என் மலர்
விளையாட்டு
துபாயில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
துபாய்:
13-வது ஐ.பி.எல்.20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் 47வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ‘பிளேஆப்’ சுற்றுக்கு இதுவரை எந்த அணியும் தகுதி பெறவில்லை. முதல் அணியாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளது.
டெல்லி அணி ஏற்கனவே 15 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசி 2 ஆட்டத்தில் (பஞ்சாப், கொல்கத்தா) தோற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.
டெல்லி அணியில் தவான் (471 ரன்), கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் (382 ரன்), ரபடா (23 விக்கெட்), நோர்கியா (14 விக்கெட்) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஐதராபாத் அணி 4 வெற்றி 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழுவீச்சில் போராடுவார்கள்.
ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர் (370 ரன்), பேர்ஸ்டோவ் (345 ரன்), மனீஷ்பாண்டே (310 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மென்களும், ரஷீத்கான் (14 விக்கெட்), நடராஜன் (11 விக்கெட்), கலீல் அகமது (8 விக்கெட்) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 10-ல், டெல்லி 6-ல் வெற்றி பெற்றுள்ளன.

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சியால் கிடைத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
சார்ஜா:
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்றது.
சார்ஜாவில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுக்க முடிந்தது.
சுப்மன்கில் அதிகபட்சமாக 45 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் மார்கன் 25 பந்தில் 40 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது ஷமியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 விக்கெட்டும், ரவிபிஷ்னோய், ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் மன்தீப் சிங் 56 பந்தில் 66 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ் கெய்ல் 29 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். வருண் சக்ரவர்த்தி, பெர்குசன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பெற்று முத்திரை பதித்தது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணிக்கு கிடைத்த 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பஞ்சாப் அணி 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது.
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
நான் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறேன். கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. வீரர்கள் மட்டுமின்றி அணியில் உள்ள பயிற்சியாளர் கும்ப்ளே, ஜான்டிரோட்ஸ், வாசிம்ஜாபர் உள்ளிட்ட எல்லோரது பங்களிப்பும் இதில் இருக்கிறது. அவர்கள் பின்னால் இருந்து செய்யும் பணிகள் சிறப்பானது.
அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற கடுமையாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6-வது தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தங்கியது.
தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் கூறும்போது, ‘தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிட்டது. நல்ல பார்ட்னர்ஷிப் அமையாதது ஏமாற்றமே. இன்னும் கூடுதலாக 35 முதல் 40 ரன் எடுத்திருக்க வேண்டும். விக்கெட் சரிந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம்’ என்றார்.
பஞ்சாப் அணி 13-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 30-ந்தேதி அபுதாபியில் எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 29-ந்தேதி சந்திக்கிறது.

பார்முலா1 கார் பந்தய போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் ஷூமாக்கரின் சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
போர்டிமாவ்:
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு காரில் சீறிப் பாய்ந்தனர். 306.826 கிலோ மீட்டர் தூர இலக்கை 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 29 நிமிடம் 56.828 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.
இந்த சீசனில் அவர் பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். பார்முலா 1 கார் பந்தய வரலாற்றில் ஹாமில்டன் ருசித்த 92-வது வெற்றி இது. இதன் மூலம் இந்த போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் (91 வெற்றி) சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார். நடப்பு தொடரில் ஹாமில்டன் 256 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 179 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

கேஎல் ராகுல் ஏமாற்ற கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடியாக விளையாட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷுப்மான் கில் (57), மோர்கன் (40) ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் நிதிஷ் ராணா (0), ராகுல் திரிபாதி (7), தினேஷ் கார்த்திக் (0), சுனில் நரைன் (6) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது.
