search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக்
    X
    தினேஷ் கார்த்திக்

    மும்பையை முதல் போட்டியிலேயே எதிர்கொள்ளவது மகிழ்ச்சி: தினேஷ் கார்த்திக்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 19 முறை தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் தொடரை தொடங்க விரும்புகிறது.
    ஐ.பி.எல். கோப்பையை இரண்டு முறை கைப்பற்றி சாதனைப் படைத்த அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. கடந்த சீசனில் முதல் ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி வாகை சூடியது. ஆனால் கடைசி 7 போட்டிகளில் மூன்றில் கூட வெற்றி பெற முடியாமல் போனது.

    வாழ்வா? சாவா? என்ற போட்டிகளில் மும்பை உள்பட பல அணிகளிடம் தோல்வியை சந்தித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றை இழந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தாவின் சாதனை மிகவும் மோசமாக உள்ளது. 25 முறை நேருக்கு நேர் மோதியதில் 6 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    இன்று கொல்கத்தா நைட் ரைடஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இக்கட்டான நிலையில் மோதுவதை விட முதல் போட்டியிலேயே மோதுவது மகிச்சி என கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘தொடரின் தொடக்கத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவது சிறந்த விசயம். அவர்கள் சிறந்த அணி. சாதனைகளே அவர்களை பற்றி சொல்லும். அவர்கள் அணிகளில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தத் சீசனின் முதல் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. 160 முதல் 170 வரையிலான ஸ்கோர் சிறந்ததாக இருக்கும். இதனால் இத்தொடர் சுவாரஸ்யமாக இருக்கும்.’’ என்றார்.
    Next Story
    ×