என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் துபாய் சென்று இந்திய அணியுடன் இணைகிறார்கள்.
    கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வீரர்கள் செக்யூர் பாதுகாப்புடன் விளையாடி வருகிறார்கள்.

    ஐபிஎல் தொடர் நவம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை தொடர் நடைபெறுகிறது.

    ஐபிஎல் போட்டிக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கும் இடையில் 17 நாட்களே உள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா சென்ற தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் துபாயில் இருந்து இந்திய அணி அப்படியே ஆஸ்திரேலியா புறப்படுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கான புஜாரா, விஹாரி ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், பவுலிங் கோச்சர் பரத் அருண், பீல்டிங் கோச்சர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் ஈடுபடவில்லை.

    இவர்கள் அனைவரும் நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டனர். இவர்கள் இன்று துபாயில் சென்றடைந்து 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் வழக்கான கொரோனா பரிசோதனைக்குப்பின் ஐபிஎல் போட்டிக்கிடையே பயிற்சியில் கலந்து கொள்வார்கள். ஆனால் ஐபிஎல் பயோ-பப்பிள் இடத்திற்குள் அனுமதிகப்படமாட்டார்கள்.

    பின்னர் ஆஸ்திரேலியா செல்லும் அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
    விராட் கோலியுடன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடிய இந்தி வீரர தான்மே ஸ்ரீவாஸ்தவா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.

    அந்த வெற்றி அணியில் இடம் பிடித்தவர் இடது கை பேட்ஸ்மேன் தான்மே ஸ்ரீவாஸ்தவா. உலக கோப்பை  வெற்றிக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் 30 வயதான இடது கை பேட்ஸ்மேனான ஸ்ரீவாஸ்தவா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    விராட் கோலி தலைசிறந்த வீரராகியுள்ள நிலையில், அவருடன் விளையாடிய மற்றொரு வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடாத ரோகித் சர்மா, மேலும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று டி காக் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 23-ந்தேதி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, ரோகித் சர்மாவிற்குப் பதிலாக பொல்லார்ட் டாஸ் கேட்க வந்தார். அப்போதுதான் ரோகித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் (ஹாம்ஸ்டிரிங்) காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த போட்டியில் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் ரோகித் சர்மா விளையாடவில்லை. இதனால் ரோகித் சர்மா எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் ரோகித் சர்மா காயம் குறித்து மும்பை அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க பேட்ஸ்மேனும் ஆன குயின்டான் டி காக் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா அவரது சிறந்த ஆட்டத்துடன் அணிக்கு திரும்புவார். அணிக்கு திரும்புவதற்கான உறுதியான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை. அவர் நன்றாக இருக்கிறார். நீங்கள் எப்போது தயாராகுவீர்கள் என்று அவரிடம் கேட்க முடியாது. ஏனென்றால், எனக்கு அதுகுறித்து தெரியாது. அவர் நான்றாக இருப்பது காயத்தில் இருந்து விரைவாக திரும்பி வருகிறார் என்பதை காட்டுகிறது’’ என்றார்.

    இதனால் 28-ந்தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? என்பது சந்தேகமே.
    எட்டாவது வெற்றியை ருசித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாமல் ஆர்சிபி, மும்பை, டெல்லி அணிகள் தவிக்கின்றன.
    ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பாயின்ட் டேபிளில் முதல் இடம் பிடிப்பது யார்? என்பதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    தற்போது இந்த இரண்டு அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் போட்டியிடுகிறது. மூன்று அணிகளும் முதல் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றிருந்தது.

    முதல் 10 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே-ஆஃப்ஸ் சுற்றை நெருங்கிவிட்டது. எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விடலாம்.

    நேற்று முன்தினம் டெல்லி அணி தனது 11-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ள டெல்லியை துவம்சம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதனால் ஆறு வெற்றிகளுடன் கொல்கத்தாவும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு சண்டையிடுகிறது.

    நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தது.

    2-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்  செய்த மும்பை 195 ரன்கள் எடுத்தது. இதனால் எளிதாக வெற்றி பெறும் என நினைக்கையில் பென் ஸ்டோக்ஸ் அதரடியாக விளையாடி சதம் அடிக்க மும்பை தோல்வியை சந்தித்துள்ளது.

    ஆர்சிபி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றது. ஆனால் மும்பை, டெல்லி கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11-ல் 4-ல் வெற்றி பெற்று 7-வது இடத்திலும், சென்னை 12-ல் நான்கில் வெற்றி பெற்று கடைசி இடத்திலும் உள்ளது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியன் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஒருவேளை சிஎஸ்கே-வுக்கு பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
    ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து சீசனில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

    ஆனால் இந்த முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 11 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இருந்தாலும் மற்ற அணிகளின் வெற்றித் தோல்வியை கணக்கிட்டு சென்னை அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 6 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது.

    நேற்று ஆர்சிபி அணியை வீழ்த்தியிருந்தது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.

    நேற்றைய போட்டிக்கு முன்

    1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.

