என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 196 ரன்களை சேஸிங் செய்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 80 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் விளாசினர்.

    196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியால் 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 49 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

    கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ரஸல், மோர்கன், நிதிஷ் ராணா என தலைசிறந்த வீரர்கள் இருந்த போதிலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் போனது.

    இந்நிலையில் மிரட்டலான பார்ட்னர்ஷிப் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ராகுல் சாஹர், பொல்லார்ட் சப்போர்ட் சிறப்பாக இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டும் வகையிலான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதை பார்க்க முடியவில்லை’’ என்றார்.
    பிரெஞ்ச் ஓபன் முதன்மை சுற்றுக்கான தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா, 2-வது செட்டில் ஜப்பானைச் சேர்ந்த குருமி நாராவை எதிர்கொண்டார்.

    இதில் அங்கீதா ரெய்னா 3-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். ‘‘இந்த போட்டி மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது. நான் என்னுடைய சர்வீஸ் கேம்ஸ் வாய்ப்பை பெற்றேன். ஆனால், அவர் இன்று சிறப்பாக அதற்கு பதிலடி கொடுத்தார். நான் சில கேம்ஸ்களை கன்வெர்ட் செய்திருந்தார், போட்டி வேறு மாதிரி இருந்திருக்கும்’’ என அங்கீதா ரெய்னா தெரிவித்தார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
    ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    பார்சிலோனா அணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக விளையாடிய உருகுவே வீரர் சுவாரஸ் பார்சிலோனா அணியில் இருந்து அட்லெடிகோ மாட்ரிட் செல்கிறார்.
    உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கர் லூயிஸ் சுவாரஸ். 33 வயதாகும் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். மெஸ்சி, நெய்மர் ஆகியோருடன் இணைந்து அணிக்கு வெற்றிகளை குவித்துக் கொடுத்தார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிஎஸ்ஜி அணிக்கு சென்றார். அதன்பின் பார்சிலோனா ஆட்டம் காண ஆரம்பித்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் படுதோல்வியடைந்ததால் மெஸ்சியும் வெளியே முடிவு செய்தார். ஆனால், ஒப்பந்தத்தை மீற முடியாமல் இந்த சீசனிலும் விளையாட இருக்கிறார்.

    இந்நிலையில் லூயிஸ் சுவாரஸ்-ஐ அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் அட்லெடிகோ மாட்ரிட் 7 மில்லியன் டாலர் பார்சிலோனாவுக்கு போனஸாக வழங்க இருக்கிறது,

    பார்சிலோனாவுக்காக 198 கோல்கள் அடித்துள்ள சுவாரஸ், 2014-ல் இருந்து ஒரு முறை சாம்பியன்ஸ் லீக், நான்கு முறை லா லிகா, நான்கு முறை கோபா டெல் ரே கோப்பைகளை வாங்க முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெயின் பிராவோ, அம்பதி ராயுடு ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (19-ந்தேதி) தொடங்கியது. இதுவரை ஐந்து போட்டிகள்தான் நடைபெற்றுள்ளன. இதற்குள் சில வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் அணிகள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ்-க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதிலேயே வெளியேறிய அவர், காயம் தீவிரம் அடைய தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான வெயின் பிராவோ மூட்டில் ஏற்பட்ட காயத்தால் இன்னும் களம் இறங்க முடியாமல் உள்ளார். அம்பதி ராயுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. நாளை நடைபெற இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராகவும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அஸ்வின்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பயிற்சியின்போது காயத்தால் அவதிப்பட்டுள்ளார். இதனால் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. 2-வது ஆட்டத்திலும் விளையடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் முதல் போட்டியின்போது காயம் அடைந்தார். ஆனால் சிறு காயம் என்பதால் உடனடியாக உடற்தகுதி பெற்றுவிட்டார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. இன்று சில போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 சிக்சர் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார்.

    மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் 54 பந்தில் 80 ரன் விளாசினார்.இதில் 6 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களை எடுத்து முத்திரை பதித்தார். 185 இன்னிங்சில் அவர் இதை சாதித்தார். ஐ.பி.எல். வரலாற்றில் 200 சிக்சர்களை எடுத்த 4-வது வீரர் ஆவார். இந்திய வீரர்களை பொறுத்த வரை அவர் 2-வது இடத்தில் உள்ளார்.

    கிறிஸ்கெய்ல் 326 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ் 214 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டோனி 212 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    டோனியை நோக்கி தற்போது ரோகித்சர்மா நெருங்குகிறார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது அவர் டோனியை முந்துவார்.

    நாளைய போட்டியில், ரபடா vs டு பிளிஸ்சிஸ், பண்ட் vs சென்னை சுழற்பந்து என்ற கணக்கில் போட்டி இருக்கும் என விமர்சகர்கள் கருகின்றனர்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் 15 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

    கடந்த சீசனில் இரண்டு லீக், குவாலிபையர்-2 என மூன்று முறை டெல்லியை நசுக்கியது. இந்த சாதனையுடன் சென்னை அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் நேரத்தில், தொடர் தோல்விக்கு இந்த முறை சென்னையை பழிவாங்க துடிக்கும் டெல்லி.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால் 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. முதல் ஆட்டத்தில் 48 பந்தில் 71 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றித் தேடிக்கொடுத்த அம்பதி ராயுடு லேசாக காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர்கள் களம் இறங்கவில்லை. அவர் இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது நாம் பார்த்தோம்.

