என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு போட்டிகளில் வெவ்வேறான அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளன.
ஐபிஎல் 2020 சீசன் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை வெற்றி பெற்றது.
2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது
4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
5-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதில் சென்னை, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த நான்கு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 2-வது வெற்றியை ருசிக்க முடியவில்லை.
ஆகவே, ஆறு போட்டிகள் முடிவில் ஆறு அணிகள் வெற்றி பெற்றது ஆச்சர்யமான விசயமாக கருதப்படுகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் ஆறு அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி 97 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைய கேப்டன் விராட் கோலிதான் முழுப்பொறுப்பாகியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 6-வது லீக் ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. துபாய் மைதானம் மிகவும் பெரியது. முதலில் பேட்டிங் செய்து 160 ரன்களுக்கு மேல் அடித்தால் சேஸிங் செய்வது கடினம். அப்படி இருந்தும் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
ஆர்சிபி-யின் வீரர்கள் சிறப்பாக பந்து வீச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விக்கெட்டுகளை இழக்காவிடிலும், ரன்கள் அதிக அளவில் அடிக்க இயலவில்லை. கேஎல் ராகுல் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார்.
17-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கே.எல். ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். இதனால் கே.எல். ராகுல் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அப்போது ராகுல் 56 பந்தில் 84 ரன்கள் அடித்திருந்தார். பஞ்சாப் அணி 17 ஓவரில் 146 ரன்கள் அடித்திருந்தது.
இந்த கேட்ச்-ஐ பிடித்திருந்தால் பஞ்சாப் அணியை எப்படியும் 170 ரன்னுக்கள் கட்டுப்படித்தியிருக்கும். 18-வது ஓவரை சைனி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்திலும் கேஎல் ராகுல் கொடுத்த எளிதான கேட்ச்-ஐ விராட் கோலி பிடிக்க தவறினார். அப்போது ராகுல் 60 பந்தில் 90 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் 157 ரன்கள் அடித்திருந்தது.
விராட் கோலி இரண்டு வாய்ப்புகள் கொடுத்ததை பயன்படுத்திக் கொண்ட கே.எல். ராகுல் 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி சதம் அடித்தார். அத்துடன் அந்த ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். ஸ்டெயின் 19-வது ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

20-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், கருண் நாயர் ஒரு பவுண்டரியும் விளாசினர். இந்த ஓவரில் 23 ரன்கள் அடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதனால் 20 ஓவரல் 206 ரன்கள் குவித்தது.
விராட் கோலி முதல் கேட்ச்-ஐ தவறவிட்டபின் கே.எல். ராகுல் 13 பந்தில் 48 ரன்கள் விளாசினார். குறிப்பாக கடைசி 9 பந்தில் 42 ரன்கள் விளாசினார். இதுதான் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
மேலும், பேட்டிங்கில் 1 ரன் எடுத்த நிலையில் அவசரப்பட்டு ஆட்டமிழந்ததும் முக்கிய காரணம்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணி அடுத்து 28ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 97 ரன்கள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் விராட் கோலியின் அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் படி 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு அணி அடுத்து 28ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் (69 பந்தில் 132 ரன் - நோட் அவுட் ) அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது,
பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது.
முதல் ஓவரை காட்ரெல் வீசினார். ஓவரின் 4-வது பந்தில் படிக்கல் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்காமல் ஜோஷ் பிலிப்பை களம் இறக்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் 2-வது ஓவரின 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.5 ஓவரில் 53 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறியது.
பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே நிதினாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுந்தர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஷிவம் துபே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷோனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 132 ரன்கள் விளாசிய கேஎல் ராகுல், அதிவேகமாக 2 ஆயிரம் ரன்னைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 206 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் விளாசினார்.
