search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட் கம்மின்ஸ்
    X
    பேட் கம்மின்ஸ்

    பேட்ஸ்மேனாக மாறிய பேட் கம்மின்ஸ்: மும்பைக்கு 149 ரன்கள் வெற்றி இலக்கு

    முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடிக்க மும்பைக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கேகேஆர்.
    மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் அபு தாபி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். திரிபாதி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நிதிஷ் ராணா 5 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 5 ரன்னிலும், அந்த்ரே ரஸல் 12 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் ஷுப்மான் கில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இதனால் கொல்கத்தா 61 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. கொல்கத்தா 100 ரன்னுக்குள் சுருண்டு விடும் என நினைத்தனர். அப்போதுதான் 6-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மோர்கன் 39 ரன்களும், பேட் கம்மின்ஸ் 53 ரன்களும் அடிக்க கொல்கத்தா 148 ரன்கள் அடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் ராகுல் சார் 2 விக்கெட்டும் போல்ட், கவுல்டர்-நைல், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×