search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ருத்துராஜ், எம்எஸ் டோனி
    X
    ருத்துராஜ், எம்எஸ் டோனி

    ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

    துபாயில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
    ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பேட்டிங் தேர்வு செய்தது.

    விராட் கோலி 50 ரன்களும், டி வில்லியர்ஸ் 39 ரன்களும் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்தது.

    பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.

    சென்னை அணி 5.1 ஓவரில் 46 ரன்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். அடுத்து டோனி களம் இறங்கினார்.

    ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ரன்களும், எம்எஸ் டோனி 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியால் ஆர்சிபி-யின் பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.
    Next Story
    ×