என் மலர்
விளையாட்டு
துபாயில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பேட்டிங் தேர்வு செய்தது.
விராட் கோலி 50 ரன்களும், டி வில்லியர்ஸ் 39 ரன்களும் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.
பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.
சென்னை அணி 5.1 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். அடுத்து டோனி களம் இறங்கினார்.
ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ரன்களும், எம்எஸ் டோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியால் ஆர்சிபி-யின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.
விராட் கோலி அரைசதமும், டி வில்லியர்ஸ் 39 ரன்கள் அடித்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3.5 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவ்தத் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது ஆர்சிபி 6.1 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த நீண்ட நேரம் களத்தில் நின்றாலும் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 17.3 ஓவரில் 128 ரன்கள் எடுத்திருக்கும்போது ஏபிடி 36 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி 68 பந்தில் 82 ரன்களே எடுத்தது. 19-வது ஓவரில் அரைசதம் அடித்த விராட் கோலி அந்த ஓவரின் கடைசி பந்தில் 43 பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி ஓவரில் தீபக் சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தி 7 ரன்கள் கொடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களே அடித்துள்ளது.
சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆர்சிபி அணிக்கெதிராக டாஸ் தோற்ற எம்எஸ் டோனி, கூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் நீக்கப்பட்டு மோனு குமார், சான்ட்னெர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ் தோற்ற டோனி கூறும்போது ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதற்குக் காரணம் இந்த ஆடுகளம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை வைத்துதான் கூறுகிறேன். கூட்டி கழித்துப் பார்த்தால் (Mathematically) எங்களுக்கு இன்னும் பிளே ஆப்ஃஸ் வாய்ப்புள்ளது. இந்த சீசனை நாங்கள் எப்படி முடிக்கிறோம் என்பதை பற்றிதான் நீங்கள் நினைக்க வேண்டும்.
நாங்கள் நான்கு ஐந்து போட்டிகள் இருந்த போதிலும், நாங்கள்அந்த ஒரு போட்டியை மட்டுமே கணக்கில் எடுத்து விளயைாடுவோம். பாயின்ட் டேபிள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் அது தானாகவே கவனித்துக்கொள்ளும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பார்க்கிறோம். இன்று சான்ட்னெர், மோனு குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
துபாயில் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் துபாயில் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் நீக்கப்பட்டு மோனு குமார், சான்ட்னெர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆர்சிபி அணி:
1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி விலலியர்ஸ், 5. மொயீன் அலி, 6. குர்கீரத் சிங் மான், 7. கிறிஸ் மோரிஸ், 8. வாஷிங்டன் சுந்தர், 9. நவ்தீச் சைனி, 10. முகமது சிராஜ், 11. சஹல்.
சென்னை அணி:
1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு, 4. ஜெகதீசன், 5. எம்எஸ் டோனி, 6. சாம் கர்ரன், 7. ஜடேஜா, 8. மிட்செல் சான்ட்னெர், 9. தீபக் சாஹர், 10. இம்ரான் தாஹிர், 11. மோனு குமார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பாயின்ட் டேபிளில் தொடர்ந்து முதல் இடத்தில் நீட்டிக்க மும்பை இந்தியன்ஸ் விரும்பும்.
11 ஆட்டங்களில் 4 வெற்றி, 7 தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிட்டும். உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ஆட்டங்களில் களம் கண்டு ஒரு அரைசதம் கூடஅடிக்கவில்லை.
அவர் வாணவேடிக்கை காட்டியிருந்தால் சில ஆட்டங்களில் ராஜஸ்தான் வாகை சூடியிருக்கும். ஜாஃப்ரா ஆர்சர் (15 விக்கெட்) தவிர மற்றவர்களின் பந்து வீச்சு மெச்சும்படி இல்லை. தரமான பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள ராஜஸ்தான் அணி திறமைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து ஆடினால் சாதிக்கலாம்.
நடப்பு சாம்பியனான மும்பை அணி 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை நெருங்கி விட்டது. பேட்டிங், பந்து வீச்சில் அசுர பலத்துடன் விளங்கும் மும்பை அணி, கடந்த ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை ஊதித்தள்ளியது.

டிரென்ட் பவுல்ட், பும்ராவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. இந்த புயல்வேக பந்து வீச்சாளர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 33 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்கள். தசைப்பிடிப்பால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா களம் திரும்புவார் என்று தெரிகிறது.
ஒருவேளை உடல்தகுதியை எட்டாவிட்டால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுவார். பாண்ட்யா, டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பும்ரா, பொல்லார்ட், பவுல்ட் என்று பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய மும்பை அணியின் ஆதிக்கம் இந்த ஆட்டத்திலும் தொடர அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது நினைவு கூரத்தக்கது.
இன்று மதியம் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 44-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. ஆர்சிபி 10 போட்டியில் 7-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே-வை வீழ்த்தினால் பிளே ஆஃப்ஸ் சுற்றை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும்.