அதன்பின் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவராலும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
கேஎல் ராகுல் 25 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 8 ஓவரில் 47 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 2-வது விக்கெட் இழப்பிற்கு மந்தீப் சிங் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பஞ்சாப் அணி 13.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. மந்தீப் சிங் 49 பந்தில் அரைசதம் அடிக்க, கிறிஸ் கெய்ல் 25 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
பஞ்சாப் அணி 147 ரன்கள் எடுத்திருக்கும்போது கிறிஸ் கெய்ல் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தீப் சிங் 56 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெபளிப்படுத்தியதன் மூலம் மயங்க் அகர்வால் ஒயிட்பால் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை செய்வதால் ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியபோது ஒயிட்பால் கிரிக்கெட்டில் இடம்பிடித்தார். சிறப்பாக விளையாட இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், சிறப்பாகவும் பேட்டிங் செய்கிறார். இதனால் அவரை ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ.
அதேபோல் டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
அதேபோல் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடிய மயங்க் அகர்வால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியது அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ரிஷப் பண்ட் மோசமான விளையாடியதால் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க பஞ்சாப் அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். 2-வது பந்திலேயே நிதிஷ் ராணா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமலும் முகமது ஷமி பந்தில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் கொல்கத்தா 10 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது.
இருவரும் விளையாடியதை பார்க்கும்போது கொல்கத்தா 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் போல் இருந்தது. அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்கள் இருக்கும் இருக்கும்போது மோர்கன் 25 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்ட கொல்கத்தாவின் ரன் அப்படியே படுத்து விட்டது.
சுனில் நரைன் 6, நாகர்கோட்டி 6, கம்மின்ஸ் 1, வருண் சக்ரவர்த்தி 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் ஷுப்மான் கில் அரைசதம் அடித்து 45 பந்தில் 57 ரன்களில் ஆட்டமிழக்க, லூக்கி பெர்குசன் 13 பந்தில் 24 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடர் டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), 5. மணிஷ் பாண்டே, 6. சஞ்சு சாம்சன், 7. ஜடேஜா, 8. வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ், 12. நவ்தீப் சைனி, 13. தீபக் சாஹர், 14. வருண் சக்ரவர்த்தி, 15. ஹர்திக் பாண்ட்யா, 16. ஷ்ரேயாஸ் அய்யர்,
ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா, 13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.
டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.
கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி நடராஜன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த அணியோடு பயணம் மேற்கொள்வார்கள்.
அதிக எடையுடன் உள்ளார் என்று பிட்னெஸ் டிரைனர் தெரிவித்துள்ளதால் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் மற்றும விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கேஎல் ராகுலும், டெஸ்ட் போட்டியில் விருத்திமான் சகாவும் இவருக்கு போட்டியாக உள்ளனர்.
ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. தற்போதில் இருந்தே அதற்கு தயாராகி வருகிறது. முதற்கட்டமாக வீரர்கள் உடற்தகுதியுடன் உள்ளார்களா? என பிட்னெஸ் டிரைனர் பரிசோதித்து வருகிறார்.
அந்த வகையில் ரிஷப் பண்ட்-ஐ பார்த்த டிரைனர் மிரண்டு போனார். ஏன்னெறால் ரிஷப் பண்ட் அதிக எடையுடன் காணப்பட்டுள்ளார். இதனால் ஆஸ்திரேலியா தொடரின்போது தேர்வு ஆவது சந்தேகம் எனத் தெரிகிறது.
டிரைனர் தேர்வுக்குழுவிடம் ரிஷப் பண்ட் எடைகுறித்து தகவல் தெரிவிப்பார். ஒருவேளை எடையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் சிக்கல்தான்.
ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்தாலும் கூடு கேஎல் ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கும் சகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவும்.
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மவை ‘வடா பாவ்’ என அழைத்த சேவாக்கிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால் உடல் எடை போட்டது. ஐபிஎல் தொடரின் ஆரம்பித்த பின்னர்தான் ஒவ்வொரு வீரர்களும் குண்டு குண்டாக இருந்தது தெரியவந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் பெரிய அளவில் குண்டாக தெரிந்தனர்.
ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் சவுரப் திவாரி தற்போது அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேவாக் ‘சமோசா பாவ்’ என கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னை அணிக்கெதிதராக ரோகித் சர்மா இடம் பெறாத நிலையில் அவரது பிட்னெஸ் குறித்து பேசிய சேவாக், ‘வடா பாவ்’ என ரோகித் சர்மாவை அழைத்தார். ‘வடா பாவ்’ என்பது பன்னில் உருளைக்கிழங்கு மசாலா போன்டாவை சேர்த்து விற்கப்படும் மும்பையின் சிறந்த சாலையோர உணவாகும்.
