என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
சார்ஜா:
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, சாம் கர்ரன் மற்றும் டு பிளசிஸ் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த சாம் கர்ரன் ரன் எதுவும் எடுக்காமல் துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அடுத்துவந்த ஷேன் வாட்சன், டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 28 பந்துகளை சந்தித்த வாட்சன் 6 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் குவித்து அன்சிஷ் நார்ட்ஜீ பந்து வீச்சில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்திருந்த டு பிளசிஸ், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் டோனி 5 பந்தில் 3 ரன் எடுத்திருந்த நிலையில் நார்ட்ஜீ அவுட் ஆனார். அடுத்துவந்த ஜடேஜா, ராயுடு உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
சிறப்பாக ஆடிய ராயுடு 25 பந்தில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி உள்பட 45 ரன்னுடனும், அதிரடியாக ஆடிய ஜடேஜா 13 பந்தில் 4 சிக்சர்கள் உள்பட 33 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக நார்ட்ஜீ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்சின் அதிரடியால் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ரன்னில் வெளியேறினார்.
22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ரன்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ரன்னில் வெளியேறினார்.
7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித்
1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ரன்னிலும்,ஆர்ச்சர் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
11 பந்துகளை சந்தித்த பிஞ்ச் 14 ரன்னிகள் எடுத்த நிலையில் ஸ்ரேஷ் கோபால் பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, படிக்கல்லுடன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
37 பந்துகளை சந்தித்த படிக்கல் 2 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுடன் ராகுல் தேவாட்டியா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். படிக்கல் வெளியேறிய உடனேயே 32 பந்தில் 43 ரன்கள் குவித்திருந்த கேப்டன் கோலியும் கார்த்திக் தியாகி பந்து வீச்சில் வெளியேறினார்.
இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ், குர்கித்ரட் சிங் மேனுடன் ஜோடி சேர்ந்தார். குர்கித்ரட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மறுமுனையில் டி வில்லியர்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
18 ஓவரில் 143 ரன்கள் எடுத்திருந்த பெங்களூர் அணி வெற்றிபெற 2 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய உனாத்கட் பந்து வீச்சை டிவில்லியர்ஸ் புரட்டி எடுத்தார். அந்த ஓவரில் 3 சிக்சர்கள் உள்பட 25 ரன்கள் குவிந்தது.
இறுதியாக 19.4 ஓவரிலேயே பெங்களூர் அணி 179 ரன்களை எட்டியது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கு வழிவகுத்தார்.
ராஜஸ்தான் அணியின் ஸ்ரேஷ் கோபால், கார்திக் தியாகி, தேவாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சார்ஜா:
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
டு பிளசிஸ், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி (கேப்டன்), கேதார் ஜாதவ், ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சாஹர், சார்தூல் தாகூர், கரன் சர்மா
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
பிரித்திவி ஷா, ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேஷ் அய்யர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னஸ், அலெக்ஸ் கேரி, அக்சர் பட்டேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்சிஷ் நார்ட்ஜீ
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் குவித்தது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ரன்னில் வெளியேறினார்.
22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ரன்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ரன்னில் வெளியேறினார்.
7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித்
1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ரன்னிலும், ஆர்ச்சர் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. பென் ஸ்டோக்ஸ், 2. ஜோஸ் பட்லர், 3. ஸ்டீவ் சுமித் 4. சஞ்சுவ் சாம்சங், 5. ராபின் உத்தப்பா, 6. ரியன் பராக், 7. ராகுல் தேவாட்டியா, 8. ஆர்ச்சர், 9. ஸ்ரேஷ் கோபால், 10. ஜெயதேவ் உதான்கட், 11. கார்த்திக்
தியாகி.
பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச், 2,.தேவ்தத் படிக்கல், 3. விராக் கோலி, 4. ஏபி டிவில்லியர்ஸ், 5. குர்கித்ரட் சிங் மன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கிரிஸ் மோரிஸ், 8. ஷபாப் அகமது, 9. உடாணா, நவ்தீப் சைனி, சாஹல்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சை 6-வது வரிசையில் களம் இறக்கியது ஏன்? என்பதற்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி விளக்கம் அளித்தார்.
