என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தவான் சதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் இதுவரை மூன்று சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
சி.எஸ்.கே. அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.
இந்த ஐ.பி.எல். சீசனில் அடிக்கப்பட்ட 3-வது செஞ்சுரி ஆகும். 34 ஆட்டத்தில் 3 சதங்களே அடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் (132) மயங்க் அகர்வால் (106), டெல்லி அணியைச் சேர்ந்த ஷிகர் தவான் (101) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
கேஎல ராகுல் சதம் அடிக்கும்போது பஞ்சாப் ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் சதம் அடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் தோல்வியை சந்தித்தது.
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்யும்போது ரபடா சென்னை அணியின் டு பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா 50-வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை வீழ்த்த ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அதிகவமாக, அதாவது குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீர்ர என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் சுனில் நரைன் 32 போட்டிகளிலும, லசித் மலிங்கா 33 போட்டிகளிலும், இம்ரான் தாஹிர் 35 போட்டிகளிலும் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
ரபடா தொடர்ந்து 23 போட்டிகளில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சில் பிரச்சனை இல்லை என ஐபிஎல் பவுலிங் ஆக்சன் கமிட்டில் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பந்து வீசும்போது, அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.
புகார் அளிக்கப்பட்டாலும் தொடர்ந்து பந்து வீசலாம், ஆனால் இன்னொரு முறை புகார் அளிக்கப்பட்டால் தொடர் முழுவதும் பந்து வீச இயலாது தெரிவிக்கப்பட்டது.
இதனால் கொல்கத்தா அணி அற்குப்பின் அவரை களம் இறக்காமல், சுனில் நரைன் பந்து வீச்சை ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி அவது பந்து வீச்சை ஐபிஎல் கமிட்டி ஆய்வு செய்தது, அப்போது முழங்கை ஐபிஎல் விதிமுறையை தாண்டி அதிக டிகிரியாக வளையவில்லை என்று தெரிவித்தது. இதனால் சுனில் நரைன் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் 55 ரன்கள் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் அடித்தது. பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது.
விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி அணிக்கு 41 பந்தில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 22 பந்தில் அரைசதம் அடித்ததோடு அணியை வெற்றி பெற செய்தார். 22 பந்தில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாச ஆர்சிபி 2 பந்துகள் மீதமுள்ள நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் 25 பந்திற்குள் டி வில்லியர்சின் 12-வது அரைசதம் இதுவாகும். இதற்கு முன் டேவிட் வார்னர் 12 முறை இதுபோன்று 25 பந்திற்குள் அரைசதம் அடித்துள்ளார். தற்போது டிவில்லயர்ஸ் அதை சமன் செய்துள்ளார்.
கிறிஸ் கெய்ல், பொல்லார்ட் 7 முறை அடித்து 2-வது இடத்திலும், சேவாக் 6 முறை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.
தவானுக்கு பல கேட்ச்களை மிஸ் செய்ய, கடைசி ஓவரை ஜடேவிடம் கொடுத்து அதற்கு டோனி விளக்கம் அளிக்க சிஎஸ்கே தோல்வி குறித்து ஆராய்வோம்.
சிஎஸ்கே - டெல்லி போட்டி நேற்று ஷார்ஜாவில் நடந்தது. தொடக்கத்தில் ரன்குவிப்பு ஆடுகளமாக இருந்த ஷார்ஜா, தற்போது ட்ரிக்கி பிட்ச்-ஆக மாறிவிட்டது.
இதனால் சேஸிங்கை மறந்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் டாஸ் சிஎஸ்கே-வுக்கு சாதகமாக விழ, தல டோனி பேட்டிங் தேர்வு செய்ததார்.
வந்தவரைக்கும் லாபம் என தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட சாம் கர்ரன் டக்அவுட் ஆனாலும், டு பிளிஸ்சிஸ் ஃபார்முக்கு திரும்பி 58 ரன்கள் அடிக்க, வாட்சன் தன் பங்குக்கு 36 ரன்கள் அடித்தார்.
