என் மலர்
விளையாட்டு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் அதிக போட்டிகளில் வெற்றி பெற முடியாத நிலையிலும் அணி அணியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார். 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 21 பவுண்டரிகள் அடித்துள்ளார். மொத்தம 295 ரன்கள் அடித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் 10 போட்டிகளில் 10 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இவர் நான்கு அரைசதம் டித்துள்ளார். மொத்தம் 285 ரன்கள் அடித்துள்ளார்.
கேஎல் ராகுல் 10 போட்டிகளில் 19 சிக்சர்கள் அடித்துள்ளார். ஆனால 46 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஒரு சதம் ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 19 சிக்சர்களுடன் 4-வது இடத்தையு்ம, பொல்லார்டு 17 சிக்சர்களுடன் 5-வது இடத்தையும், ராகுல் டெவாட்டியா 16 சிக்சர்களுடன் 6-வது இடத்தையும், ரோகித் சர்மா (15), மயங்க் அகர்வால் (15), மோர்கன் (15), இஷான் கிஷன் (14) முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுகிறது.
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது.
நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் இருந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபின் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தை குறைக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 27-ந்தேதியில் இருநு்து டிசம்பர் 1-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 4-ந்தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும், 3-வது டெஸ்ட் ஜனவரி 7-ந்தேதி முதல் ஜனவரி 11-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜனவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய நம்பிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னனை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய 99.99 சதவீதம் இழந்து விட்டது. இதனால் வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா? எந்தெந்த அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு தடையாக இருக்கும் என்பதைதான் பார்க்க வேண்டும்.
முதல் ஏழு போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தபோது சிஎஸ்கே கப்பலில் ஓட்டைகள் உள்ளன. ஒன்றை அடைத்தால் மற்றொன்று உருவாகிறது என வேதனையுடன் கூறினார். ஓட்டைகள் உள்ள கப்பல் கரை சேருமா?. அதேபோல் சென்னை அணியால் ஓட்டைகளை அடைத்து கப்பலை கரை சேர்க்க முடியாமல் போய்விட்டது.
பந்து வீச்சு சரியாக இருந்தால் பீல்டிங் சரியில்லை. பேட்டிங் சரியில்லை. பேட்டிங் நன்றாக இருந்தால் பந்து வீச்சு சரியில்லை என்ற நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால் அந்த உத்வேகத்துடன் வேண்டுமென்றால் விளையாடலாம்.
கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐந்து விக்கெட் மட்டுமே இழந்து இந்த ரன்னை எடுத்ததால் பேட்டிங்கை என்ன சொல்வது.
பேட்டிங்கை மெருகேற்றாத வரை மற்றவற்றை பற்றி பேச ஏதுமில்லை. கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப்பின் இளைஞர்களிடம் Spark இல்லை. அதனால் அனுபவ வீரர்களுடன் விளையாடுகிறேன் என டோனி விளக்கம் அளித்தார். இதுவரை Spark ஆகாத மூத்த வீரர்கள் டோனியின் இந்த வார்த்தையால் வீறுகொண்டு எழுவார்களா? எனப் பார்க்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது.
சிஎஸ்கே-யிடம் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் விளையாடி வெற்றியுடன் பாயின்ட் டேபிளில் முதல் இடத்தை பிடிக்க விரும்பும்.
குயின்டன் டி காக் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது அந்த அணிக்கு சிறந்த பலமாக கருதப்படுகிறது. மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை இழுத்துச் செல்ல ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என பேட்டிங் பட்டாளமே உள்ளது. எப்படியும் 160 ரன்களை தாண்டி விடும்.
பந்து வீச்சில் அந்த அணிக்கு பும்ரா, ராகுல் சாஹர் மிகப்பெரிய பலம். பும்ராவுக்கு இணையாக டிரென்ட் போல்ட் பந்து வீசி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
ஒட்டு மொத்தத்தில் சென்னை அணியின் பேட்டிங்கே போட்டியின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும்.
