என் மலர்
விளையாட்டு
நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-
தொடக்க வீரராக களம் இறங்கிய விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. நம்ப முடியாத வகையில் அவர் அபாரமாக ஆடினார். மிடில் ஆர்டர் வரிசையில் வில்லியம்சன் ஆடுவதற்கு தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டார். இது மிகவும் கஷ்டமான முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விருத்திமான் சாஹா இந்த ஆட்டத்தில் 45 பந்தில் 87 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார்.
ஷார்ஜா:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை வசப்படுத்தியது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 150 ரன் இலக்கை பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கிறிஸ் கெய்ல் (51 ரன்கள், 29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கடந்த வாரம் தனது தந்தை மறைந்தாலும் நாடு திரும்பாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு தொடர்ந்து விளையாடி வரும் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்) நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
வெற்றிக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘குடும்பத்தினரை விட்டு வெளியூரில் இருக்கும் போது நமக்கு நெருக்கமானவர்களை இழக்க நேரிடுவதுடன், அந்த துயரத்திலும் கலந்து கொள்ள முடியாமல் போவது மிகவும் வேதனைக்கு உரியதாகும். அந்த மாதிரியான இக்கட்டான நிலையிலும் மந்தீப் சிங் விளையாடி வருகிறார். அவர் காட்டிய மனஉறுதி அணியில் உள்ள மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் இந்த ஆட்டத்தில் ஆடிய விதம் எல்லோரையும் உணர்ச்சி மயமாக்கியது. கடினமான தருணத்திலும் பொறுப்பை ஏற்று விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து அவருக்கும், அவருடைய தந்தைக்கும் பெருமை சேர்த்து இருக்கிறார்.
முதல் கட்ட ஆட்டங்களில் கெய்லை ஆட வைக்காதது கடினமான முடிவு தான். ஏனெனில் அவர் நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். ரன் குவிப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர். நேர்மறையான எண்ணம் கொண்ட அனுபவசாலியான அவரை போன்றவர்கள் அணியில் இருப்பது சிறப்பானதாகும் என தெரிவித்தார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சூரிச்:
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறார். அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த 50 வயதான அவர் வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடித்து வருகிறார். அவரை கடந்த சில நாட்களில் சந்தித்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு ‘பிபா’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
துபாய்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‘2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனியே வழிநடத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை அணிக்காக அவர் 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார்.
முதல்முறையாக இந்த சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் செய்த சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. ஒரு மோசமான ஆண்டுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இந்த ஆண்டில் நாங்கள் எங்களது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில ஆட்டங்களில் தோற்று விட்டோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரின் விலகல் அணியின் சரிசம கலவையை பாதித்துவிட்டது’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‘2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனியே வழிநடத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை அணிக்காக அவர் 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார்.
முதல்முறையாக இந்த சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் செய்த சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. ஒரு மோசமான ஆண்டுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இந்த ஆண்டில் நாங்கள் எங்களது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில ஆட்டங்களில் தோற்று விட்டோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரின் விலகல் அணியின் சரிசம கலவையை பாதித்துவிட்டது’ என்றார்.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் - விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு தெரியாமல் போனது. 8.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன்னைத் தொட்டது.
வார்னர் 34 பந்தில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார்.
வார்னர் ஆட்டமிழந்த பின் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார்.
சாஹா 45 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரகானேவும் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசி டெல்லி அணியை கட்டுப்படுத்தினர். தவான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ரகானே 26 ரன்னும், ஹெட்மயர் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். அந்த அணியின் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 36 ரன் எடுத்தார்.
இறுதியில், டெல்லி அணி 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி சார்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப் சர்மா, நடராஜனாகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
வார்னர், விருத்திமான் சாஹா வாணவேடிக்கை நிகழ்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை பதிவு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் - விருத்திமான் சாஹா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஐந்து ஓவரில் 55 ரன்கள் குவித்தது. ரபடா வீசிய 6-வது ஓவரில் வார்னர் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன்கள் விளாசினார். இதனால் பவர் பிளேயில் டெல்லி 77 ரன்கள் குவித்தது. வார்னர் 25 பந்தில் அரைசதம் அடித்தார்.
இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு தெரியாமல் போனது. 8.4 ஓவரில் ஐதராபாத் 100 ரன்னைத் தொட்டது.
10-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் வார்னர் 34 பந்தில் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டு களம் இறங்கினார்.
வார்னர் ஆட்டமிழந்த பின்னர் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 27 பந்தில் அரைசதம் அடித்தார். 12.5 ஓவரில் ஐதராபாத் 150 ரன்னைக் கடந்தார். 15-வது ஓவரை நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் 45 பந்தில் 87 ரன்கள் எடுத்த நிலையில் சாஹா ஆட்டமிழந்தார்.
17.3 ஓவரில் ஐதராபத் 200 ரன்னைத் தொட மணிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 44 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. சிறந்த பவுலரான ரபடா 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:
1. டேவிட் வார்னர், 2. கேன் வில்லியம்சன், 3. மணிஷ் பாண்டே, 4. விஜய் சங்கர், 5. சகா, 6. ஜேசன் ஹோல்டர், 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. நதீம், 10. சந்தீப் சர்மா, 11. நடராஜன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. ரகானே, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் படேல், 8. அஸ்வின், 9. ரபடா, 10. அன்ரிச் நோர்ட்ஜே, 11. துஷார் தேஷ்பாண்டே.
கோரன்டைன் குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசிய நிலையில், பரம எதிரியாக நினைக்கும் சாமுவேல்ஸ் ஸ்டோக்ஸின் மனைவியை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உடல் நலம் குன்றியிருந்தார். இதனால் இங்கிலாந்தில் இருந்து அவசரமாக நியூசிலாந்து சென்றார் பென் ஸ்டோக்ஸ்.
கொரோனா காலம் என்பதால் நியூசிலாந்து அரசின் நடைமுறைப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பின் குடும்பத்துடன் இணைந்தார்.
அப்போது பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை வெளியிட்டியிருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த சிலர் இது எதுபோன்று என கேட்டு அனுப்பினர். அதற்கு பென் ஸ்டோக்ஸ் ‘‘இது நீங்கள் எப்போதும் செய்ய வேண்டிய மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அல்ல என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன், எனது மோசமான எதிரி கூட இந்த அனுபவத்தை அடைய நான் விரும்பமாட்டேன் எனக் கூறினேன்’’ எனத் தெரிவித்திருந்தார்.
அப்போது எனத சகோதரர் ‘‘மார்லன் சாமுவேல்ஸிடம் கூட செய்ய மாட்டீர்களா?’’ எனக் கேட்டார். அதற்கு பென் ஸ்டோக்ஸ் ‘‘இல்லை, இது மிகவும் மோசம், அது மிகவும் கடினமானது’’ எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸும் அடிக்கடி மைதானத்தில் மோதிக்கொள்வது வழக்கம். 2015-ல் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறும்போது, மைதானத்தில் இருந்த சாமுவேல்ஸ் ஸ்டைலாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார்.
அப்போது ஆரம்பித்தது பிரச்னை. இருவரும் முறைத்துக் கொண்டார்கள். திட்டிக்கொண்டார்கள். பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டியின்போது கொல்கத்தா மைதானத்தில் தொடர்ந்தது இவர்களின் பிரச்சினை. இவர்கள் மோதலை ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீது ஏற்கனவே கோபத்தை காட்டும் சாமுவேல்ஸ் இந்த முறை அவரது மனைவியை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.
சாமுவேல்ஸ் தனது பதிலில் ‘‘எந்த ஒரு வெள்ளை பையனும் என்னை விளையாட்டில் வெளியேற்றி விட முடியாது, என்னைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டாம். எவரும் என்னை திரும்பி பார்க்க நினைக்காத நிலையில், இந்த b*tch என்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது. உன்னுடைய மனைவியை என்னுடன் 14 நாட்கள் அனுப்பி வைத்தால், 14 நொடிக்குள் ஜமைக்காவிற்கு திரும்பிவிடுவாள். என்னைப் பற்றி உங்கள் யாருக்கும் தெரியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வார்னே மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களையும் திட்டியுள்ளார். இதற்கு வாகன் கடுமையான வகையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை இறந்த துக்கம் மறைவதற்குள் கொல்கத்தா அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார் மந்தீப் சிங்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மந்தீப் சிங் விளையாடி வருகிறார். இவரது தந்தை நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 24-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடுவதற்கு முந்தைய நாள் காலமானார்.
தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்த கொள்ளாமல் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிராக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அவரது தைரியத்தை அனைவரும் பாராட்டினர். இந்திய அணி கேப்டனும், ஆர்சிபி கேப்டனுமான விராட் கோலி, சிங்கம் இதயம் கொண்டவர் மந்தீச் சிங் என பாராட்டு தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்த பின் மந்தீச் சிங் ‘‘என்னுடைய அப்பா என்னிடம், ஒவ்வொரு போட்டியிலும் நாட்-அவுட்டாக இருக்க வேண்டும் என்று கூறினார். அது தற்போது நடந்துள்ளது. இந்த போட்டிக்கு முன் கேப்டன் ராகுலிடம் பேசினேன். அவர் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினார். சில பந்துகள் எடுத்துக் கொண்டாலும், அணிக்காக வெற்றியை தேடிக்கொண்டு முடிந்தது. நான் போட்டியை சிறப்பான வகையில் முடித்ததால், என்னுடைய தந்தை சந்தோசம் அடைந்திருப்பார்’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 41 வயதான கிறிஸ் கெய்ல், ஓய்வு குறித்து பஞ்சாப் இளம் வீரர்கள் சொன்னது என்ன? என்பதை தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் கெய்ல். தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தார். தற்போது 41 வயதானாலும் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 25 பந்தில் அரைசதம் அடித்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
41 வயதாகும் கிறிஸ் கெய்லை சுற்றி ஓய்வு எப்போது? என்ற கேள்வி சுற்றிக்கொண்டே வருகிறது. நேற்றைய போட்டிக்குப்பின் கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘போட்டியின்போது பயிற்சியாளர் சீனியர் வீரர்களிடம் முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்றனர். நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கான மகிழ்ச்சி அடைகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னிடம் ஓய்வு வேண்டாம் என்று சொல்கிறார்கள்’’ என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வரும் சக்ரவர்த்தி இந்திய டி20 அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டி20 அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண்காந்தி இடம் பிடித்துள்ளார். கொல்கத்தா அணியில் தனது மாயாஜால பந்து வீச்சால் அசத்தி வரும் நிலையில் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வருண் சக்ரவர்த்தில் கூறுகையில் ‘‘பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்ததை தெரிந்து கொண்டேன். நான் திரும்ப திரும்ப பயன்படுத்தும் வார்த்தை, கனவு போன்று உள்ளது என்பதுதான்.
என்னுடைய அடிப்படை இலக்கே அணியில் தொடர்ந்த இடம் பிடித்து, சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருந்தது இல்லை. என்மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இதைப்பற்றி சொல்வதற்கு வார்த்த இல்லை’’ என்றார்.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் என கவாஸ்கர தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 3 வடிவிலான போட்டிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணியின் துணை கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவருமான ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் ஆடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் அவர் காயம் அடைந்ததால் ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறவில்லை.
33 வயதான ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான அவர் காயம் காரணமாக ஆடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்தது. இதனால் கடந்த 2 போட்டியில் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ரோகித் சர்மாவுக்கு காயம் என்று கூறியுள்ள மும்பை அணி நிர்வாகம் எந்த வகையான காயம் என்று தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலை பயிற்சியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அது என்ன காயம் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த போட்டிக்கு முன்பு அவர் மீண்டும் வலைப்பயிற்சி செய்தார்.
அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் பயிற்சி செய்திருக்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படை தன்மை தேவை. ரோகித் சர்மாவுக்கு என்ன காயம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மும்பை அணி நிர்வாகம் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம். ஆனால் தெரிவிப்பது அவர்களது கடமையாகும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.






