என் மலர்
நீங்கள் தேடியது "சூதாட்ட கும்பல் கைது"
- போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியை கும்பலை கைது செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் தலைமையிலான போலீசார் பங்களாபட்டி அண்ணாநகர் வராகநதி ஆற்றுப்படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது முருகன்(53), கணேசன்(41), பால்பாண்டி(48), துரைச்சாமி(39) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர்
மேலசொக்கநாதபுரம்:
போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையி லான போலீசார் நகலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர்.
அப்போது அங்குள்ள சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கருப்பசாமி (வயது50), சந்தனகுமார் (31), மணிகண்டன் (31), காளி முத்து (33), முருகன் (48) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #IPL2018#VIVOIPL #CricketBetting
லக்னோ:
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள நந்தகிராமில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஆவார்.
இந்த சோதனையின்போது பணம், லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டெபிள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018#VIVOIPL #CricketBetting






