search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபாடா, ரிக்கி பாண்டிங்
    X
    ரபாடா, ரிக்கி பாண்டிங்

    ரிக்கி பாண்டிங் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நுண்ணறிவால் அறிந்து கொண்டேன்: ரபடா

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்வது அற்புதம் என ரபடா தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது தலைமையில் இளம் வீரர்களை அதிகமாக கொண்ட டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரபடா அசத்தி வருகிறார். 11 போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் கேப்பை தன்வசம் படைத்துள்ளார்.

    இந்நிலையில் நான் பார்த்து வளர்ந்த ஒரு வீரரிடம் இருந்து கற்றுக்கொள்வது அற்புதமான விசயம் என்று ரபடா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரபடா கூறுகையில் ‘‘என்னை பொறுத்தவரைக்கும் ரிக்கி பாண்டிங் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவது, நான் யாரை பார்த்து வளர விரும்பினேனோ, அந்த வீரருடன் பணிபுரிவது அற்புதமனது.

    தற்போது அவர் இங்கே இருப்பது, அடிப்படையில் அவரது மூளையை எப்படி பயன்படுத்தினார் என்பது குறித்து எனக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். இது என்னுடைய நுண்ணறிவுக்கு அவர் எப்படி சிறந்த வீரராக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள கொடுத்த வாய்ப்பு.

    நான் ஏற்கனவே ராகுல் டிராவிட் உடன் பணிபுரிந்துள்ளேன். அவரும் சிறந்தவர். இரண்டு ஜாம்பவான்களிடம் பணிபுரிந்தது அற்புதமானது. ரியான் ஹாரிஸ் சிறந்த பந்து வீச்சாளர். அவர் தற்போது எங்களுடன் இருப்பதால் நான் விரும்பும் எதையும் அவரிடம் என்னால் கேட்க முடியும்’’ என்றார்.
    Next Story
    ×