என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
    ஒடென்ஸ்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 49-வது இடத்தில் உள்ள கனடா வீரர் ஜாசன் அந்தோணியை சந்தித்தார். 33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 19 வயது இந்திய வீரரான லக்‌ஷயா சென் 21-15, 7-21, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் சோல்பெர்க் விட்டிங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.
    அசாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் 16 இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகளில் 52 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதற்கான இந்திய அணியினர் நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றனர்.

    டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக குத்துச்சண்டை அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உலக சாம்பியன்ஷிப்போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பவருமான அசாம் மாநிலத்தை சேர்ந்த 23 வயது வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதனையத்து அவர் இத்தாலி செல்லவில்லை. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கிறிஸ் கெயில், ராகுல் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
    ஷார்ஜா:

    ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.

    பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர்.

    தேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

    பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார்.

    ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்துள்ளது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

    கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ராகுலுடன் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    இறுதி கட்டத்தில் 53 ரன் எடுத்த நிலையில் கெயில் அவுட்டானார்.

    முடிவில், ஆட்டத்தின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 61 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 
    கிரிக்கெட்டில் வைடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கேப்டன்களுக்கும் ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    சிஎஸ்கே - ஐதராபாத் இடையிலான போட்டி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஐதராபாத் அணி 19-வது ஓவரை விளையாடியபோது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை வைடு என அறிவிக்க அம்பயர் கையை எடுத்தார். ஆனால் அந்தநேரம் பார்த்து நடுவரை தோனி முறைத்து பார்க்க, வைடு கொடுக்காமல் அம்பயர் செய்கையை மாற்றினார். சிஎஸ்கே கேப்டன் தோனியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது குறித்துப் பேசிய விராட் கோலி ‘‘வைடு அல்லது இடுப்பு உயரத்துக்கு மேல் வரும் புல்டாஸ் பந்துகள் நோ-பால் போன்ற நடுவர் முடிவுகளின் மீது பீல்டிங் கேப்டனுக்கு ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஒரு வேளை ஒரு ரன்னில் போட்டியை தோற்கும்போது ஏதாவது ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்து கொண்டிருக்கிறார்.
    கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் கிடைக்காமல் உள்ளார். அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.

    இந்நிலையில் இது குறித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா? இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.

    எனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
    ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ஜா மைதானம் மிக சிறியது என்பதால் தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடலாம் என நினைத்தனர். ஆனால் பஞ்சாப் முதல் ஓவரிலேயே சுழற்பந்தை பயன்படுத்தியது. இருந்தாலும் இருவரும் அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர்.

    முதல் 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 38 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார் இந்த ஓவரில் முதல் பந்தில் தேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

    7-வது ஓவரை முருகன் அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி முருகன் அஸ்வின், பிஷ்னோய் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னரை மிடில் ஆர்டரில் பந்து வீச, ஆர்சிபி டி வில்லியர்ஸை களம் இறக்காமல் வாஷிங்டன் சுந்தர், ஷவம் டுபே ஆகியோரை களம் இறக்கியது.

    11-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார்.

    ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்துள்ளது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.
    ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    ஆர்சிபி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆர்சிபி அணி:-

    1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. இசுரு உடானா,  9. நவ்தீப் சைனி, 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:-

    1. கிறிஸ் கெய்ல், 2. கேஎல் ராகுல், 3. மயங்க் அகர்வால், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா, 7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. முகமது ஷமி, 10. பிஷ்னோய், 11. அர்ஷ்தீப் சிங். #IPL2020 #RCBvKXIP
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்த கேஎல் ராகுல், அந்த அணி கேட்ச் மிஸ் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் இன்று 2-வது முறையாக ஆர்சிபி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏராளமான கேட்ச்களை தவறவிட்டது. விராட் கோலியே இரண்டு கேட்ச்கள் விட்டார். இதனால் கேஎல் ராகுல் சதம் அடிக்க, பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்து 97 ரன்னில் வெற்றி பெற்றது.

    இன்று 2-வது முறையாக மோதும் நிலையில் இன்ஸ்டாகிராமில் நிகழ்வில் இருவரும் உரையாடினர்.

    நாங்கள் ஒரேயொரு போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளோம். அதுவும் ஆர்சிபி-க்கு எதிராகத்தான். இது சற்று கூடுதல் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கும். நான் எப்போதுமே ஆர்சிபிக்கு எதிராக ரசித்து பேட்டிங் செய்வேன். மீண்டும் ஒரு வாணவேடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என கேஎல் ராகுல் விராட் கோலியிடம் தெரிவித்தார்.

    விராட் கோலி: போட்டிக்கு நீங்கள் எவ்வாறு தயார்படுத்துள்ளீர்கள்?

    கேஎல் ராகுல்: நான் சொன்னதுபோல், ஒவ்வொரு போட்டியும் தற்போது எங்களுக்கு முக்கியமானதுதான்.

    விராட் கோலி: வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறுவதுபோல் எனக்கு பதில் அளிக்கக்கூடாது.