சார்ஜா:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
இதில் பெங்களூரு நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி கடைசி பந்தில் நிகோலஸ் பூரனின் அதிரடி சிக்சரால் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்து அசத்தியது. 49 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்த பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் பேட்டிங்கில் 6-வது வரிசையில் களம் இறக்கப்பட்டார். வழக்கமாக 4-வது வரிசையில் களம் காணும் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டு 2 ரன்னில் ஆட்டம் இழந்தது விமர்சிக்கப்பட்டது. இது குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலியிடம் கேட்ட போது கூறுகையில், ‘டிவில்லியர்சை 6-வது வரிசையில் களம் இறக்குவது குறித்து நாங்கள் பேசியே முடிவு எடுத்தோம். பயிற்சியாளர் தரப்பில் இருந்து இடது கை, வலது கை பேட்ஸ்மேன் இணைந்து ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியில் 2 லெக் ஸ்பின்னர்கள் (ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின்) இருப்பதால் இடது-வலது கை பார்ட்னர்ஷிப் ஆட்டம் உதவும் என்று இந்த முடிவை எடுத்தோம். இதனால் தான் வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேவை, டிவில்லியர்சுக்கு முன்பாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம். சில சமயங்களில் இதுபோன்ற முடிவுகளுக்கு பலன் கிடைக்காமல் போகலாம். இருப்பினும் எங்களது முடிவு குறித்து மகிழ்ச்சியே அடைகிறோம். பந்து வீச்சுக்கு சிறப்பான ஆடுகளமாக இல்லாவிட்டாலும், பஞ்சாப் அணியினர் நன்றாக பந்து வீசினார்கள்.இந்த ஆட்டத்தில் எங்கள் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். கடைசி ஓவரை வீசுகையில் சாஹலிடம் எந்த உரையாடலும் நடத்தவில்லை. கடைசி பந்தை வீசும் போது மட்டும் வெளியில் வீசுமாறு தெரிவித்தோம். ஆனால் நிகோலஸ் பூரன் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கே எல்லா பாராட்டும் சாரும்’ என்றார்.
குயின்டான் டி காக் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் விளாச மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெடின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்களே எடுத்தது. பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 10.3 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடிக்க மும்பைக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கேகேஆர்.
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் அபு தாபி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். திரிபாதி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் ராணா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், அந்த்ரே ரஸல் 12 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் ஷுப்மான் கில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
இதனால் கொல்கத்தா 61 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. கொல்கத்தா 100 ரன்னுக்குள் சுருண்டு விடும் என நினைத்தனர். அப்போதுதான் 6-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மோர்கன் 39 ரன்களும், பேட் கம்மின்ஸ் 53 ரன்களும் அடிக்க கொல்கத்தா 148 ரன்கள் அடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சார் 2 விக்கெட்டும் போல்ட், கவுல்டர்-நைல், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
துபாயில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. அந்த்ரே ரஸல், 7. கிறிஸ் க்ரீன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஷிவம் மவி, 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. நாதன் கவுல்டர் நைல், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் தோல்விக்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
ஐபிஎல் 34-வது லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது.
துபாயில் ஏற்கனவே நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 44 ரன்னில் தோல்வியடைந்தாலும், கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே-வுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
7-வது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பிறகு ஐதராபாத் அணிக்கெதிராக பல்வேறு மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டார் எம்எஸ் டோனி.
பந்து வீச்சு, பேட்டிங்கில் அதிரடி காட்டும் சுட்டிப்பையன் சாம் கர்ரனை தொடக்க வீரராக களம் இறக்கி, வாட்சனை 3-வது வரிசைக்கு இறக்கினார். டு பிளிஸ்சிஸ் (0) கைக்கொடுக்காவிடிலும் சாம் கர்ரன் 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து பவர் பிளேயில் 44 ரன்கள் வர முக்கிய காரணமாக இருந்தார்.
அதன்பின் மிடில் ஆர்டரில் வாட்சன் (42), அம்பதி ராயுடு (41) ஜோடி நிதானமாக 15 ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று 116 ரன்கள் அடிக்க, இறுதியில் ஜடேஜா (10 பந்தில் 25 ரன்), டோனி (13 பந்தில் 21) ரன்கள் அடித்து கட்டுப்படுத்தக் கூடிய ஸ்கோரை எட்டியது.
தைரியமாக ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு ஏழு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது சிஎஸ்கே-வுக்கு கைக்கொடுத்தது.
