என் மலர்
விளையாட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த ஆண்டு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை பரிகாரம் தேடும் வகையில் விளையாடும் என்று நம்பலாம். புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். இது அவர் கால்பதிக்கும் 8-வது அணியாகும். கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் வலு சேர்க்கிறார்கள். வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர்.
வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
துபாய்:
ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களை எடுத்து தத்தளித்தது.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ரன் குவித்து அவுட்டானார்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் முதல் ஐபிஎல் போட்டி பரபரப்பாகவே இருந்தது. சென்னை - மும்பை அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சென்னை அணியில் ஆல்-ரவுண்டர் பிராவோ இடம் பெறவில்லை. இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ‘‘சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் ’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் குறைந்த பட்சம் 25 சதவீதம் ரசிகர்கள் பார்க்க முடியும் என ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகள் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்றது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும் வெறிச்சோடிய மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் 25 சதவீத ரசிர்களை பார்க்க முடியும் என டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘இரண்டு தலைசிறந்த அணிகள் மோதும் தொடருக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். கால்பந்து போட்டிகளை பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது போல், கிரிக்கெட் போட்டிக்கும் 25 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி இருந்தால் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.
விக்டோரியா மாநில முதல்வர் டேனியல ஆண்ரூவ்ஸ், கடந்த வாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன், பாக்சிங் டே டெஸடில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது ஷமி மூன்று விக்கெட்டுக்கள் சாய்க்க, ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் தவான் ரன் ஏதும் அடிக்காத நிலையில் ரன்அவுட் ஆனார்.
அடுத்து வந்த சிம்ரோன் ஹெட்மையரை 7 ரன்னிலும், பிரித்வி ஷாவை 5 ரன்னிலும் வெளியேற்றினார் முகமது ஷமி. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. குறிப்பாக ஷ்ரேயாஸ் அய்யர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்தை சிக்சருக்கு துரத்தினார். அணியின் ஸ்கோர் 13.6 ஓவரில் 86 ரன்னாக இருக்கும் போது ரிஷப் பண்ட் 31 ரன்னில் வெளியேறினார்.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.1 ஓவரில் 87 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்னிங்ஸ் ஓரளவிற்கு முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

ஆனால், ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் 150-ஐ நெருங்கியது. 19-வது ஓவரில் மூன்று பவுண்டரிளும், கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரிகள் விரட்டினர். அத்துடன் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்து ரன்அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
துபாயில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘ஆடுகளம் குறித்து சரியாக கணிக்க முடியாததால் முதலில் பந்து வீச முடிவு செய்தோம். ஒட்டு மொத்த அணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்திற்குப்பின் வெளியே வந்து விளையாட இருப்பது சிறப்பான வாய்ப்பு’’ என்றார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. தவான், 2. பிரித்வி ஷா, 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஷிம்ரோன் ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. ரபடா, 10. அன்ரச் நோர்ஜ், 11. மோகித் சர்மா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-
1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. சர்பராஸ் கான், 5. கிளென் மேக்ஸ்வெல், 6. நிக்கோலஸ் பூரண், 7. கிருஷ்ணப்பா கவுதம், 8. கிறிஸ் ஜோர்டான், 9. ஷெல்டன் காட்ரெல், 10. ரவி பிஷ்னோய், 11. முகமது ஷமி.
சவுத்தாம்ப்டன் அணிக்கெதிராக ஹாரி கேன் உதவியுடன் ஹியுங்-மின் சன் நான்கு கோல்கள் அடிக்க டோட்டன்ஹாம் 5-2 என வெற்றி பெற்றது.
டோட்டன்ஹாம் - சவுத்தாம்ப்டன் அணிகளுக்கு இடையிலான பிரிமீயர் லீக் கால்பந்து இன்று போட்டி நடைபெற்றது. சவுத்தாம்ப்டன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணியின் டேனி இங்ஸ் முதல் கொலை பதிவு செய்தார். முதல் பாதி நேரம் ஆட்டம் முடியும் நேரத்தில் (45+2) ஹாரி கேன் கொடுத்த பந்தை ஹியுங்-மின் சன் கோலாக்கினார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றது.
2-வது பாதி நேர்த்தில் டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன், ஹியுங்-மின் சன் ஆட்டத்தில் அனல் பறந்தது. 47-வது, 64-வது மற்றும் 73-வது நிமிடத்தில் ஹாரி கேன் உதவியுடன் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடித்தார. ஹியுங். நான்கு கோலிற்கு உதவி புரிந்த நிலையில், 82-வது நிமிடத்தில் ஹாரி கேன் தனது பங்கிற்கு ஒரு ரன் அடித்தார். இதனால் டோட்டன்ஹாம் 5-1 என முன்னிலைப் பெற்றது.
90-வது நிமிடத்தில் சவுத்தாம்ப்டன் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, டேனி இங்ஸ் அதை கோலாக்கினார். இதனால் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ஸ் 5-2 என வெற்றி பெற்றது.
குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளதால் கட்டாயம் ஆறு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் ஜோஸ் பட்லர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து நாட்டு வீரர்களும் போட்டிக்கு தயாராகிவிட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் 36 மணி கோரன்டைன் இருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் விளையாடினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் இடம்பிடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார். இதனால் ஆறு நாட்கள் கோரன்டைன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைமறுதினம் (22-ந்தேதி) நடைபெறும் ஆட்டத்தில் பட்லர் பங்கேற்கமாட்டார்.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ‘‘நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான முதல் போட்டியை தவறவிடுகிறேன். ஏனென்றால், கோரன்டைன் இருக்க வேண்டியுள்ளது. நான் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் வருவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அனுமதி கொடுத்தது சிறந்த விசயம். இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என்றார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த டி20 சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். உலகளவில் சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர் ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
பேட்டிங்கை பொறுத்த வரைக்கும் ரஷித் கான் அதிரடியாக விளையாடி குறைந்த பந்தில் அதிக ரன்கள் குவிக்கக் கூடியவர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்து காட்டியுள்ளார். இந்நிலையில் டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை காட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘எப்போதெல்லாம் இன்னிங்சில் மூன்று அல்லது நான்கு ஓவர்கள் மீதம் உள்ளதோ, அப்போதெல்லால் என்னால் களம் இறங்கி சிறப்பாக விளையாட முடியும் என்ற எண்ணம் எனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
நான் களம் இறங்குவது சூழ்நிலையை பொறுத்தது. பிக் பாஷ் லீக்கில், 15-வது ஓவருக்குப்பின் நான் களம் இறங்கக்கூடிய அவசியம் குறித்து பேசியிருக்கிறேன். நீங்கள் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் இருந்து நேர்மறையாக கருத்தை பெற்றால், அது உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்.
நான் பேட்டிங் செய்வது குறித்து அதிக அளவில் யோசிப்பது கிடையாது. அந்த போட்டி முழுவதும் என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்பேன். அணிக்கு எனது சிறந்த பங்களிப்பை கொடுக்க முயற்சிப்பேன்’’ என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பொது முடக்கத்தால் வீட்டிற்குள்ளேயே இருந்த வீரர்கள் சிலர் உடல் பருமனுடன் காணப்பட்டதால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுமார் ஐந்து மாதத்திற்குப் பிறகு கடந்த மாதம்தான் பயிற்சியை தொடங்கினார். அதற்குள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்ஸ்மேன் சவுரப் திவாரி, சென்னை அணியின் பியூஷ் சாவ்லா ஆகியோர் உடல் பருமனுடன் காணப்பட்டனர்.
உலகத்தரம் வாய்ந்த லீக்கில் உடற்தகுதி இல்லாமல் இப்படியா? விளையாடுவார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னாள் இந்திய ஹாக்கி அணி குப்டன் விரேன் ரஸ்குய்னா கூறுகையில் ‘‘நான் தெருக்களில் விளையாடும் கிரிக்கெட்டை விட அதிகமான கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால், ஐபிஎல் போட்டியில் வீரர்கள் உடற்தகுதி இல்லாமல் விளையாடியதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. உடற்தகுதி சம்பந்தமான மற்றொரு விளையாட்டில் இந்த உடற்குதியின் வீரர்கள் விளையாடுவதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை’’ என்றார்.
‘‘சில வீரர்களின் உடல் பருமனுடன் விளையாடியதை காண முடிந்தது’’ என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஐபிஎல் என்பதை ‘‘India Paunch League’’ என கிண்டல் அடித்துள்ளனர். டோனியின் உடல்வாகு பார்த்து ரசிகர் ஒருவர் ‘‘WWE-க்கு தயாரானதுபோல் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியதை இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது என சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரம்ப போட்டியே பரபரப்பாகவும், விறுப்பாகவும் சென்றது. முதல் போட்டியிலேயே ரசிகர்கள் சுண்டி இழுக்கப்பட்டனர்.
முதல் போட்டியே பரபரப்பாக சென்றுள்ளதால் இதுகுறித்து விரேந்தர் சேவாக் கூறியிருப்பதாவது:-
ஐ.பி.எல். போட்டிக்கு இது சிறந்த தொடக்கம். இந்த போட்டியை பார்க்கும்போது இத்தொடர் பட்டைய கிளப்பும் பட்டாசாக இருப்பது போல் தெரிகிறது. அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ் சூப்பராக விளையாடினர், ஆனால், இறுதியில் சாம் கர்ரனின் கேமியோ மாறுபட்டதாக இருந்தது.
வடா பாவ்-ஐ மீண்டும் இட்லி வென்றது #CSKvMI
இவ்வாறு சேவாக் அதில் குறிப்பிட்டுள்ளார்.