    கேஎல் ராகுல்: அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிபெற வேண்டியது அவசியம்.

    விராட் கோலி: நாங்கள் தொடரின் தொடக்கத்தில் மோசமான தோல்வியை சந்தித்தோம். அது உங்களுக்குத் தெரியும்.

    கேஎல் ராகுல்: எனக்குத் தெரியும். உங்களுடைய வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என்று நம்பி கொண்டிருக்கிறேன். 

    கோலி: கடந்த சீனில் நானும் இதுபோன்ற நிலையில்தான் சென்று கொண்டிருந்தேன். பந்தை தூக்கி அடிப்பதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும் (கேட்ச் விட்டதை மனதில் வைத்து).

    கேஎல் ராகுல்: எனக்குத் தெரியும். ஒருபோதும் இனிமேல் அப்படி நடக்காது.

    கோலி: இது சூப்பர் ஆட்டமாக இருக்கப்போகிறது. நீங்கள் சிறந்த அணி. எங்களுடைய அணியில் சிறப்பாக விளையாடி  வருகிறது. ஷார்ஜா மிகவும் பொழுபோக்காக இருக்கப் போகிறது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே நேற்று நடந்த போட்டியில் 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியால் 148 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இந்த போட்டியில் டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே புயல் வேகத்தில் பந்து வீசினார். அவர் ஒரு பந்தை மணிக்கு 156.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டுக்குப்பின் அதிவேகத்தில் வீசப்பட்ட பந்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியது குறித்து அன்ரிச் நோர்ட்ஜே கூறுகையில் ‘‘போட்டி முடிந்த பின்னர்தான் நான் கேட்டு தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேகமாக பந்தை வீசி நான் கடின பயிற்சி மேற்கொண்டேன்.

    பந்தை வேகமாக வீசியதால் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையிலேயே நான் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய் விரும்புகிறேன். இதுதான் முக்கியமன விசயம்’’ என்றார்.
    ராஜஸ்தான் அணிக்கெதராக ஷ்ரேயாஸ் அய்யர் காயத்தால் வெளியேற, தவான் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.
    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றது. துபாயில் நடந்த 30 -வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    ஷிகர் தவான் 33 பந்தில் 57 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர் ), கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 43 பந்தில் 53 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்சர் 3 விக்கெட்டும், உனத்கட் 2 விக்கெட்டும் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. இதனால் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பென் ஸ்டோக்ஸ் 35 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி), உத்தப்பா 27 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அன்ரிச் நோர்ஜ், துஷ்கார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும் ரபடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி உள்ளது. ஏற்கனவே 46 ரன்னில் தோற்கடித்தது.

    கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் தவான் அணியை வழி நடத்தினார்.

    ராஜஸ்தானை வீழ்த்தியது குறித்து டெல்லி அணியின் தற்காலிக கேப்டன் தவான் கூறியதாவது:-

    இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டோம். அதை எங்களுக்கு சாதகமாக்கி கொண்டோம். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    ஷ்ரேயாய் அய்யருக்கு தோள்பட்டையில் சிறிய வலி இருக்கிறது. அதன் முழு விவரம் இன்று தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தான் அணி 5-வது தோல்வியை தழுவியது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறும்போது “இந்த தோல்வி எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் அதிகமான விக்கெட் விழுந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது” என்றார்.

    டெல்லி அணி 9-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 17-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. ராஜஸ்தான் அடுத்த போட்டியில் அதே தினத்தில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்
    ஒடென்ஸ்:

    மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ளவரும், முன்னாள் சாம்பியனுமான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் 52-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் டாபி பென்டியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 12-21, 14-21 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டென்சனிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் இந்திய வீரரான சுபாங்கர் தேவ் 13-21, 8-21 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியிடம் வீழ்ந்தார்.
    உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் வீரர் நெய்மார் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
    லிமா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

    நேற்று முன்தினம் பெரு தலைநகர் லிமாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, பெருவை சந்தித்தது. 6-வது நிமிடத்திலேயே பெரு வீரர் ஆந்த்ரே கரில்லோ கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் 28-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். 59-வது நிமிடத்தில் பெரு வீரர் ரெனட்டோ டாபியா கோல் போட மறுபடியும் அந்த அணி முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் பந்தை வலைக்குள் திணித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய நெய்மார் கடைசி நிமிடத்தில் 3-வது கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முடிவில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. 28 வயதான நெய்மார் இதுவரை 64 சர்வதேச கோல்கள் (103 ஆட்டம்) அடித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரொனால்டோவை (62 கோல்) பின்னுக்கு தள்ளினார். முதலிடத்தில் உள்ள பீலேவையும் (77 கோல்) விரைவில் முந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்றொரு ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. இதில் ஒரு கட்டத்தில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் அர்ஜென்டினா மாற்று ஆட்டக்காரர் ஜோகுவைன் கோரியா 79-வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இன்னொரு ஆட்டத்தில் ஈகுவடார் அணி 4-2 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவேக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
    ×