டோனி பந்து வீச்சாளர்களுக்கான வியூகத்தை சிறப்பாக அமைத்தார். தீபக் சாஹர் பவர்பிளேயில் சற்று கூடுதல் ரன் கொடுக்க தொடர்ந்து நான்கு ஓவர்களை கொடுத்து முடித்தார்.
சுட்டிப்பையன் பவர் பிளேயில் 3 ஓவர் வீசி வார்னரை அவுட்டாக்கி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார். கடந்த சில போட்டிகளில் கர்ரன் டெத் ஓவரில் ரன்கள் வாரிக்கொடுத்ததால் 3 ஓவருடன் அவரை நிறுத்திக் கொண்டார் டோனி. ஷர்துல் தாகூரை இரண்டு ஓவருக்கும், பிராவோவை 3 ஓவருக்கும் சூப்பராக பயன்படுத்தினார். இருவரும் 3 விக்கெட் பெற்றுக் கொடுத்தனர். பிராவோ கொஞ்சம் கொஞ்சமாக பழைய பாஃர்முக்கு திரும்பி, டெத் ஓவரில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார். முக்கியமான கட்டத்தில் அணிக்கு இது பலமாக இருக்கிறது.
இதே திட்டத்துடன்தான் டெல்லிக்கு எதிராகவும் களம் இறங்கலாம். ஆனால் ஷார்ஜா மைதானம் தொடக்கத்தில் பேட்டிங்கின் சொர்க்கபூமியாக இருந்தது. ஆனால் கடந்த ஐந்து ஐந்து போட்டிகளில் ஆர்சிபி - பஞ்சாப் போட்டியைத் தவிர மற்ற நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியை வெற்றி பெற்றுள்ளது.
அதுவும் முதலில் பேட்டிங் செய்த அணி அதிக ரன்னும், சேஸிங் செய்த அணி படுதோல்வியும் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வென்று 180 ரன்களுக்கு மேல் ரன்கள் அடித்தால் சென்னை அணி வெற்றியை எதிர்பார்க்கலாம். 4-வது வெற்றியை பெற்றே தீர வேண்டும் என்ற குறிக்கோள் உடன் சிஎஸ்கே களம் இறங்கும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 போட்டிகளில் 6-ல் வெற்றி வாகை சூடியுள்ளது.
தவான் முதல் ஆறு இன்னிங்சில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து பார்முக்கு வந்துள்ளார். ரிஷப் பண்ட், ஹெட்மையர் இல்லாத நேரத்தில் தவான் பார்ம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.
ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங்கில் உள்ளனர். ரகானே இரண்டு போட்டிகளில் ஜொலிக்கவில்லை. எப்படியும் 160 ரன்களை தாண்டும் திறனையை பெற்றுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யருக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டது, ஒருவேளை களம் இறங்காவிடில் அது டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்த அணியின் முதுகெலும்பே பந்து வீச்சுதான். ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே ஜோடி அபாரமாக பந்து வீசுகிறது. அது பவர்பிளே ஆக இருந்தாலும் சரி, டெத் ஓவர்களாக இருந்தாலு சரி. ரபடா எல்லா போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இருவரும் ரன் கொடுத்து விட்டால் டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இவர்களுக்கு துணையாக கடந்த போட்டியில் அறிமுகம் வீரர் துஷார் தேஷ்பாண்டே நல்ல முறையில் பந்து வீசினார்.
சுழற்பந்து வீச்சில் அஸ்வின் அந்த அணிக்கு அசுர பலம். அக்சார் பட்டேல் ஆதரவாக இருக்கிறார். ஐந்து பந்து வீச்சாளர்கள் என்றாலும் ஸ்டாய்னிஸ் அவசரத்திற்கு உள்ளார். ஒட்டுமொத்தத்தில் பவுலிங்கை டார்கெட் செய்யும் அணிக்கு வெற்றி நிச்சயம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்தார். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த அவருக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கொல்கத்தா இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
ஒடென்ஸ்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 49-வது இடத்தில் உள்ள கனடா வீரர் ஜாசன் அந்தோணியை சந்தித்தார். 33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 19 வயது இந்திய வீரரான லக்ஷயா சென் 21-15, 7-21, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் சோல்பெர்க் விட்டிங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 49-வது இடத்தில் உள்ள கனடா வீரர் ஜாசன் அந்தோணியை சந்தித்தார். 33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 19 வயது இந்திய வீரரான லக்ஷயா சென் 21-15, 7-21, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் சோல்பெர்க் விட்டிங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.






