என் மலர்
விளையாட்டு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்கு புள்ளிகளை பிரித்து அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது.
துபாய்:
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 தொடர்களில் விளையாட வேண்டும். இந்திய அணி 4 தொடரில் ஆடி 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் (296 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (292 புள்ளி) உள்ளன. கொரோனா அச்சத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6 டெஸ்ட் தொடர் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 9 தொடர் நடக்க வேண்டி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை திட்டமிட்டபடி நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது. மார்ச் மாதத்துக்குள் அனைத்து தொடர்களும் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
தற்போது தள்ளிவைக்கப்பட்ட தொடர்களை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்கு புள்ளிகளை பிரித்து அளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து வருகிறது. ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் உண்டு. இவற்றை எந்த வகையில் கணக்கிட்டு பிரித்து கொடுப்பது என்பது குறித்து அடுத்த மாதம் நடக்கும் ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர்:
இந்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்தில் இந்த மாதத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் பல்வேறு இடங்களில் நுழைய நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவும் சூழல் காரணமாக போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இல்லாததால் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது.
அடுத்த ஆண்டுக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியை நடத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதுடன், 2023-ம் ஆண்டு வரை உலக ஜூனியர் போட்டியை நடத்தும் உரிமம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. எனவே இந்த ஆண்டுக்கான போட்டியை மேலும் தள்ளிப்போட முடியாது என்றும், உலக ஜூனியர் போட்டியை நடத்த நியூசிலாந்து தொடர்ந்து ஆர்வம் காட்டியதால் 2024-ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் உரிமையை அந்த நாட்டுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக சிட்னி நகரை உள்ளடக்கிய நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போல் ஆஸ்திரேலிய வீரர்களும் சிட்னியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.
உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27, 29-ந்தேதிகளில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1-ந்தேதி 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது. இவ்விரு நகரங்களிலேயே டிச.4, 6, 8-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக டிச.17 முதல் 21-ந்தேதி வரை அடிலெய்டில் நடக்கிறது. தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய நகரங்களிலும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.
இந்நிலையில், ராஜஸ்தானில் சிலர் ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஜெய்ப்பூரில் நகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம், 19 மொபைல் போன்கள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்.
துபாய்:
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ராபின் உத்தப்பா 19 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் 30 ரன், பட்லர் 9 ரன், ஸ்மித் 19 ரன், ரியான் பராக் 12 பந்தில் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்துள்ளது. ஆர்ச்சர் 16 ரன்னும், திவாட்டியா 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்ட ஹோல்டர் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
வார்னர் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 10 ரன்னில் வெளியேறினார். இருவரையும் ஆர்ச்சர் அவுட்டாக்கினார். 16 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்து ஐதராபாத் திணறியது.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவு, விஜயசங்கரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
மணீஷ் பாண்டேகிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். அவருக்கு விஜயசங்கர் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார். இருவரும் அரை சதமடித்து அசத்தியதுடன், 140 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 8 சிக்சர், 4 பவுண்டரியுடன் 83 ரன்னும், விஜயசங்கர் 6 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்டநாயகன் விருதை மணீஷ் பாண்டே பெற்றார்.
இது ஐதராபாத் அணி பெற்ற 4வது வெற்றி ஆகும். இதன்மூலம் ஐதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் கொடுத்த சிறந்த தொடக்கத்தை சரியாக பயன்படுத்தாததால் ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது.
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார்.
சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
பென் ஸ்டோக்ஸ் (32 பந்தில் 30 ரன்), பட்லர் (12 பந்தில் 9 ரன்), ஸ்மித் (15 பந்தில் 19 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ரியான் பராக் 12 பந்தில் 20 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்துள்ளது.
இன்று ஐதராபாத் அணியில் சேர்க்கப்பட்ட ஹோல்டர் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
நியூசிலாந்து சென்று விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். டெல்லி அணிக்கு எதிராக விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
விக்கெட் வீழ்த்தியதும் மைதானத்திற்குள் நீண்ட தூரம் ஒடுவது ஏன் என்பதை இம்ரான் தாஹிர் விவரித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தியதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்தின் பவுண்டரி லைனை நோக்கி இரண்டு கைகளையும் விரித்த படி ஓட்டம் எடுப்பார்.