ரோகித் சர்மாவை வடா பாவ் என சேவாக் அழைத்ததால், ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவின் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணி விவரம்:-
1. ஷுப்மான் கில், 2. நிதிஷ் ராணா, 3. ராகுல் திரிபாதி, 4. தினேஷ் கார்த்திக், 5. மோர்கன், 6. சுனில் நரைன் 7. பேட் கம்மின்ஸ், 8 பெர்குசன், 9. நாகர்கோட்டி, 10. பிரதிஷ் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.
பஞ்சாப் அணி விவரம்:-
1. கேஎல் ராகுல், 2. மந்தீப் சிங், 3. கிறிஸ் கெய்ல், 4. நிக்கோலஸ் பூரன், 5. மேக்ஸ்வெல், 6. தீபக் ஹூடா, 7. கிறிஸ் ஜோர்டான், 8. முருகன் அஸ்வின், 9. ரவி பிஷ்னோய், 10. முகமது ஷமி, 11. அர்ஷ்தீப் சிங்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியின்போது திடீரென அம்பதி ராயுடு காணாமல் போனதால் போட்டியை நிறுத்தக்கூடிய சம்பவம் நடைபெற்றது.
துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.
பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழந்ததும் ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
சென்னை பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 13 ஓவர் முடிந்த நிலையில் டைம்-அவுட் கொடுக்கப்பட்டது. 2.30 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆர்சிபி பீல்டிங் செய்யத் தயாரானது. ஆனால் கெய்க்வாட் களத்தில் இருக்கும் நிலையில், அம்பதி ராயுடுவை காணவில்லை.
வர்ணனையாளர்கள் அம்பதி ராயுடு எங்கே சென்றிருப்பார் அங்கும் இங்கும் பார்த்த நிலையில் 2 நிமிடம் கழித்து பேட்டிங் செய்ய வந்தார். அப்போது டி வில்லியர்ஸிடம் நடந்த விவரத்தை கூறினார். ஒருவேளை டாய்லெட்டிற்கு சென்றதால் காலதாமதம் ஆகியிருக்கும் என்று பேசிக் கொண்டனர்.
2 நிமிடம் காக்க வைத்த அம்பதி ராயுடு மீண்டும் ஆட்டம் தொடங்கிய 3-வது பந்திலேயே வெளியேறினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்வது அற்புதம் என ரபடா தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது தலைமையில் இளம் வீரர்களை அதிகமாக கொண்ட டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபடா அசத்தி வருகிறார். 11 போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் கேப்பை தன்வசம் படைத்துள்ளார்.
இந்நிலையில் நான் பார்த்து வளர்ந்த ஒரு வீரரிடம் இருந்து கற்றுக்கொள்வது அற்புதமான விசயம் என்று ரபடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘என்னை பொறுத்தவரைக்கும் ரிக்கி பாண்டிங் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவது, நான் யாரை பார்த்து வளர விரும்பினேனோ, அந்த வீரருடன் பணிபுரிவது அற்புதமனது.
தற்போது அவர் இங்கே இருப்பது, அடிப்படையில் அவரது மூளையை எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்து எனக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். இது என்னுடைய நுண்ணறிவுக்கு அவர் எப்படி சிறந்த வீரராக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள கொடுத்த வாய்ப்பு.
நான் ஏற்கனவே ராகுல் டிராவிட் உடன் பணிபுரிந்துள்ளேன். அவரும் சிறந்தவர். இரண்டு ஜாம்பவான்களிடம் பணிபுரிந்தது அற்புதமானது. ரியான் ஹாரிஸ் சிறந்த பந்து வீச்சாளர். அவர் தற்போது எங்களுடன் இருப்பதால் நான் விரும்பும் எதையும் அவரிடம் என்னால் கேட்க முடியும்’’ என்றார்.