search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricket betting"

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018#VIVOIPL #CricketBetting

    லக்னோ:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள நந்தகிராமில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஆவார்.

    இந்த சோதனையின்போது பணம், லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டெபிள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018#VIVOIPL #CricketBetting
    ஐதராபாத் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரூ.42.87 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். #IPL2018 #VIVOIPL #IPLbetting

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ரூ. 42.87 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் ஆறு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஐதராபாத் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #VIVOIPL #IPLbetting
    பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம், 10 செல்போன்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தின் ஜேம்ஷெட்பூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.26.44 லட்சம் பணம், 390 கிராம் தங்கம், 13 செல்போன்கள், 2 லேப்டாப்கள், ஒரு டேப் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
    டெல்லியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியின் கஞ்ஜவ்லா பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் போலீசார் நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். 

    அவர்கள் கடந்த மே 13-ம் தேதி நடைபெற்ற சென்னை - ஐதராபாத் இடையிலான ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 68 செல்போன்கள், 8 லேப்டாப்கள், 3 எல்.இ.டி. டிவிகள் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018 #VIVOIPL #CricketBetting

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சாடட்கஞ்ச் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பணம், ஐந்து செல்போன்கள், டிவி, செட்-டாப் பாக்ஸ் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL #CricketBetting
    ×