என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
    மாட்ரிட்:

    ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் நடந்த கெடாபி கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 56-வது நிமிடத்தில் கெடாபி வீரர் ஜெமி மாட்டா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பார்சிலோனா முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்சி, கிரிஸ்மான் நெருங்கி வந்து சில வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இந்த சீசனில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 7 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

    இதே போல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான கேடிஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. கேடிஸ் வீரர் அந்தோணி லோஜனோ 16-வது நிமிடத்தில் கோல் அடித்தார். கேடிஸ் அணி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியிருக்கிறது. ரியல்மாட்ரிட், கெடாபி, கேடிஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் டாப்-3 இடங்களில் உள்ளன.
    ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
    அபுதாபி:

    துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார். 

    அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. 

    தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.

    இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.

    இதேபோல், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
    இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.
    துபாய்:

    மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    38 ரன்களுக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அகர்வால் 11 ரன்னிலும், கிரிஸ் கெயில் 24 ரன்னிலும், நிகோலஸ் பூரன் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.

    முதல் பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 2வது பந்தில் பூரன் அவுட்டானார். 3வது பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்தில் ஒரு ரன்னும், 5வது பந்தில் 2 ரன்னும் கிடைத்தது. 6வது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார்.

    முதல் பந்தில் ஒரு ரன்னும்,2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் ஒரு ரன்னும் கிடைத்தது. 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.

    இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. 

    அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
    பொல்லார்ட், நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    ரோகித் சர்மா 9 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ரன்களும், குருணால் பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தனர். பொல்லார்ட் 12 பந்தில் 34 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 12 பந்தில் 24 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
    ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக சூப்பர் ஓவரை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதன்முறையாக வெற்றியை ருசித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனைகளும், சில சுவாரஸ்யமாக நிகழ்வுகளும் நடப்பதுண்டு. இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவத்தை பார்ப்போம்.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 163 ரன்கள் அடித்தது. 164 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியும் 163 ரன்களே அடித்ததால் போட்டி ‘டை’ ஆனது. இந்த சீசனில் ஏற்கனவே டெல்லி - பஞ்சாப், ஆர்சிபி - மும்பை இடையிலான ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இந்த போட்டி 3-வதாகும்.

    ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே சீசனில் மூன்று போட்டிகள் டையில் முடிந்தது இதுவே முதல்முறையாகும். 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்றைய போட்டியுடன் 4-வது முறையாக சூப்பர் ஓவரை சந்தித்துள்ளது. இதற்கு முன் 2009-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும், 2014-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும், கடந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராகவும் சூப்பர் ஓவரில் தோல்வியையே சந்தித்துள்ளது. இன்றுதான் வெற்றியை ருசித்துள்ளது.
    சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

    முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களம் இறங்கியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 17 ரன்களே எடுத்ததால் போட்டி டை ஆனது.

    இதனால் சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது, வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் சமன் 2 ரன் அடிக்க 3-வது பந்திலும் இவர் க்ளீன் போல்டானார்.

    இதனால் 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களம் இறங்கினர்.
    அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா வர இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் அணி ஒரு பகல்-இரவு ஆட்டத்தில் விளையாடும் எனத் தெரிகிறது.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் வெர்ச்சுவல் மீட்டிங்கில் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தனர்.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே இந்தியாவில் மூன்று முதல் நான்கு மைதானங்களில் பயோ-செக்யூரிட்டி முறையில் இங்கிலாந்து - இந்தியா தொடரை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதில் அகமதாபாத் அல்லது கொல்கத்தாவில் பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடர் இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஐபிஎல் தொடரின் பயோ செக்யூரில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
    துபாயில் நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    1. குயின்டாட் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 9. நாதன் கவுல்டர் நைல், 10. ராகுல் ஹாசர், 11. டிரென்ட் போல்ட், 12. பும்ரா.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப்:-

    1. கேஎல் ராகுல்,  2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா,  7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. முகமது ஷமி, 10. ரவி பிஷ்னோய், 11. அர்ஷ்தீப் சிங்.
    சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    14-ல் 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யமுடியும். அதற்கு கீழ் வெற்றி பெற்றால் ரன்ரேட், மற்ற அணிகள் எவ்வாறு விளையாடுகிறது என்பதை பொறுத்து அமையும்.

    தற்போதுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 9 போட்டிகளில் விளையாடி முடிந்துள்ளது. இரண்டு அணிகளும் 6-ல் தோல்வியடைந்து 3 வெற்றிகளே பெற்றுள்ளது. இன்னும் ஐந்து போட்டிகள் உள்ளன.

    இந்த ஐந்ந்திலும் வெற்றி பெற்றால்தான் உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதே கட்டத்தில் உள்ளது.

    டெல்லி அணி 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்து 7 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    மோர்கன், தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

    டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 6 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது. ராகுல் திரிபாதி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 36 ரன்களும், நிதிஷ் ராணா 29 ரன்களும் சேர்த்தனர்.

    அந்த்ரே ரஸல் 11 பந்தில் 9 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளிக்க கொல்கத்தா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் கொல்கத்தா 150 ரன்னைக் கடந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்துள்ளது.

    மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 14 பந்தில் தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தவான் சதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் இதுவரை மூன்று சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
    சி.எஸ்.கே. அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.

    இந்த ஐ.பி.எல். சீசனில் அடிக்கப்பட்ட 3-வது செஞ்சுரி ஆகும். 34 ஆட்டத்தில் 3 சதங்களே அடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் (132) மயங்க் அகர்வால்  (106), டெல்லி அணியைச் சேர்ந்த ஷிகர் தவான் (101) ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

    கேஎல ராகுல் சதம் அடிக்கும்போது பஞ்சாப் ஆர்சிபிக்கு எதிராக வெற்றி பெற்றது. மயங்க் அகர்வால் சதம் அடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் தோல்வியை சந்தித்தது.
    டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட் வீழ்த்திய நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்யும்போது ரபடா சென்னை அணியின் டு பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா 50-வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை வீழ்த்த ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அதிகவமாக, அதாவது குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீர்ர என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் சுனில் நரைன் 32 போட்டிகளிலும, லசித் மலிங்கா 33 போட்டிகளிலும், இம்ரான் தாஹிர் 35 போட்டிகளிலும் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    ரபடா தொடர்ந்து 23 போட்டிகளில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார்.
    ×