    2. கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தாவை இன்றைய போட்டியில் வீழ்த்த வேண்டும். கடைசி இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும்.

    3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது தோற்க வேண்டும். அதுவும் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில்.

    4. ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.

    ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் வீழ்த்தியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக இல்லாமல் போய்விட்டது. 
    சி.எஸ்.கே.வுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் 200-வது சிக்சரை அவர் எட்டியுள்ளார்.


    சி.எஸ்.கே.வுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஒரு சிக்சர் அடித்தார். ஐ.பி.எல் போட்டியில் அவரது 200-வது சிக்சர் ஆகும். 180-வது இன்னிங்சில் அவர் இதை எடுத்தார்.

    200-வது சிக்சர் அடித்த 5-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் டோனி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்கள் வருமாறு:-

    1. கிறிஸ் கெய்ல் - 336 சிக்சர்

    2. டிவில்லியர்ஸ் - 231

    3. டோனி - 216

    4. ரோகித் சர்மா - 209

    5. விராட் கோலி - 200

    மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

    சார்ஜா:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியின் 46-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிலைமை அந்த அணிக்கு உள்ளது.

    கொல்கத்தா அணி ஏற்கனவே 2 ரன்னில் பஞ்சாப்பை தோற்கடித்து இருந்தது. இதனால் மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பஞ்சாப் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றி இன்றும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பஞ்சாப்புக்கு உள்ளது. கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காணும். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். இதன் காரணமாக போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் கொல்கத்தா 18-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), இந்த முறை பிளே ஆப் சுற்றில்கூட நுழையாமல் வெளியேறியது. 

    நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை கணக்கில் வைத்து, பிளே ஆப் வாய்ப்பு ஓரளவு இருந்தது. ஆனால் அதன்பின்னர் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி  பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்துள்ளது. இதனால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. சென்னை அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்த தோல்வியைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிஎஸ்கே கேப்டன் டோனியின் மனைவி சாக்சி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். 

    அதில், ‘இது வெறும் விளையாட்டு ... சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சில போட்டிகளில் தோல்வி அடையலாம்,  யாரும் தோல்வி அடைய விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது. உண்மையான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸ்-களாக இருப்பார்கள் என உணர்வுப்பூர்வமாக’ கூறியிருக்கிறார்.

    சாக்சியின் இந்த கவிதையை சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
    பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டி காக் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 37 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிந்தார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    உத்தப்பா 17 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது ராஜஸ்தான் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென்ஸ்டோக்சுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் சதமடித்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோக்ஸ் 107 ரன்னும், சஞ்சு சாம்சன் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இது ராஜஸ்தான் அணி பெற்ற 5வது வெற்றி ஆகும்.
    ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டிகள் துபாய் மற்றும் அபு தாபி மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. எட்டு அணிகள் மோதும் 56 லீக் ஆட்டங்கள் ஷார்ஜா, துபாய், அபு தாபி நகரங்களில் நடைபெற்று வருகின்றன. லீக் ஆட்டங்கள் நவம்பர் 3-ந்தேதி முடிவடைகிறது.

    10-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுகள் எங்கே? இறுதிப் போட்டி எங்கே? என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    நவம்பர் 5-ந்தேதி குவாலிபையர்-1 (பாயின்ட் டேபிளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்) துபாயில் நடைபெறுகிறது.

    நவம்பர் 6-ந்தேதி எலிமினேட்டர் (3-வது மற்றும் 4-வது இடம் பெறும் அணிகள்) அபு தாபியில் நடக்கிறது.

    நவம்பர் 8-ந்தேதி குவாலிபையர் 2 (குவாலிபையர் 1 தோல்வி - எலிமினேட்டர் வெற்றி) அபு தாபியில் நடக்கிறது.

    நவம்பர் 10-ந்தேதி (குவாலிபையர் 1 வெற்றி - குவாலிபையர் 2 வெற்றி) இறுதிப் போட்டி நடக்கிறது.
    ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 60 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குயின்டான் டி காக், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டி காக் 6 ரன்னில் ஆர்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷன்  உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இஷான் கிஷன் அடக்கி வாசித்தார். ஸ்கோர் 10.4 ஓவரில் 90 ரன்னாக இருக்கும்போது இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 12.2 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்தது.

    இறுதியில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் மழை பொழிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அபு தாபியில் நடக்கும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    காயம் காரணமாக இந்த போட்டியிலும் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. கவுல்டர் நைலுக்குப்பதில் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    மும்பை இந்தியன்ஸ் அணி:

    1. குயின்டான் டி காக், 2. இஷான் கிஷன், 3.சூர்யகுமார் யாதவ், 4. சவுரப் திவாரி,  5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

    1. ராபின் உத்தப்பா, 2. பென் ஸ்டோக்ஸ், 3. சஞ்சு சாம்சன், 4. ஜோஸ் பட்லர்,  5. ஸ்டீவ் ஸ்மித், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் அய்யர், 10. அங்கித் ராஜ்பூட், 11. கார்த்திக் தியாகி.
    ×