சென்னை அணிக்கு நூல் போன்ற பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அணியை வைத்து அதை செய்ய முடியுமா? என்பதுதான் மேட்டர். ராஜஸ்தானுக்கு எதிரான படுதோல்விக்கு பிறகாவது வாழ்வா? சாவா? போட்டியில் வீழ்ச்சி பெறும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. 11-வது போட்டியில் மும்பைக்கு எதிராக மேலும் ஒரு பேரிடி.
2-வது போட்டியிலேயே இருந்து நீச்சல் தெரியாதவன் ஆற்றில் விழுந்தால் கையில் கிடைக்கும் எதையாவது பிடித்து கரை சேர நினைப்பவன் நிலைக்கு தள்ளப்பட்டார் கேப்டன் டோனி.
முரளி விஜய், லுங்கி நிகிடியுடன் களம் இறங்கினார். முதல் போட்டியில் வெற்றி கிடைத்ததால் எந்த பிரச்சினையும் இல்லை. 2-வது போட்டியில் இரண்டு பேரும் சொதப்பல். ராஜஸ்தான் வீரர் ஆர்சர் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸ் அடித்து லுங்கி நிகிடிக்கு ஆப்பு வைத்தார். இதனால் 3-வது போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக லுங்கி நிகிடியை மாற்றி ஹசில்வுட் எடுத்தார். அதிலும் தோல்வி.
ஐதராபாத் அணிக்கு எதிராக 4-வது போட்டியில் ஹசில்வுட், முரளி விஜய் அதிரடி நீக்கம். வெயின் பிராவோ, ஷர்துல் தாகூர் அணிக்கு திரும்பினர். டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக மாற்றப்பட்டார். அப்போதும் பலன் இல்லை.
ஐந்தாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி கிடைத்தது. இந்த காம்பினேசன் மாற்றப்படாது என டோனி கூறியதால் சரியான திட்டத்துடன் சிஎஸ்கே களம் இறங்கும் என ரசிகர்கள உற்சாகம் அடைந்தனர்.
அடுத்த போட்டியிலேயே கொல்கத்தாவிற்கு எதிராக தோல்வி. கடும் விமர்சனத்தால் ஆர்சிபிக்கு எதிரான 7-வது போட்டியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. முதல் பாதி தொடரில், அதாவது ஏழு போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம்.
8-வது போட்டியில் கேதர் ஜாதவும் வேண்டாம், ஜெகதீசனும் வேண்டாம் என கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்தார். தொடக்க வீரராக சாம் கர்ரன் களம் இறக்கப்பட்டார். இதற்கு பலன் கிடைத்து சென்னை வெற்றி பெற்றது.
உடனடியாக 9-வது போட்டியில் மீண்டும் கேதர் ஜாதவ், அணி சொதப்பல். தோல்வி. 10-வது போட்டியில் காயத்தால் பிராவோ விலகல். ஹசில்வுட் சேர்ப்பு. 125 ரன்கள் எடுத்து படுதோல்வி.
மும்பைக்கு எதிராக ஜெகதீசன், ருத்துராஜ், இம்ரான் தாஹிர் என மாற்றம். ருத்துராஜ் ஓபனிங். சாம் கர்ரன் 7-வது இடத்தில் பேட்டிங். இதற்கும் பலன் இல்ல்லை. 114 ரன்களே எடுத்து, 10 விக்கெட்டில் படுதோல்வி. என்னென்னவோ செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லாமல் போனது.
இதனால் கேப்டன் பதவியை விட்டுவிட்டு ஓடி விடுவீர்களா? என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் எம்எஸ் டோனி. மும்பை தோல்விக்குப் பிறகு அணியின் எதிர்காலம் குறித்து டோனி பேசியதில் இருந்து இந்தத் தொடர் அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
ஒருவேளை ஆர்சிபியை ஜெயித்தால் அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நெட்ரன்ரேட் அதிகமாக வைத்திருந்தால் ஒருவேளை பார்க்கலாம். இவர்கள் விளையாடுவதை பார்க்கும்போது அதற்கு வாய்ப்பில்லை.

முதல் பாதியில் தீபக் சாஹர் சொதப்பல், டெத் ஓவர் தோல்வி சிஎஸ்கே-வுக்கு பெருத்த அடி கொடுத்தது. அதில் இருந்து மீள முடியாமல் போனது. பேட்ஸ்மேன்கள் 100 ரன்கள் அடித்தால் என்ன? 90 ரன்னுக்குள் எதிரணியை மடக்கும்வோம் என எந்த பந்து வீச்சாளரும் மார்தட்ட கூடிய அளவிற்கு இல்லாமல் போய்விட்டனர்.
சென்னையிடம் தோல்வியடைந்தாலும் ஆர்சிபி-க்கு மிகப்பெரிய தாக்கம் இருக்காது. அடுத்த 3 போட்டிகளில் ஒன்றில் ஜெயித்தால் போதும்.
