search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - உ.பி.யில் 10 பேர் கைது
    X

    ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - உ.பி.யில் 10 பேர் கைது

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018#VIVOIPL #CricketBetting

    லக்னோ:

    ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள நந்தகிராமில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஆவார்.

    இந்த சோதனையின்போது பணம், லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டெபிள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018#VIVOIPL #CricketBetting
    Next Story
    ×