டோனி 3 ரன்னில் வெளியேற அம்பதி ராயுடு (25 பந்தில் 45), ஜடேஜா (13 பந்தில் 33) ஜோடி கடைசியில் 21 பந்தில் 50 ரன்கள் சேர்க்க டெல்லி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் அளிவிற்கு சிஎஸ்கே 179 ரன்கள் எடுத்தது,
179 ரன்களை டெல்லி அணி எடுக்க முடியாத அளவிற்கு பந்து வீச வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே சிங்கங்கள் களம் இறங்கின.
நீங்கள்தான் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவீர்களா? என்று சவால் விடும் வகையில் இன்-ஸ்விங் சிங்கம் தீபக் சாஹர் பிரித்வி ஷாவை 2-வது பந்திலேயே வெளியேற்றினார். 5-வது ஓவர் முதல் பந்தில் ரகானேவை 8 ரன்னில் வெளியேற்றி பவர் பிளே-யில் சூப்பர் கம்-பேக் கொடுத்தார்.
பவர் பிளேயில் டெல்லி 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் அடித்திருந்தது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் தவான் கொடுத்த கேட்ச்யை தீபக் சாஹர் பிடிக்கத் தவறினார். அப்போது தவான் 17 பந்தில் 25 ரன்கள் எடுத்திருந்தார். அத்துடன் டெல்லியின் ஆட்டம் க்ளோஸ் ஆகியிருக்கும்.
தவான் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளாச ஆரம்பித்தார். 10-வது ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 29 பந்தில் அரைசதம் அடித்தார். பிராவோ வீசிய இது ஓவரின் கடைசி பந்தில் தல டோனி ஒரு கேட்ச் விட்டார். தவான் சரியாக 50 ரன்னில் வெளியேறியிருப்பார்.
சென்னை அணி அந்த வாய்ப்பையும் தவறவிட்டது. அதன்பின் பந்து வீச்சை டைட் செய்ய டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. பிராவோ 23 ரன்னில் ஷ்ரேயாஸ் அய்யரை வெளியேற்றினார்.
16-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லட்டு மாதிரி கொடுத்த கேட்ச்யை அம்பதி ராயுடு தவறிவிட்டார். 3-வது முறையாக 79 ரன்னில் இருந்து தப்பினார்.
மறுபக்கத்தில் ஸ்டாய்னிஸ் 14 பந்தில் 24 ரன்னில் தாகூர் பந்தில் வெளியேற, டெல்லி அணிக்கு கடைசி 24 பந்தில் 41 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரில் ஷர்துல் தாகூர் 9 ரன்களும், 19-வது ஓவரில் சாம் கர்ரன் ஒரு விக்கெட் உடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு திருப்பு முனை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
சரி கடைசி ஓவரை பிராவோ வீசுவார். ஸ்லோவர் ஒன், யார்க்கர், கட்டர் பால் என யுக்தியை பயன்படுத்தி டெல்லியை கட்டுப்படுத்தி வெற்றியை தேடுக்கொடுப்பார் என ரசிகர்கள் நினைக்க, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில ஜடேஜாவை பந்து வீச அழைத்தார்.
இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது டோனி எப்போதுமே லெக் ஸ்பின்னரையோ, லெப்ட் ஆஃர்ம் (Left Arm) ஸ்பின்னரையே பந்து வீச அழைக்கமாட்டார். தவான், அக்சார் பட்டேல் என இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க லெப்ட் ஆஃர்ம் ஸ்பின்னர் ஜடேஜாவை பந்து வீச அழைத்ததும் ரசிகர்கள் ஜர்க்-யாகினர்.
முதல் பந்து வைடு, அதற்கு பதிலான பந்தில் தவான் ஒரு ரன். 2-வது பந்தை பந்தை அக்சார் பட்டேல் இமாயல சிக்சருக்கு தூக்கினார். அப்போது ரசிகர்கள் போட்டி கையில் இருந்து சென்றதாக நினைத்தனர். அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சருக்கு கிளப்பினார்.
