search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா எப்போது திரும்புவார்?

    சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடாத ரோகித் சர்மா, மேலும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று டி காக் தெரிவித்துள்ளார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 23-ந்தேதி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டபோது, ரோகித் சர்மாவிற்குப் பதிலாக பொல்லார்ட் டாஸ் கேட்க வந்தார். அப்போதுதான் ரோகித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் (ஹாம்ஸ்டிரிங்) காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த போட்டியில் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராகவும் ரோகித் சர்மா விளையாடவில்லை. இதனால் ரோகித் சர்மா எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் ரோகித் சர்மா காயம் குறித்து மும்பை அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க பேட்ஸ்மேனும் ஆன குயின்டான் டி காக் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா அவரது சிறந்த ஆட்டத்துடன் அணிக்கு திரும்புவார். அணிக்கு திரும்புவதற்கான உறுதியான காலக்கெடுவை அவர் தெரிவிக்கவில்லை. அவர் நன்றாக இருக்கிறார். நீங்கள் எப்போது தயாராகுவீர்கள் என்று அவரிடம் கேட்க முடியாது. ஏனென்றால், எனக்கு அதுகுறித்து தெரியாது. அவர் நான்றாக இருப்பது காயத்தில் இருந்து விரைவாக திரும்பி வருகிறார் என்பதை காட்டுகிறது’’ என்றார்.

    இதனால் 28-ந்தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? என்பது சந்தேகமே.
    Next Story
    ×