பஞ்சாப் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் பரபரப்பான கட்டத்துக்கு நகரும் போது தனது இதயதுடிப்பு எகிறுவதாக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள டெல்லி கேப்பிட்டல்சுக்கு அதிர்ச்சி அளித்து 4-வது வெற்றியை பெற்றது.
இதில் டெல்லி அணி நிர்ணயித்த 165 ரன் இலக்கை பஞ்சாப் அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. நிகோலஸ் பூரன் அரைசதம் அடித்து (6 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்) வெற்றிக்கு உதவினார். 106 ரன்கள் குவித்த டெல்லி வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘எங்கள் அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது இதய துடிப்பு புதிய உச்சத்துக்கு எகிறுகிறது. இந்த ஆட்டத்தை 19-வது ஓவரிலேயே வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் கிடைத்த வெற்றிக்கு பிறகு அன்றையதினம் இரவில் நீண்ட நேரம் தூங்கவில்லை. இந்த பரபரப்பு, நெருக்கடியான சூழலுக்கு முன்பே அதாவது சூப்பர் ஓவருக்கு முன்னதாகவே எப்படி போட்டியை முடித்து இருக்க வேண்டும் என்பது குறித்து அதிகமாக சிந்தித்தேன்.
இந்த ஆட்டத்தில் 6 பேட்ஸ்மேன் மற்றும் ஒரு ஆல்-ரவுண்டருடன் ஆடியது போட்டியை விரைவாக முடிக்க உதவியதாக நினைக்கிறேன். ஒவ்வொரு அணியும், நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தை நாங்கள் சரிசெய்ய வேண்டும். சீனியர் வீரரான முகமது ஷமி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறோம்’ என்றார்.
தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘இந்த தோல்வி நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்றதாகும். இனிமேல் நாங்கள் கடினமான சூழ்நிலையையும், சவால்மிக்க அணிகளையும் எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த காலத்தில் மிகவும் அருமையாக விளையாடி இருக்கிறோம். அதனை மறந்து விட்டு நாங்கள் முன்நோக்கி செல்ல வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் நாங்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதிக பொறுப்புடனும் செயல்பட வேண்டும். அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற இன்னும் ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஷிகர் தவான் விளையாடி வரும் விதம் உற்சாகம் அளிக்கிறது. பேட்ஸ்மேனாக அவர் எங்களுக்கு நல்ல அடித்தளம் அமைத்து தருகிறார். நாங்கள் எங்களுடைய பங்கை நன்கு அறிந்து செயல்பட வேண்டும். பவர்-பிளேயில் தவானுக்கு, டாப் வரிசை வீரர்கள் யாராவது துணையாக நின்று இருந்தால் அதிக ரன் குவித்து இருக்கலாம். நாங்கள் 10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன்.
தோல்வியை மறந்து எங்களது பலம் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் சில ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். பயிற்சியின் போது இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
புதுடெல்லி:
சந்தீப் மேக்தா, ரவிந்தர் சவுத்ரி ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சந்தீப் மேக்தா சீனியர் இணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகலாம் என்று தெரிகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.
இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்த குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் 31-ந் தேதி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அடில் சுமரிவாலா மீண்டும் போட்டியிடுகிறார். சீனியர் துணைத் தலைவர் பதவிக்கு உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சுமரிவாலா 3-வது முறையாக தலைவராகவும், அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக சீனியர் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். பொருளாளர் பதவிக்கு மதுகந்த் பதாக் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவரும் போட்டியின்றி தேர்வாகிறார்.
சந்தீப் மேக்தா, ரவிந்தர் சவுத்ரி ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சந்தீப் மேக்தா சீனியர் இணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகலாம் என்று தெரிகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.
85 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 84 ரன்களே அடித்தது. மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் 25 ரன்னிலும், பிஞ்ச் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் அடிக்க ஆர்சிபி 13.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் 84 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா அணிக்கு 2-வது ஓவரில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் ராகுல் திரிபாதி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார்.
3-வது வரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து கொல்கத்தா தத்தளித்தது. அதில் இருந்து கொல்கத்தா அணியால் மீண்டு வர முடியவில்லை.
தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோரை தலா 4 ரன்னில் சாஹல் வீழ்த்த, மோர்கனை 30 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த கொல்கத்தா 15.4 ஓவரில் 57 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது.
அடுத்து வந்த குல்தீப் யாதவ் - லூக்கி பெர்குசன் ஜோடி 27 ரன்கள் அடிக்க கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களே அடித்துள்ளது.
முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். கொல்கத்தா அணியில் அந்த்ரே ரஸல் இடம் பெறவில்லை.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விவரம்:-
1. ஷுப்மான் கில், 2. டாம் பாண்டன், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. ராகுல் திரிபாதி, 7. பேட் கம்மின்ஸ், 8. பெர்குசன், 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:-
1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. குர்கீரத் சிங் மான். 6. வாஷிங்டன் சுந்தர், 7. கிறிஸ் மோரிஸ், 8. முகமது சிராஜ், 9. இசுரு உடானா, 10. நவ்தீப் சைனி, 11. சாஹல்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகியும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா 20-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் படுதோல்வியை சந்தித்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அண்மையில் பெற்ற சில வெற்றிகளின் மூலம் மீண்டும் மீண்டெழுந்து புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அந்த அணியின் நிர்வாகியான பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்து, தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் 20-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதனால் கொரோனா டெஸ்ட் குயின் என பிரீத்தி ஜிந்தாவிற்கு புது பட்டப்பெயரை நெட்டிசன்கள் சூட்டியுள்ளனர்.
அத்துடன் துபாயில் தனது கொரோனா தனிமைப்படுத்தல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள பிரீத்தி ஜிந்தா, ‘‘பலரும் என்னிடம் ஐபிஎல் அணிகளுக்கு எப்படி கொரோனா பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனக் கேட்டிருந்தனர். அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் கேட்டிருந்தனர்.
நான் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தேன். ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது. எங்கள் அணிக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த உணவும் வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் யாருடனும் பழகக்கூடாது.

என்னைப்போன்று சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவோருக்கு இது கடினமானதாகும். இருந்தாலும் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் கடைசி நான்கு போட்டிகளில் சிறப்பாக விளையாட அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பஞ்சாப் அணி வெற்றிபெற திணறினாலும் அந்த அணியின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் ரன் குவிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
கேஎல் ராகுல் 10 போட்டிகளில் 1 சதம், ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மயங்க் அகர்வால் 9-வது போட்டி வரை 1 சதம், 2 அரைசதங்களுடன் 393 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்தார். நேற்று ஐந்து ரன்கள் மட்டுமே அடித்தார்.
ஆனால் டெல்லி அணி தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதன்பின் கடைசி நான்கு போட்டிகளில் இரண்டு அரைசதம், இரண்டு சதங்கள் (69, 57, 101, 106) என சிறப்பாக விளையாடி 465 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிஸ்சிஸ் 375 ரன்களுடன் 4-வது இடத்திலும், விராட் கோலி 347 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது பாதி தொடரில் பாயின்ட் டேபிளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகளை வென்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் அந்த அணிக்கு முதல் பாதி தொடர் சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதனால் பஞ்சாப் அணி அவ்வளவுதான் என கருதப்பட்டது. இந்நிலையில்தான் 2-வது பாதி தொடரில் கிறிஸ் கெய்ல் உடன் களம் இறங்கியது. அதன்பின் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
8-வது போட்டியில் ஆர்சிபி-யையும், 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்ட நிலையிலும், நேற்று டெல்லி அணியையும் வீழ்த்தியுள்ளது. இந்த மூன்று அணிகளும் பாயின்ட் டேபிளில் டாப் 3 வரிசையில் உள்ளது.
ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளளது. இன்னும் 4 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. சிஎஸ்கே-யின் வெற்றிக்கு இவரது பங்களிப்பும் முக்கியமானது.
ஐபிஎல் 2020 சீசன் தொடங்கும்போது காயத்தால் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின் அணியில் இடம்பிடித்து விளையாடினார். தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வந்த நேரத்தில் டெல்லி அணிக்கெதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பிராவோ விலகியுள்ளார். மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் நான்கு போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.






