search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?

    விராட் கோலி அரைசதமும், டி வில்லியர்ஸ் 39 ரன்கள் அடித்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3.5 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஆரோன் பிஞ்ச் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவ்தத் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது ஆர்சிபி 6.1 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த நீண்ட நேரம் களத்தில் நின்றாலும் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 17.3 ஓவரில் 128 ரன்கள்  எடுத்திருக்கும்போது ஏபிடி 36 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டு பிளிஸ்சிஸ்

    விராட் கோலி - ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி 68 பந்தில் 82 ரன்களே எடுத்தது. 19-வது ஓவரில் அரைசதம் அடித்த விராட் கோலி அந்த ஓவரின் கடைசி பந்தில் 43 பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி ஓவரில் தீபக் சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தி 7 ரன்கள் கொடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களே அடித்துள்ளது.

    சென்னை அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    Next Story
    ×