search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிஎஸ்கே வீரர்கள்
    X
    சிஎஸ்கே வீரர்கள்

    சிஎஸ்கே-வை வீழ்த்தி பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதிப்படுத்துமா ஆர்சிபி?

    இன்று மதியம் துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஐபிஎல் தொடரின் 44-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. ஆர்சிபி 10 போட்டியில் 7-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே-வை வீழ்த்தினால் பிளே ஆஃப்ஸ் சுற்றை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும்.

    சென்னை அணிக்கு நூல் போன்ற பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அணியை வைத்து அதை செய்ய முடியுமா? என்பதுதான் மேட்டர். ராஜஸ்தானுக்கு எதிரான படுதோல்விக்கு பிறகாவது வாழ்வா? சாவா? போட்டியில் வீழ்ச்சி பெறும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை. 11-வது போட்டியில் மும்பைக்கு எதிராக மேலும் ஒரு பேரிடி.

    2-வது போட்டியிலேயே இருந்து நீச்சல் தெரியாதவன் ஆற்றில் விழுந்தால் கையில் கிடைக்கும் எதையாவது பிடித்து கரை சேர நினைப்பவன் நிலைக்கு தள்ளப்பட்டார் கேப்டன் டோனி.

    முரளி விஜய், லுங்கி நிகிடியுடன் களம் இறங்கினார். முதல் போட்டியில் வெற்றி கிடைத்ததால் எந்த பிரச்சினையும் இல்லை. 2-வது போட்டியில் இரண்டு பேரும் சொதப்பல். ராஜஸ்தான் வீரர் ஆர்சர் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸ் அடித்து லுங்கி நிகிடிக்கு ஆப்பு வைத்தார். இதனால் 3-வது போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக லுங்கி நிகிடியை மாற்றி ஹசில்வுட் எடுத்தார். அதிலும் தோல்வி. 

    ஐதராபாத் அணிக்கு எதிராக 4-வது போட்டியில் ஹசில்வுட், முரளி விஜய் அதிரடி நீக்கம். வெயின் பிராவோ, ஷர்துல் தாகூர் அணிக்கு திரும்பினர். டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரராக மாற்றப்பட்டார். அப்போதும் பலன் இல்லை.

    ஐந்தாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி கிடைத்தது. இந்த காம்பினேசன் மாற்றப்படாது என டோனி கூறியதால் சரியான திட்டத்துடன் சிஎஸ்கே களம் இறங்கும் என ரசிகர்கள உற்சாகம் அடைந்தனர்.

    அடுத்த போட்டியிலேயே கொல்கத்தாவிற்கு எதிராக தோல்வி. கடும் விமர்சனத்தால் ஆர்சிபிக்கு எதிரான 7-வது போட்டியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டார். ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. முதல் பாதி தொடரில், அதாவது ஏழு போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம்.

    8-வது போட்டியில் கேதர் ஜாதவும் வேண்டாம், ஜெகதீசனும் வேண்டாம் என கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்தார். தொடக்க வீரராக சாம் கர்ரன் களம் இறக்கப்பட்டார். இதற்கு பலன் கிடைத்து சென்னை வெற்றி பெற்றது.

    உடனடியாக 9-வது போட்டியில் மீண்டும் கேதர் ஜாதவ், அணி சொதப்பல். தோல்வி. 10-வது போட்டியில் காயத்தால் பிராவோ விலகல். ஹசில்வுட் சேர்ப்பு. 125 ரன்கள் எடுத்து படுதோல்வி.

    மும்பைக்கு எதிராக ஜெகதீசன், ருத்துராஜ், இம்ரான் தாஹிர் என மாற்றம். ருத்துராஜ் ஓபனிங். சாம் கர்ரன் 7-வது இடத்தில் பேட்டிங். இதற்கும் பலன் இல்ல்லை. 114 ரன்களே எடுத்து, 10 விக்கெட்டில் படுதோல்வி. என்னென்னவோ செய்து பார்த்தும் எந்த பலனும் இல்லாமல் போனது.

    இதனால் கேப்டன் பதவியை விட்டுவிட்டு ஓடி விடுவீர்களா? என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் எம்எஸ் டோனி. மும்பை தோல்விக்குப் பிறகு அணியின் எதிர்காலம் குறித்து டோனி பேசியதில் இருந்து இந்தத் தொடர் அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

    ஒருவேளை ஆர்சிபியை ஜெயித்தால் அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நெட்ரன்ரேட் அதிகமாக வைத்திருந்தால் ஒருவேளை பார்க்கலாம். இவர்கள் விளையாடுவதை பார்க்கும்போது அதற்கு வாய்ப்பில்லை.

    ஆர்சிபி அணி வீரர்கள்

    முதல் பாதியில் தீபக் சாஹர் சொதப்பல், டெத் ஓவர் தோல்வி சிஎஸ்கே-வுக்கு பெருத்த அடி கொடுத்தது. அதில் இருந்து மீள முடியாமல் போனது. பேட்ஸ்மேன்கள் 100 ரன்கள் அடித்தால் என்ன? 90 ரன்னுக்குள் எதிரணியை மடக்கும்வோம் என எந்த பந்து வீச்சாளரும் மார்தட்ட கூடிய அளவிற்கு இல்லாமல் போய்விட்டனர்.

    சென்னையிடம் தோல்வியடைந்தாலும் ஆர்சிபி-க்கு மிகப்பெரிய தாக்கம் இருக்காது. அடுத்த 3 போட்டிகளில் ஒன்றில் ஜெயித்தால் போதும்.

    ஏற்கனவே சென்னையை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையில் ஆர்சிபி களம் இறங்கும். ஆர்சிபி-யின் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் நெருக்கடியை மிகப்பெரிய அளவில் குறைத்தவர் தேவ்தத் படிக்கல். தொடக்க வீரராக களம் இறங்கிய இளம் வீரரான தேவ்தத் படிக்கல் போட்டிக்கு போட்டி தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். 10 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 321 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 32.10 வைத்துள்ளார்.

    விராட் கோலி (365), டி வில்லியர்ஸ் (285) ஃபார்ம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஆரோன் பிஞ்ச் சப்போர்ட் கிடைத்தால் ரன் மழைதான்.

    கிறிஸ் மோரிஸ்  (5 போட்டியில் 9 விக்கெட்) அந்த அணிக்கு தூண். நவ்தீப் சைனி வேகம், முகமது சிராஜ் துல்லியம், சாஹலின் (15) விக்கெட் வீழ்த்தும் தன்னம்பிக்கை, வாஷிங்டன் சுந்தரின் பவர் பிளே ஸ்பெல் அந்த அணிக்கு பக்க பலம். போட்டி துபாயில் நடப்பால் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து சிக்சருக்கு போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை.
    Next Story
    ×