இதனால் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. தவானுக்கு மூன்று கேட்கள் விட்டு அவரை சதம் அடிக்க வைத்ததோடு, ஒருபக்கம் நங்கூரம் மாதிரி நிற்க வைத்தது தோல்விக்கு முக்கிய காரணம்.
தோல்விக்கு பின் கடைசி ஓவரை வீச பிராவோ ஃபிட் (Fit) ஆக இல்லை என டோனி கூறினாலும் ஜடேஜாவிடம் கொடுத்த முடிவை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சாம்கர்ரன், ஷர்துல் தாகூர் 18 மற்றும் 19-வது ஓவரில் சூப்பர் கம்-பேக் கொடுத்த பின்னரும் டோனி முடிவால் கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது சிஎஸ்கே.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று இரவு மோதுகின்றன.
அபுதாபி:
ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. இரு அணிகளும் மோதிய போட்டியில் கொல்கத்தா 11-ல், ஐதராபாத் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 6 வெற்றி 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெற்று ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.
பஞ்சாப் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணி கடைசியாக விளையாடிய 5 போட்டியில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஆதிக்கத்தை பஞ்சாப் அணி தடுத்து நிறுத்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 14-ல், பஞ்சாப் 11-ல் வெற்றி பெற்றுள்ளன.

காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
சார்ஜா:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவுக்கு நேற்றைய போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அவரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், பிராவோ முதல் 3 ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மேலும் சில ஆட்டங்களில் விளையாடாமல் போவது அணிக்கு பாதிப்பாக இருக்கும்.
வெளிநாட்டு வீரர்களில் இம்ரான் தாகீர், சான்ட்னெர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனிவரும் ஆட்டங்களில் பிராவோ இடத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தகவலை உறுதி செய்த போலீசார், நேற்று பாபமாவ் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர். அவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 6 செல்போன்கள் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது.
புதுடெல்லி:
இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மே மாதம் ஆன்லைனில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த தேர்தலை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் முதல் நாளில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.
நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் 21-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைவராக இருக்கும் அடில் சமரிவாலா 3-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலாளர் சி.கே.வல்சனின் பதவி காலம் முடிவடைவதால் புதிய செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் ராவல்பிண்டியில் நடந்து வரும் தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பலுசிஸ்தான் அணிக்காக விளையாடினார். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த தெற்கு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் 36 வயதான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார். உமர் குல் 2003 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 47 டெஸ்டில் 163 விக்கெட்டும், 130 ஒருநாள் போட்டியில் 179 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 85 விக்கெட்டும் வீழ்த்தினார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கான அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அபாரமான ‘யார்க்கர்’ பந்து வீச்சு மூலம் உமர் குல் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார்.
ஷார்ஜா:
ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
குறிப்பாக, கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா பந்தை வீசினார். இந்த ஓவரில் டெல்லி அணியின் அக்சர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதனால், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
போட்டிக்குப் பிறகு சென்னை கேப்டன் டோனி கூறியதாவது:
பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. அதேபோல், முதல் இன்னிங்சுக்கும் இரண்டாவது இன்னிங்சுக்கும் பல்வேறு வேறுபாடு இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் (ஆடுகளம்) பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார் என தெரிவித்தார்.
ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி.
சார்ஜா:
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சாம் கர்ரன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
வாட்சன் 36 ரன்னில் வெளியேறினார். டு பிளசிஸ் அரை சதமடித்து அசத்தினார். அவர் 58 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் டோனி 3 ரன்னில் அவுட்டானார்.
அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. அம்பதி ராயுடு 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர் உள்பட 33 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
டெல்லி சார்பில் நார்ட்ஜீ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
பிரித்வி ஷா முதல் ஓவரில் டக் அவுட்டானார். ரகானே 8 ரான்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் பொறுப்புடன் ஆடினார். ஷ்ரேயஸ் அய்யரும் தவானும் சேர்ந்து 68 ரன்கள் சேர்த்தனர். அய்யர் 23 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய ஸ்டோய்னிஸ் 24 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 4 ரன்னிலும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய தவான் சதமடித்தார்.
இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 101 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.