    இந்த போட்டியிலும் அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பே, முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 58 ரன்களும், 2-வது போட்டியில் 37 பந்தில் 72 ரன்களும் அடித்து டு பிளிஸ்சிஸ் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் டு பிளிஸ்சிஸ் முதல் பந்தில் இருந்து அதிரடி ஆட்டத்தில் களம் இறங்கமாட்டார். ஆனால் அணியை கடைசி வரை வழி நடத்திச் செல்லும் திறமை பெற்றவர். ஒரு ஹிட்டர் உதவியாக இருந்தால் அணியை வெற்றி பெற வைத்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    தொடக்க பேட்ஸ்மேன்களான முரளி விஜய் (1, 21), ஷேன் வாட்சன் (4, 33) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்து வருகின்றனர். வாட்சன் ஒருமுறை ஃபார்முக்கு வந்து விட்டால் சென்னை யானை பலம் பெற்றுவிடும். அதுவரை மற்ற வீரர்களின் சப்போர்ட் அவருக்குத் தேவை. முரளி விஜய்க்கு கூடுதலான இன்னொரு முறை வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

    ருத்துராஜ் கெய்க்வாட் வந்தார், முதல் பந்திலேயே சென்றார். சின்ன தல இடத்தில் தல டோனி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள் விளையாடாமல் இருப்பது, 14 நாட்கள் தனிமைதான் பின்வரிசையில் களம் இறங்க காரணம் எனக் கூறியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் மூன்று இமாலய சிக்ஸ் விளாசினார். இது அவருக்கு 4-வது இடத்தில் களம் இறங்க உத்வேகம் கொடுத்திருந்தால் சென்னை அணிக்கு கூடுதல் பலம். சாம் கர்ரன் அவரது பங்குக்கு அதிரடியாக விளையாடி முடிந்த அளவிற்கு ரன்கள் சேர்க்கிறார்.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹரின் ஸ்விங் பந்து வீச்சு இன்னும் சரியாக வெளிப்படவில்லை. இவரின் ஸ்விங், டெத் ஓவர் ஸ்பெஷல் சென்னை அணியின் பந்து வீச்சுக்கு பலம். அது மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தீபக் சாஹரின் கையில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஒரே ஓவரில் சஞ்சு சாம்சன், விஜய் சங்கரை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்திய லுங்கி நிகிடி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர் கொடுத்தது அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்துவிட்டது. அவர் இன்னும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.

    சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, பியூஷ் சாவ்லா இருவர் மட்டுமே. துபாய் மைதானம் மிகப்பெரியது என்பதால் அதிக  அளவு சிக்சர் கொடுக்க வாய்ப்பில்லை. சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிரணியை கட்டுப்படுத்தலாம்.

    ஒட்டுமொத்தமாக வாட்சன், டோனி பேட்டிங்கை பொறுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றித் தோல்வியை கணிக்க முடியும்.

    டெல்லி அணி இந்த முறை தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வெல்லும் என்ற தீர்மானத்துடன் களம் இறங்கியுள்ளது. முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றனர். அந்த அணியில் பிரித்வி ஷா, தவான், ஹெட்மையர் என முதல் மூன்று வரிசையில் பலமான வீரர்களை வைத்துள்ளது. ஒருவருக்கு ஆட்டம் பிடித்தால் போதும். பந்து வீசுவது கடினமாகிவிடும். பஞ்சாப் அணிக்கெதிராக இந்த மூன்று பேரும் சொதப்பினர். சென்னைக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்க விரும்புவார்கள்.

    மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் அய்யர் 39 ரன்களும், பண்ட் 31 ரன்களும் சேர்த்தனர். ஆனால் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடி அணியை மீட்டெடுத்தார். அவர் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி மகிழ்ச்சியில் உள்ளது.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நோர்ட்ஜ், ரபடா, ஸ்டாய்னிஸ், இசாந்த் சர்மா, மோகித் சர்மா என அனுபவ வீரர்களை வைத்துள்ளது. காயம் காரணமாக இசாந்த் விளையாடமாட்டார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவுதான். மோகித் சர்மா முதல் போட்டியில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இவர் பந்தவீச்சை சரி செய்து கொண்டால் 12 ஓவர்களை சமாளிப்பது சென்னைக்கு சவாலான விசயம்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

    சுழற்பந்து வீச்சில் அஸ்வின், அக்சார் பட்டேல் உள்ளனர். அஸ்வின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழத்தினார். ஆனால் காயம் காரணமாக வெளியேறிவிட்டார். தற்போது உடற்தகுதி பெற்று சென்னைக்கு எதிராக தயாராவிட்டார்.

    பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் அந்த அணிக்கு கவலை இல்லை ஐந்து பேரில் ஒருவர் சொதப்பினாலும், ஸ்டாய்னிஸ் 6-வது பவுலராக கைக்கொடுக்க உள்ளார். தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் ரபடா மிகப்பெரிய பலமாக இருப்பார். சென்னை அணிக்கு ரபடா மிகப்பெரிய அச்சுறுத்தலா இருப்பார்.

    மொத்தத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்துதான் சென்னையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.
    கொல்கத்தா அணியை வீழ்த்திய மும்பை பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது.

    அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 54 பந்தில் 80 ரன்னும் (3 பவுண்டரி, 6 சிக்சர்), சூர்ய குமார் யாதவ் 28 பந்தில் 47 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்னும் எடுத்தனர். ஷிவம்மவி 2 விக்கெட்டும், சுனில் நரீன், ஆந்த்ரே ரசல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 49 ரன்வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

    கும்மின்ஸ் அதிகபட்சமாக 12 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். போல்ட், பேட்டின்சன், பும்ரா, ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், போலார்ட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் திட்டமிட்டு விளையாடினோம். எங்களது திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி இந்த வெற்றியை பெற்றோம். எங்களது ஆட்டம் இரக்கமற்றதாக இருந்தது. எங்களது பேட்டிங்கும், பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது.

    வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை பெற்றோம். போல்ட், பேட்டின்சன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘எங்களது பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முன்னேற்றம் தேவை. இங்குள்ள ஆடுகள தன்மையை வீரர்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை’ என்றார்.

    மும்பை அடுத்த ஆட்டத்தில் பெங்களூரையும் (28-ந்தேதி), கொல்கத்தா அடுத்த போட்டியில் ஐதராபாத்தையும் (26-ந்தேதி) சந்திக்கின்றன.

    ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி இலக்கை எட்டும் நோக்குடன் பேட்டிங் செய்யவில்லை என்று முன்னாள் வீரர் ஷேவாக் குற்றம் சாட்டியுள்ளனர்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது பெரும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.

    இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் கூறுகையில், ‘கடைசி ஓவரில் டோனி விளாசிய 3 சிக்சர் சென்னை அணி இலக்கை நெருங்கியது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம். உண்மை என்னவென்றால், டோனி நடுவில் இலக்கை விரட்ட கூட முயற்சிக்கவில்லை என்பது தான்.

    இதற்கு அவர் (முதல் 13 பந்தில் 10 ரன் எடுத்த டோனி அடுத்த 4 பந்தில் 19 ரன் சேர்த்தார்) பந்துகளை அடிக்காமல் விரயம் செய்ததே சான்று. அவர் முன்வரிசையில் இறங்கியிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக தளர்ந்து விட்டது. ஒரு வேளை அப்படி ரன்ரேட் குறையாமல் கடைசி ஓவரில் 20-22 ரன்கள் தேவையாக இருந்து, அந்த சமயத்தில் டோனி 3 சிக்சர் அடிக்கிறார் என்றால், ‘வாவ்... அற்புதமான நிறைவு’ என்று மக்கள் பாராட்டியிருப்பார்கள்.

    பீல்டிங்கின் போது கூட டோனியின் சில முடிவுகள் விசித்திரமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, பியுஷ் சாவ்லா ரன்களை வாரி வழங்கிய போதும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை டோனியின் கேப்டன்ஷிப்பை மதிப்பிட சொன்னால், 10-க்கு 4 மதிப்பெண் தான் வழங்குவேன்’ என்றார்.
    ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
    புதுடெல்லி:

    17 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நவம்பர் 2-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்க இருந்தது.

    கொரோனா பிரச்சினை காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 17-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால் வெளிநாடுகளில் நடக்க இருந்த இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    அபுதாபி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டி அபுதாபியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர் எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டி செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்கள் குவித்தார். 

    கொல்கத்தா அணியின் ஷிவம் மாவி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ரன்னிலும், சுனில் நரைன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்னிலும், நிதிஷ் ரானா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 11 ரன்கள் 
    எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மேலும், எஞ்சிய கொல்கத்தா வீரர்களும் மும்பை அணியின்
    பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

    இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய கம்மின்ஸ் அதிகபட்சமாக 12 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 33 ரன்கள் குவித்து பேட்டிசன் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஆனால், மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டுக்கான 
    தங்கள் அணியின் முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் பதிவு செய்தது.

    இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கைப்பற்றினார்.

    மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றிபெற்ற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்படுகிறது.
    அபுதாபி:

    அபு தாபியில் நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

    டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டி செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

    தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ரன்னிலும், சுனில் நரைன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்னிலும், நிதிஷ் ரானா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தற்போது 15 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 

    கொல்கத்தா வெற்றிபெற 30 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்படுகிறது.

    மோர்கன் 16 ரன்னிலும், ஆண்டே ரசல் 11 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.  

    ×