என் மலர்
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. சிஎஸ்கே-யின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கியமானது.
ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும்போது காயத்தால் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பிராவோ விலகியுள்ளார். மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் நான்கு போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். கடந்த 11ம் தேதி 6 பேரும், 15ம் தேதி 9 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தூரின் துகோகஞ்ச் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அங்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும் சதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.
அதேபோல், ஒரு ஐ.பி.எல். தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெறும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
கொல்கத்தா:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஒரு டெஸ்ட் பகல்-இரவாக நடத்தப்படும் (பிங்க் பந்து டெஸ்ட்) என்றும், அந்த டெஸ்ட் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் 2-வது முறையாக பகல்-இரவு டெஸ்ட் அரங்கேறப்போகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையே கொல்கத்தாவில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடந்தது.
‘இங்கிலாந்து தொடரை எப்படி எந்தெந்த மைதானங்களில் நடத்துவது என்பதில் சில திட்டங்களை வைத்துள்ளோம். ஆனால் போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எதையும் இறுதி செய்யவில்லை. ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் தேர்வு செய்யப்படும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியை எப்போது தொடங்குவது என்பது முடிவு செய்யப்படும்’ என்றும் கங்குலி தெரிவித்தார்.

ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக லண்டன் வந்துள்ளதாக சிந்து தெரிவித்துள்ளார்.
லண்டன்:
இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் அவர் லண்டன் சென்றதாகவும், ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி திருப்தி அளிக்காததால், ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமில் இருந்து பாதியில் விலகி விட்டதாகவும், குறைந்தது 2 மாதங்கள் கழித்து தான் தாயகம் திரும்புவேன் என்று அவர் கூறியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு பயணத்தின் போது தனது தந்தை பி.வி.ரமணா அல்லது தாயார் விஜயா ஆகியோரில் ஒருவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்ட சிந்து இந்த முறை தனியாக சென்றிருப்பதற்கு இது போன்ற விவகாரங்களே காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் 25 வயதான பி.வி.சிந்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு லண்டன் வந்தேன். அதுவும் எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் எந்த விரிசலோ, பிரச்சினையோ இல்லை. எனக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த எனது பெற்றோருடன் எனக்கு ஏன் பிரச்சினை வரப்போகிறது? நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பம். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். தினமும் எனது குடும்பத்தினருடன் உரையாடுகிறேன். இதே போல் எனது பயிற்சியாளர் கோபிசந்துடனோ அல்லது அவரது அகாடமியில் உள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்துவதிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது.
இவ்வாறு சிந்து கூறியுள்ளார்.
இதற்கிடையே சிந்துவின் தந்தை ரமணா அளித்த பேட்டியில், ‘நாங்கள் சிந்துவுடன் 2 மாதங்கள் தங்கியிருக்க முடியாது. அதனால் தான் அவர் பயற்சிக்காக தனியாக லண்டன் சென்றிருக்கிறார். தேசிய முகாமில் சிந்துவுக்குரிய பயிற்சி முறையாக நடக்கவில்லை. அது மட்டுமின்றி 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு பிறகு தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் பயிற்சி பெற சரியான பார்ட்னரை வழங்கவில்லை. இங்கு தரமான பயிற்சி அவருக்கு கிடைக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கெயில், பூரன், மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தவான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. தவான் 61 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் இறங்கினர்.
ராகுல் 15 ரன்னிலும், அகர்வால் 5 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 29 ரன்னில் வெளியேறினார்.
நிகோலஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 28 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 32 ரன் எடுத்து அவுட்டானார். ஹுடாவும் நீஷமும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 4வது வெற்றி ஆகும்.
சென்னை போட்டியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராகவும் சதம் அடித்து தவான் சாதனைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 7 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் ஆட்மிழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தவான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அரைசசதம் அடித்த தவான் சதத்தை நோக்கி சென்றார்.
அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழக்க, 19-வது ஓவரின் 4-வது பந்தில் இரண்டு ரன் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இவரது சதத்தால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது.
