டரில் விமர்சித்து இருந்தார். ‘‘அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்பினால் அதை சரியாக செய்யுங்கள்’’ என்று டுவிட்டரில் கூறி இருந்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அந்த டுவிட்டை சாக்ஷி டோனி நீக்கிவிட்டார்.