இந்த போட்டியின்போது கேஎல் ராகுல் இரண்டாயிரம் ரன்னைக் கடந்தார். 2 ஆயிரம் ரன்னைக் கடக்க அவருக்கு 60 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 63 இன்னிங்சில் கடந்து அதிவேகமாக கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது கேஎல் ராகுல் அந்த பெருமையை தட்டிப்பறித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 43 இன்னிங்சில் கடந்த முதல் இடத்தில் உள்ளார்.
கேஎல் ராகுல் அட்டகாசமாக விளையாடி 132 ரன்கள் விளாச ஆர்சிபி-க்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஆர்சிபி- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் மயங்க் அகர்வால் சற்று தடுமாறினார்.
பவர் பிளே-யில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது. 6-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மயங்க் அகர்வால் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அடுத்து நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை உடனடியாக தொடங்கவில்லை. 10-வது ஓவரில் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்சருன் 20 ரன்கள் விட்டுக்கொடுக்க பஞ்சாப் அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது.
பூரன் 17 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
17-வது ஓவரின் கடைசி பந்திலும், 18-வது ஓவரின் கடைசி பந்திலும் விராட் கோலியிடம் கொடுத்த கேட்ச்-ஐ தவறவிட்டார். ஸ்டெயின் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். மேலும் 4வது, ஐந்தாவது பந்துகளை சிக்சருக்கு தூக்கி கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். ஸ்டெயின் இந்த ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 23 ரன்கள் விரட்ட 20 ஓவரில 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. கேஎல் ராகுல் 69 பந்தில் 14 பவுண்டரி, 7 சிக்சருடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகளிலும் எம்எஸ் டோனி பின்கள வரிசையில்தான் களம் இறங்கினார்.
அவர் முன்னதாகவே களம் இறங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர. ஆனால் கூடுதலான தனிமைப்படுத்துதல், நீண்ட காலமாக போட்டி கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததுதான் காரணம் என எம்எஸ் டோனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் செல்ல செல்ல எம்எஸ் டோனி விஸ்வரூபம் எடுப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த கேள்வியை வருடந்தோறும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அவர் 14-வது ஓவரில் களம் இறங்கினால், பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் அது உகந்த நேரமாக இருக்கும். அவர் அதிக மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், அணிக்கு திரும்பியுள்ளார்.
இன்னும் அதிகமான தூரம் இல்லை. ஆகவே, அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. ஆனால், தொடர் முடிவதற்குள் சிறப்பாக விளையாடுவார். டு பிளிஸ்சிஸ் இந்த ஃபார்மை அப்படியே தொடர்ந்தால், நாங்கள் தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை, பேட்டிங்கை விட இதுதான் கவலை அளிக்கிறது’’ என்றார்.
ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன் என பாலிவுட் நடிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்அப் உரையாடலை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது போதைப்பொருள் விவகாரத்தில் முன்னணி நடிகைகள், நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிமோன் கம்பாட்டா உள்பட பலரிடம் விசாரணை நடத்த இருக்கிறது.
விசாரணை வளையத்திற்குள் ஷெர்லின் சோப்ராவும் உள்ளார். இவர் ஐபிஎல் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்களால் கண்டேன். இதை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்க தயாராக இருக்கிறேன் என்ற பெரிய குண்டை போட்டுள்ளார்.
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில் ‘‘நான் ஒருமுறை கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியை காண சென்றிருந்தேன். வீரர்களுக்கான பார்ட்டிக்குப்பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன்.
அங்கே சென்ற நான் பார்ட்டியில் சந்தோசமாக கலந்து கொண்டேன். எனினும், நான் சோர்ந்து விட்டதால், முகத்தை க்ளீன் செய்வதற்காக வாஷ்ரூம் சென்றேன். அங்கே என் கண் முன் பார்த்த காட்சி எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பெரும்பாலான நட்டசத்திரங்களின் மனைவிகள் பெண்களுக்கான வாஷ்ரூம் பகுதியில் கோகைன் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். நானும் பதிலுக்கு சிரித்தேன்.