தவான் 57 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்து 61 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தவான் 61 பந்தில் 106 ரன்கள் எடுத்த போதிலும், 4 உதிரி ரன்களுடன் டெல்லியின் மற்ற பேட்ஸ்மேன்கள 59 பந்தில் 54 54 ரன்களே எடுத்தனர்.
துபாயில் நடைபெற இருக்கும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் சீசனின் முக்கால்வாசி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பவர்பிளே ஓவர்களில் அதிக டாட் பால்கள் ஆடிய அணி எது என்பதை பார்ப்போம்.
பவர்பிளே-யான முதல் 36 பந்துகளில் சுமார் 52.1 சதவிகித பந்துகளை டாட் பாலாக விளையாடி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சென்னை அணி. தொடர்ந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் உள்ளன. இதில் பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்களில் 41.4 சதவிகிதம் மட்டுமே டாட் பால்கள் ஆடியுள்ளன.
ராஜஸ்தான் அணியின் ஆர்சர் அதிகபட்சமாக 117 டாட் பால்களை வீசி அதிக டாட் பால்கள் வீசிய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சிஎஸ்கே சந்தித்த நிலையில், அணியின் தேர்வை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கேதர் ஜாதவ் அணியில் எதற்கு என்ற விமர்சனம் எழும்பியது, ஒரு வழியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டார். ஒரு போட்டியோடு ஜெகதீசனை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். அதன்பின் சாவ்லா நீக்கப்பட்டு மீண்டும் கேஜர் ஜாதவ் நீக்கப்பட்டது.
இந்நிலையில் அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘டோனி என்ன சொன்னாலும் இந்த நடைமுறையை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இந்த நடைமுறை குறித்து அவர் பேசுவது அர்த்தம் இல்லாதது. செயல்முறை, செயல்முறை பற்றி பேசுகிறார்கள். ஆனால், தேர்வு செயல்முறை அதனாகவே தவறாகிவிட்டது.
டோனியின் டீல் என்ன? ஜெகதீசன் தீப்பொறியாக விளையாடவில்லை என்கிறார். ஆனால், கேதர் ஜாதவ் தீப்பொறியாக விளையாடினாரா?. இது கேலிக்கூத்தானது. அவருடைய பதிலை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். செயல்முறை பற்றி பேசும்போது, சென்னையின் தொடர் அதனாகவே முடிந்துவிட்டதுது.’’ என்றார்.
இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் லங்கா பிரிமீயர் லீக்கில் டு பிளிஸ்சிஸ், ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போன்று இலங்கையில் லங்கா பிரமீயர் லீக் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனாவால் அறிமுகம் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 21-ந்தேதி முதல் டிசம்பர் 13-ந்தேதி வரை ஐந்து அணிகள் மோதும் வகையில் தொடர் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணிகளும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.
கிறிஸ் கெய்லை கண்டி டஸ்கடர்ஸ் அணியும், கார்லஸ் பிராத்வைட்டை தம்புல்லா ஹாக்ஸ் அணியும், தென்ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரை தம்புல்லா அணியும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரியை காலே கிளாடியோட்டர்ஸ் அணியும், சோயிப் மாலிக்கை ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் எடுத்துள்ளது.
டு பிளிஸ்சிஸ், அந்த்ரே ரஸல் ஆகியோரை கொழும்பு கிங்ஸ் அணி எடுத்தள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 125 ரன்களை தாண்ட முடியாமல் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
டாஸ் சாதகமாக அமைந்தாலும் சென்னை அணியால் 125 ரன்களே அடிக்க முடிந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் யாரும் மொத்தமாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் சென்னை அணி பேட்டிங்கில் சறுக்கியது.
பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரின் (70) சிறப்பான ஆட்டத்தால் 17.3 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியடைந்துள்ளது.
இன்னும் மீதமுள்ள நான்கு போட்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் பிளே ஆஃப்ஸ் சுற்று மங்கிப்போனது.
ஒருவேளை நான்கிலும் வெற்றி பெற்று அந்த அணி இந்த அணியை வெற்றி பெற்றால் என்ற கணக்கீடு வந்தால் ஒருவேளை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு வாய்ப்புள்ளது.