அது தாஹிரின் டிரேட் மார்க் கொண்டாட்டமும் கூட. உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை தாஹிர் இதனை பின்பற்றுவது வழக்கம். அது சமூக வலைத்தளங்களிலும் சமயங்களில் வைரலாவது உண்டு.
இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அஷ்வின் யூடியூப் ஷோவில் ஏன் விக்கெட் எடுத்ததும் பல மைல் தூரம் ஓட்டம் எடுக்கிறீர்கள்? அதற்கான காரணம் என்ன? என தாஹிரிடம் கேட்டார்.
‘‘அதை பேஷன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடிய போது விக்கெட் வீழ்த்தியதும் அந்த சந்தோஷத்தில் ஓடினேன்... ஓடினேன்... மைதானத்திற்கு வெளியே இருந்த சாலை வரை ஓடி நின்றேன்.
பின்னர் மீண்டும் பொடி நடையாக மைதானத்திற்குள் வந்தேன். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் என்னை பார்த்து சிரித்தனர். மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், எனக்கு அப்படி தெரியவில்லை என தாஹிர் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-
1. பென் ஸ்டோக்ஸ், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பட்லர், 6. ரியான் பிராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. அங்கித் ராஜ்பூட், 11. கார்த்திக் தியாகி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. பிரியம் கார்க், 4. மணிஷ் பாண்டே. 5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 9. ஷபாஸ் நதீம், 10. சந்தீப் ஷர்மா, 11. டி. நடராஜன்.
கொல்கத்தா அணிக்கு எதிராக இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஆர்சிபி பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனைப் படைத்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசிய சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதில், இரண்டு மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதன்மூலம் ஒரே ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர் வீசிய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் சிராஜ்.
கொல்கத்தா பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா மற்றும் டாம் பாண்டனை அவுட் செய்தார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் என ரபடா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெறறி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 335 ரன்கள் விளாசியுள்ளார். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா 20 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றி அசத்தி வருகிறார்.
ஷ்ரேயாஸ் அய்யரின் கேப்டன் பதவி குறித்து ரபடா கூறுகையில் ‘‘ஷ்ரேயாஸ் அய்யர் உண்மையிலேயே நம்பமுடியாத வகையில் கேப்டன் பதவியில் செயல்பட்டு வருகிறார். அவர் இளம் வீரர். மிகப்பெரிய நிலையில் வெளிநாட்டு வீரர்களை அவர் வழிநடத்தி செல்வதை பார்க்கும்போது, அந்த பொறுப்பு மிகப்பெரியது. தற்போது வரை அவர் சிறப்பாக கையாண்டு வருகிறா். முன் நின்று அணியை வழிநடத்திச் செல்கிறார்.
அவர் ஒரு சாதாரணமாக நபர். களத்திற்குள் இறங்கிய பின்னர், அவர் எடுக்கும் முடிவுகளுக்கு, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உதவியாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்’’ என்றார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் அதிக போட்டிகளில் வெற்றி பெற முடியாத நிலையிலும் அணி அணியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன் 10 போட்டிகளில் 22 சிக்சர்கள் அடித்து முதல் இடம் பிடித்துள்ளார். 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். 21 பவுண்டரிகள் அடித்துள்ளார். மொத்தம 295 ரன்கள் அடித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் 10 போட்டிகளில் 10 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். இவர் நான்கு அரைசதம் டித்துள்ளார். மொத்தம் 285 ரன்கள் அடித்துள்ளார்.
கேஎல் ராகுல் 10 போட்டிகளில் 19 சிக்சர்கள் அடித்துள்ளார். ஆனால 46 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஒரு சதம் ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்கள் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் 19 சிக்சர்களுடன் 4-வது இடத்தையு்ம, பொல்லார்டு 17 சிக்சர்களுடன் 5-வது இடத்தையும், ராகுல் டெவாட்டியா 16 சிக்சர்களுடன் 6-வது இடத்தையும், ரோகித் சர்மா (15), மயங்க் அகர்வால் (15), மோர்கன் (15), இஷான் கிஷன் (14) முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.