ஏற்கனவே சென்னையை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையில் ஆர்சிபி களம் இறங்கும். ஆர்சிபி-யின் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் நெருக்கடியை மிகப்பெரிய அளவில் குறைத்தவர் தேவ்தத் படிக்கல். தொடக்க வீரராக களம் இறங்கிய இளம் வீரரான தேவ்தத் படிக்கல் போட்டிக்கு போட்டி தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். 10 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 321 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 32.10 வைத்துள்ளார்.
விராட் கோலி (365), டி வில்லியர்ஸ் (285) ஃபார்ம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஆரோன் பிஞ்ச் சப்போர்ட் கிடைத்தால் ரன் மழைதான்.
கிறிஸ் மோரிஸ் (5 போட்டியில் 9 விக்கெட்) அந்த அணிக்கு தூண். நவ்தீப் சைனி வேகம், முகமது சிராஜ் துல்லியம், சாஹலின் (15) விக்கெட் வீழ்த்தும் தன்னம்பிக்கை, வாஷிங்டன் சுந்தரின் பவர் பிளே ஸ்பெல் அந்த அணிக்கு பக்க பலம். போட்டி துபாயில் நடப்பால் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து சிக்சருக்கு போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி, போர்டிமாவ் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது
போர்டிமாவ்:
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுக்கலில் அரங்கேறும் இந்த பந்தயத்தில் 306.826 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வதற்கு தயாராக உள்ளனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) இந்த சீசனில் 7 பந்தயங்களில் வெற்றி பெற்றிருப்பதுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் 230 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இன்றைய பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றால் ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் அதிக வெற்றி (91 வெற்றி) சாதனையை முறியடித்து விடுவார்.
தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடம் பிடித்ததால் இன்றைய ரேசில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும்.
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 12-வது சுற்றான போர்ச்சுக்கல் கிராண்ட்பிரி அங்குள்ள போர்டிமாவ் ஓடுதளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுக்கலில் அரங்கேறும் இந்த பந்தயத்தில் 306.826 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்வதற்கு தயாராக உள்ளனர். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) இந்த சீசனில் 7 பந்தயங்களில் வெற்றி பெற்றிருப்பதுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் 230 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இன்றைய பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றால் ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் அதிக வெற்றி (91 வெற்றி) சாதனையை முறியடித்து விடுவார்.
தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடம் பிடித்ததால் இன்றைய ரேசில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும்.
துபாயில் நடைபெற்ற ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர்.
மந்தீப் சிங் 17 ரன், கிறிஸ் கெயில் 20 ரன், கேஎல் ராகுல் 27 ரன், மேக்ஸ்வெல் 12 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் வந்த தீபக் ஹூடா, கிரிஸ் ஜோர்டனும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஜேசன் ஜோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.
வார்னர் 35 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 19 ரன்னிலும் அவுட்டாகினர். அப்துல் சமத் 7 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய மணீஷ் பாண்டே 15 ரன்னிலும், விஜயசங்கர் 26 ரன்னிலும் ஜேசன் ஹோல்டர் 5 ரன்னிலும் அவுட்டாகினர். ரஷீத் கான், சந்தீப் சர்மா டக் அவுட்டாகினர்.
இறுதியில் ஐதராபாத் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 5-வது வெற்றி ஆகும்.
பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கிங்ஸ் வெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர். 14 பந்தில் 17 ரன்கள் எடுத்திருந்த மந்தீப் சிங் ஐதராபாத் வீரர் சந்தீப் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் 20 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 27 பந்தில் 27 ரன் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 13 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, கிரிஸ் ஜோர்டன் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிக்கோலஸ் பூரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஜேசன் ஜோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கிங்ஸ் வெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்து வருகிறது. 2 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் வீரர்கள் விவரம்:-
கேஎல் ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், கிரிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின், கிரிஸ் ஜோர்டன், முகமது ஷமி, ரவி பிஷோனி, அஷ்தீப் சிங்
ஐதராபாத் வீரர்கள் விவரம்:-
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பிரேஷ்டோவ், மணீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியம் ஹர், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், கலீல் அகமது, சந்தீப் சர்மா, நடராஜன்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ரன்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ரன்கள் எடுத்த நிலையில் நார்ட்ஜி பந்ஹ்டு வீச்சில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ரன்னில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ரன்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். கம்மின்ஸ்
வீசிய முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபுள்யூ முறையில் ரஹானே(0) வெளியேறினார்.
அடுத்து டெல்லி அணியின் கேப்டர் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ரன் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த ரிஷப் பண்ட் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை சந்தித்த பண்ட் 27 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ரன் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால், டெல்லி அணி 13.2 ஓவரில் 95 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களை வீசி 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.
அபுதாபி:
ஐபிஎல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்த கில் 9 ரன்களில் நார்ட்ஜி பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த ராகுல் திரிபாதியும் 13 ரன்கள் எடுத்த நிலையில் நார்ட்ஜி பந்ஹ்டு வீச்சில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 ரன்னில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ரன்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் நார்ட்ஜி, ரபாடா, ஸ்டாய்னஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.






