என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிக்கோலஸ் பூரன்
    X
    நிக்கோலஸ் பூரன்

    சிக்சரில் அசத்தி வரும் நிக்கோலஸ் பூரன்: 22 எண்ணிக்கையுடன் முதல் இடம்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் அதிக போட்டிகளில் வெற்றி பெற முடியாத நிலையிலும் அணி அணியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார். 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 21 பவுண்டரிகள் அடித்துள்ளார். மொத்தம 295 ரன்கள் அடித்துள்ளார்.

    ஏபி டி வில்லியர்ஸ் 10 போட்டிகளில் 10 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இவர் நான்கு அரைசதம் டித்துள்ளார். மொத்தம் 285 ரன்கள் அடித்துள்ளார்.

    கேஎல் ராகுல் 10 போட்டிகளில் 19 சிக்சர்கள் அடித்துள்ளார். ஆனால 46 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஒரு சதம் ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    சஞ்சு சாம்சன் 19 சிக்சர்களுடன் 4-வது இடத்தையு்ம, பொல்லார்டு 17 சிக்சர்களுடன் 5-வது இடத்தையும், ராகுல் டெவாட்டியா 16 சிக்சர்களுடன் 6-வது இடத்தையும், ரோகித் சர்மா (15), மயங்க் அகர்வால் (15), மோர்கன் (15),  இஷான் கிஷன் (14) முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
    Next Story
    ×