நான் தவறான பாதைக்கு வந்துவிட்டதாக நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். பார்ட்டி முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருந்தது. அதன்பின் போதை பார்ட்டி நடந்திருக்கலாம். ஆண்களுக்கான பகுதிக்கு சென்றிருந்தால், அங்கேயும் என்னால் பார்த்திருக்க முடியும்’’ என்றார்.
ஐபிஎல் 2020 சீசனின் 6-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-
1. கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஜோர்டான், கிருஷ்ணப்பா கவுதம் நீக்கப்பட்டு முருகன் அஸ்வின், ஜேம்ஸ் நீசம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் 2020 சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 3631 ரன்கள் அடித்துள்ளார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 சதம், 46 அரைசதங்களுடன் 6068 ரன்கள் அடித்துள்ளார்.
டீன் ஜோன்சின் மரணத்தை யாராலும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மரணத்திற்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
சச்சின் தெண்டுல்கர் ‘‘டீன் ஜோன்ஸ் மரணம் அடைந்தார் என்ற செய்தி முற்றிலும் இதயத்தை நொறுக்குவதாக இருந்தது. அற்புதமான ஆன்மா முன்னதாகவே சென்று விட்டது. என்னுடைய முதல் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய ஆத்மா சாந்தியடைய, என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பார்த்தீவ் பட்டேல் ‘‘ என்னுடைய நண்பர் விரைவில் சென்று விட்டார். மிகப்பெரிய அதிர்ச்சி. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
ஹர்பஜன் சிங் ‘‘இந்த செய்தி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. குடும்பத்திற்கு அனுதாபங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் ‘‘அதிர்ச்சி, பேரழிவு’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் ‘‘என்னுடை சிறந்த நண்பன் காலமானார் என்ற செய்தி கவலை அளிக்கிறது. அவர் எப்போதும் முழு எனர்ஜி மற்றும் நேர்மறையாக இருப்பவர். அவரை தவற விடுகிறேன். ஆத்மா சாந்தி அடையட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், அனில் கும்ப்ளே, ரவி சாஷ்திரி, சேவாக், ஷிகர் தவான், விராட் கோலி, ஆர்.பி. சிங், முகமது கைஃப், குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பலரும் இரங்கல தெரிவித்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதாக பஞ்சாப் அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 20-ந்தேதி துபாயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 157 ரன்கள் அடித்தது, பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் களம் இறங்கியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஸ்கோர் சமநிலையில் இருக்கும்போது ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோர்டான் ஆட்டமிழந்ததால் போட்டி டையில் முடிந்தது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘ஆர்சிபி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டது என்று உங்களுக்கு தெரியும். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். கடந்த போட்டியில் படிக்கல் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்க்கும்போது மகத்தானதாக இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் எங்கள் திட்டத்துடன் செல்வோம்.
நாங்கள் அனைத்து துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமையை பெற்றுள்ளோம். அந்த நாட்கள் சிறப்பாக விளையாடுவதை பொறுத்து எல்லாமே அமையும். கடந்த ஒரு மாதமாக எங்களுடைய தயார்படுத்துதல் சிறப்பாக இருந்தது. டெல்லி போட்டிக்குப் பிறகு மிகவும் நேர்மறையான சிந்தனையுடன் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும். இந்த இடத்தில் தவறுகளை திருத்தி செயல்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆர்சிபி-க்கு எதிராக அது மைதானத்தில் விளையாடுகிறோம். குறிப்பிட்ட நாளில் அந்த போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 196 ரன்களை சேஸிங் செய்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 80 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் விளாசினர்.
196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணியால் 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 49 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ரஸல், மோர்கன், நிதிஷ் ராணா என தலைசிறந்த வீரர்கள் இருந்த போதிலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் மிரட்டலான பார்ட்னர்ஷிப் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ராகுல் சாஹர், பொல்லார்ட் சப்போர்ட் சிறப்பாக இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டும் வகையிலான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதை பார்க்க முடியவில்லை’’ என்றார்.






