என் மலர்
விளையாட்டு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சிஎஸ்கே சந்தித்த நிலையில், அணியின் தேர்வை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கேதர் ஜாதவ் அணியில் எதற்கு என்ற விமர்சனம் எழும்பியது, ஒரு வழியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டார். ஒரு போட்டியோடு ஜெகதீசனை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். அதன்பின் சாவ்லா நீக்கப்பட்டு மீண்டும் கேஜர் ஜாதவ் நீக்கப்பட்டது.
இந்நிலையில் அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘டோனி என்ன சொன்னாலும் இந்த நடைமுறையை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இந்த நடைமுறை குறித்து அவர் பேசுவது அர்த்தம் இல்லாதது. செயல்முறை, செயல்முறை பற்றி பேசுகிறார்கள். ஆனால், தேர்வு செயல்முறை அதனாகவே தவறாகிவிட்டது.
டோனியின் டீல் என்ன? ஜெகதீசன் தீப்பொறியாக விளையாடவில்லை என்கிறார். ஆனால், கேதர் ஜாதவ் தீப்பொறியாக விளையாடினாரா?. இது கேலிக்கூத்தானது. அவருடைய பதிலை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். செயல்முறை பற்றி பேசும்போது, சென்னையின் தொடர் அதனாகவே முடிந்துவிட்டதுது.’’ என்றார்.
இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாவால் அறிமுகம் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் டிசம்பர் 13-ந்தேதி வரை ஐந்து அணிகள் மோதும் வகையில் தொடர் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.
கிறிஸ் கெய்லை கண்டி டஸ்கடர்ஸ் அணியும், கார்லஸ் பிராத்வைட்டை தம்புல்லா ஹாக்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை தம்புல்லா அணியும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரியை காலே கிளாடியோட்டர்ஸ் அணியும், சோயிப் மாலிக்கை ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் எடுத்துள்ளது.
டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி எடுத்தள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 125 ரன்களை தாண்ட முடியாமல் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
டாஸ் சாதகமாக அமைந்தாலும் சென்னை அணியால் 125 ரன்களே அடிக்க முடிந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் யாரும் மொத்தமாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் சென்னை அணி பேட்டிங்கில் சறுக்கியது.
பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரின் (70) சிறப்பான ஆட்டத்தால் 17.3 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியடைந்துள்ளது.
இன்னும் மீதமுள்ள நான்கு போட்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் பிளே ஆஃப்ஸ் சுற்று மங்கிப்போனது.
ஒருவேளை நான்கிலும் வெற்றி பெற்று அந்த அணி இந்த அணியை வெற்றி பெற்றால் என்ற கணக்கீடு வந்தால் ஒருவேளை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு வாய்ப்புள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அமித் மிஸ்ராவுக்கு பதிலாக, கர்நாடகாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே சேர்க்கப்பட்டார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 37 வயது சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த 3-ந் தேதி சார்ஜாவில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பிடிக்கையில் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து விலகினார். \
இந்த நிலையில் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக டெல்லி அணியில் கர்நாடகாவை சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவின் துபே நேற்று சேர்க்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான பிரவின் துபே தற்போது கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியில் அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தினார். கர்நாடக மாநில அணிக்காக 14 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்போது அவர் பெங்களூரு அணியின் வலைப்பயிற்சி பவுலராக அமீரகத்தில் இருக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ், போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மாஸ்கோ:
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ரஷியாவில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ரஷிய வீரர் ஆந்த்ரே ருப்லெவ், 27-வது இடம் வகித்த குரோஷிய வீரர் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டில் ரூப்லெப் கைப்பற்றிய 4-வது ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். ஏற்கனவே தோகா, அடிலெய்டு, ஹம்பர்க் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருந்தார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக பட்டம் வென்ற நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா), ரூப்லெவ் சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ரூப்லெவ் தரவரிசையில் 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று போட்டிக்கு ரூப்லெவ் முதல்முறையாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.

சென்னைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ரன்னில் வெளியேறினா. அடுத்துவந்த வாட்சன் 3 பந்தில் 8 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.
25 பந்தில் 22 ரன் எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர்.
ஆனால், ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியவில்லை.
19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ரன்னிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இது ஆகும்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.
முதலில் முக்கிய விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான், அதன்பின் நிதானமாக ஆடியது.
ஜோஸ் பட்லரும், ஸ்மித்தும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பட்லர் 70 ரன்னும், ஸ்மித் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சென்னை அணி வீரர்களின் அதிரடி பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி 31 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிதானமான பேட்டிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டோக்ஸ் மற்றும் உத்தப்பா களமிறங்கினர்.
11 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் எடுத்த ஸ்டோக்ஸ் சென்னை வீரர் தீபக் சாகர் பந்து வீச்சில் வெளியேறினார். 9 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த உத்தப்பா ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த சாம்சங் 3 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் சாகர் பந்துவீச்சில் வெளியேறினார். இதானால் 4.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 28 ரன்களை எடுத்திருந்தது.
தற்போது 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்மித் 1 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் இப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி சென்னை அணியின் டுபிளசிஸ் மற்றும் சாம் கர்ரன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகளை சந்தித்த டு பிளசிஸ் 10 ரன்னில் வெளியேறினா. அடுத்துவந்த வாட்சன் 3 பந்தில் 8 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார்.
25 பந்தில் 22 ரன் எடுத்திருந்த சாம் கர்ரன் ஷ்ரேஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்த வந்த அம்பதி ராயுடு, கேப்டன் டோனி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர்.
ஆனால், ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணி வீரர்களால் அணியின் ஸ்கோரை உயர்த்தமுடியவில்லை.
19 பந்துகளை சந்தித்த ராயுடு 13 ரன்னிலும், 28 பந்துகளை சந்தித்த கேப்டன் டோனி 22 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 30 பந்துகளை சந்தித்து 35 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். 7 பந்துகளை சந்தித்த ஜாதவ் 4 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், தியாகி, கோபால், தேவாட்டியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணி எடுத்த மிகக்குறைவான ஸ்கோர் இது ஆகும்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அபுதாபி:
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதற்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
டு பிளசிஸ், சாம் கரன், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி, ஜடேஜா, கேதார் ஜாதவ், தீபக் சாஹர், புயூஸ் சாவ்லா, சர்துல் தாகூர், ஜோஷ் ஹேசல்உட்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் தேவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேஷ் கோபால், அங்கித் ராஜ்புத், கார்திக் தியாகி
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நஜோமி ஒகுஹரா, கரோலினா மரினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஓடென்ஸ்:
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஓடென்ஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஒகுஹரா 2 ஆண்டுக்கு பிறகு வென்ற முதல் பட்டம் இதுவாகும். ஆண்கள் பிரிவில் சக நாட்டவரான ரஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி டென்மார்க்கின் ஆன்டோன்சென் மகுடம் சூடினார்.

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மாட்ரிட்:
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் நடந்த கெடாபி கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 56-வது நிமிடத்தில் கெடாபி வீரர் ஜெமி மாட்டா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பார்சிலோனா முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்சி, கிரிஸ்மான் நெருங்கி வந்து சில வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இந்த சீசனில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 7 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.
இதே போல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான கேடிஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. கேடிஸ் வீரர் அந்தோணி லோஜனோ 16-வது நிமிடத்தில் கோல் அடித்தார். கேடிஸ் அணி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியிருக்கிறது. ரியல்மாட்ரிட், கெடாபி, கேடிஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் டாப்-3 இடங்களில் உள்ளன.

ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
அபுதாபி:
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை கடந்துள்ளார்.
இதேபோல், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.